...

7 views

மென் காதல் கதை
கண்ணு 10 நம்பர்
ரூம்ல இருக்க மலர வரச் சொல்லுமா...
எதுக்கு வரச்சொல்ரிங்க சொல்லுங்க
ஏதும் சொல்லனுமா!?!?
இல்லை ஏதும் பிரச்சனையா!?!? சொல்லுங்க வேற ஏதும் பிரச்சனையா!?!
பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்ல கண்ணு
அந்த பாப்பாவுக்கு டீ ரொம்ப பிடிக்கும்
சுடச்சுட இருக்கும் போதே
ஜம்முனு குடிக்கட்டும்....
பாவம் அது......

ஓஹோ அப்டியா!?!?
அப்போ எங்களுக்கு மட்டும் ஆறிப்
போனதா என்று சிரித்துக் கொண்டே
சென்றார்கள் கார்த்திகா மற்றும்
பிரியங்கா....

டக் டக்...
டக்
டக்
டக் டக் டக்
ஏய் என்னடி இவ
இத்தனை முறை கதவை
தட்டியும் பதில் சொல்லாம இருக்கா.... ரூம் உள்ள
இருக்கிறாளா இல்லையான்னு போய் பாரு முதல்ல...
ஏய் ஜன்னல் எல்லாம் பூட்டி இருக்குடி...
ஆனால் பேன் ஓடுற சவுண்ட் கேக்குதடி உள்ளதான் இருக்கா...
அப்புறம் ஏன் கதவ திறக்க மாட்டேங்கிறா..
சரி விடு நல்லா தூங்குற போல இருக்கு . நம்ம ரூமுக்கு போயிட்டு கால் பண்ணி கூப்பிடுவோம்...

ஹலோ..என்னடி மலரே நல்ல தூக்கமா எவ்ளோ நேரம் நின்னு ரூம் கதவை தட்டிக்
கிட்டே இருக்கோம் வரமாட்டியா நீ வெளியில

ஏய் சாரிடி நேத்து நைட் நைட் டியூட்டி
ரொம்ப லேட்டா தான் வந்தேன் ...இன்னுமே தூக்கம் வருது சொல்லுடி எதுக்கு போன் பண்ணின...

உன்னைய கீழ வர சொன்னாங்க
டீ குடிக்கிறதுக்கு... நீ சூடா தான் குடிப்பியா மே...
போமா கண்ணு போ போயி டீ ய குடிச்சிட்டு வந்துட்டு அப்புறம் மேல் படுத்து தூங்கு....

இதுக்கு தான் போன் பண்ணு நீங்களா....
சரி நான் போறேன்
...பை...
மென்மையான வெண்மை மற்றும் இளம் ரோஜா நிற நைட்டியை அணிந்திருந்தாள்..
முகம் அலம்பிக் கொண்டு
நெற்றியில் சிறியதாக ஒரு புள்ளியை வைத்துக்கொண்டதைப்
போன்று நினைத்து
கலைந்து போன கூந்தலை
மீண்டும் கலைத்து அள்ளி முடிக்காமல் அவ்
அழகிலே
கையிலே டம்ளரை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினாள்...
பார்க்க அவ்வளவு அழகு
அவள் தூக்கம் கலையாத முகம் ஆயினும் குழந்தைத்தனம் அவ்வளவு ஒட்டியிருந்தது அவளிடம்..

அக்கா எதுக்கு வர சொன்னிங்க நான் வந்து குடிப்பேன் ல எதுக்கு ஆளு கிட்ட எல்லாம் சொல்லி விடுறீங்க டீ குடுங்க எனக்கு... என்றாள்...

இல்ல கண்ணு நீ சூடா குடிப்பியே அது நால
தான் வர சொன்னேன்....
சரி சரி சரி சரி வந்தாச்சு வந்தாச்சு
இது சூடா உங்களுக்கு சூடே இல்லை

என்று சொல்லி முகம் சுளுக்கிக் கொண்டாள்...

அளவில் கொஞ்சம் பெரிய டம்ளர்...
அதை கையில் எடுத்துக் கொண்டு
Front கேட் வரை வந்து ஏதோ யோசித்து டீ குடித்துக் கொண்டே நின்றாள்.....

அரைப்பகுதி குடித்து முடித்தவுடன்
கேட்டின் முன்பு ஒரு இருசக்கர வாகனம் ஒன்று வந்து நின்றது....
சட்டென்று என்ன நினைத்தாலோ தெரியவில்லை உள்ளே சென்று
டிவி பார்க்க அமர்ந்து விட்டாள்...
அந்த வாகனத்தில் இருந்து ஒருவர் இறங்கி
உள்ளே வந்தார்...
அங்கு முகப்பின் முன்னே அமர்ந்திருந்த ஒருவர் யார் நீங்க என்ன வேணும்!?!
யாரைப் பார்க்கணும் என்று கேட்டதும் கார்த்திகாவையும் பிரியங்காவையும் பாக்கணும் நான் அவுங்க அண்ணா என்று சொன்னார்....

கீழே இருந்து கார்த்திகாவையும் பிரியங்காவையும் அழைத்தாள் முகப்பில் பணி செய்யும் பெண்....
அவளது கணீர் குரலில்....
ஏய் வாங்கடி என்று.....

இருவரும் வேகமாக படிக்கட்டில் இருந்து இறங்கி வந்து அக்கா சொல்லுங்க அக்கா என்று கேட்டனர்... உங்களை பாக்குறதுக்கு யாரோ வந்து இருக்காங்க போய் பாருங்க
யாரு என்னன்னு...

டக்குனு வேகமா பேசிட்டு அனுப்பிடுங்க ரொம்ப நேரம் இருக்கக் கூடாது சரியா சொல்றது கேக்குதா...
என்றாள் அப் பெண்...

சரிங்க கா கேக்குது அக்கா
என்று சொல்லியவாறு அங்கே பார்த்தனர்..
அவர்கள் இருவரினுடைய அண்ணன் அங்கே வந்திருந்தார் அவன் பெயர் "சுடர்"...

ரொம்ப அழகு என்று சொல்ல
முடியாது அழகு இல்லைன்னு
சொல்ல முடியாது..
கருத்த நிறம் தான் அவர்... கொஞ்சம்
கொள்ளை அழகு சுருட்டை முடி தடித்த மீசை...
அணிந்திருந்தது நீல நிற வண்ண சட்டையும் கருப்பு நிற பேண்டும்.....

வாங்க அண்ணா... எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா.என்று ஆரம்பித்த அவர்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்தனர்....

திடீரென்று டிவியின் சத்தம் அதிகமாக கேட்க அங்கே திரும்பிப் பார்த்தனர்..

மலர் அங்கே அமர்ந்து இருந்தாள்...
மலர் இங்கே வா என்று அழைக்க அவள் என்னன்னு சொல்லு நான் வரேன் என்றாள்..

இங்க வாடி ஒரு நிமிஷம் என் அண்ணன் வந்து இருக்காங்க இங்க வா நான் உன்னை அறிமுகம் பண்ணி வைக்கிறேன் என்று
சொல்ல நான் வரல வேண்டாம் விடு அப்படின்னு
சொல்லிவிட்டாள்....

குரல் மட்டுமே சுடர் காதில் ஒலிக்க சட்டென்று பதில் சொன்னார்...
ஹலோ வாங்க நான் ஒன்னும் உங்க டீ எல்லாம் கேட்க மாட்டேன் நீங்களே குடிங்க என்றார்....

அவளுக்கு சிரிப்பு அதிகமாக வந்ததால் சட்டென்று எழுந்து வந்தாள்...
நீங்க தான கேட்டீங்க இந்தாங்க குடிங்க டீ என்று வெறும் டம்ளரை நீட்டினாள்....

போதுமா உங்களுக்கு இந்த டீ டம்ளர் அளவு
என்று சுடர் கேட்டதும் வெட்கம் கொண்டு சிரித்தால்...

போதும் ஆனால் போதாது என்று....

டீ ரொம்ப பிடிக்கும்..ஆகையால் இவ்வளவு
பெரியது என்றால்...

இருவரின் குறும்பு பேச்சையும் ரசித்தார்கள்
அவர்கள் இருவரும்.....

இம் போதும் போதும் என்று அறிமுகம்
செய்து வைத்தார்கள் மலரை.....

சுடரிடம் ....
அண்ணா இவள் பெயர் மலர்
என் அறைக்கு பக்கத்தில் இருக்கின்றாள்
மிகவும் குறும்புக்காரி என்று....

அதுதான் தெரியுதே பார்த்தாலே என்றார்
சுடர்.....

ஓஹோ அப்டியா தெரியுது என்று
ஓர விழிப் பார்வையால் தன் அன்பை
வீசி கேள்வி எழுப்பினால்....

அவளின் விழி யோரப் பார்வையால்
மேலும் அழகனாக மாறி நின்றார் சுடர்....

சட்டென்று முகப்பு அறையில் இருந்து
வந்த மிரட்டும் குரல் மொழி கேட்டு
திடுக்கிட்டார்கள் நால்வரும்......

சரி சரி ஏதாவது வேண்டும் என்றால்
ஃபோன் பண்ணுங்க நான் வரேன்
Bye bye என்று
சொல்லிவிட்டு சுடர் வெளியில் இருந்த
Bike இல் சென்று விட்டார்.....

அவர்களும் தங்கள் அறைக்கு சென்று
விட்டார்கள்.....

மலர் அவளது அறையில் கொஞ்ச நேரம்
இருந்து துணிகளை எல்லாம் துவைத்து விட்டு
குளித்து முடித்து
கார்த்திகா பிரியங்கா அறைக்கு சென்றாள்.......

அங்கே அவர்கள் இருவரும் தொலைபேசியில்
அண்ணன் சுடரிடம் இது வேண்டும் அது
வேண்டும் என்று முகம் பார்த்து வீடியோ call
மூலமாக கொஞ்சிக் கொண்டு
இருந்தார்கள்.... இவள் ஏதும் பேசாமல்
அமைதியாக இருந்தாள்....
அவளது" ஈரக் கூந்தல் "
மற்றும்
"பொட்டு இல்லாத" அவளின் "பளீச் முகம்"
சுடருக்கு தெரிந்து தெரிந்து மறைந்தது.....

அவனின் பேச்சில் சிறு அமைதி தோன்றிட
சட்டென்று பிரியா
டேய் அண்ணா சொல்லுடா நான் சொன்னது
சரியா என்று கேட்டாள்...

என்னமா சொன்ன எது சரியா என்று
கேட்கிற மறுபடியும் இன்னும் ஒரு முறை சொல் என்றான்......

அப்போ இது வரைக்கும் சொன்னத நீ
கவனிக்கவே இல்லையா அண்ணா என்றாள்....

சிரித்து மழுப்பி விட்டான்.... இன்னும்
அவன் விழி தேடிக் கொண்டிருந்தது மலரின்
மலர் முகத்தை......

ஆனால் மலர் அமைதியாக மட்டுமே இருந்தால்
ஒரு வேளை அவளின் மௌன அழகு
அவனை மேலும் ஈர்த்திருக்க கூடும்.....

கார்த்திகா சட்டென்று என்ன மலர் இவ்வளவு
அமைதி என்றாள்....
அப்போது மட்டுமே இதழ் திறந்தாள்
நீங்க பேசிக்கிட்டு இருக்கிங்க so அமைதியா இருக்கேன் என்று......

ஓஹோ அப்டியா!!
ஆமா மலர் project பண்ணனும் அதுக்கு கொஞ்சம் things தேவை பட்டது அது தான்
அண்ணன் கிட்ட சொல்லிகிட்டு இருந்தோம்
என்றாள்....

மிகவும் கவனமாக கேட்டுக் கொண்டே
இருந்தான் ....
பிரியாவின் பேச்சை தாண்டி மெல்லியதாய்
கேட்ட மலரின் குரலை.....
சட்டென்று கார்த்திகா உனக்கு எதும் வேண்டும்
என்றால் சொல் அண்ணாவை வாங்கி வரச் சொல்கின்றேன் என்றாள்.......

யாருக்கு எனக்கா!?!
எனக்கு எதும் வேண்டாம் கார்த்திகா என்று
பதில் சொல்லிவிட்டு
சரி நீங்க பேசிட்டு இருங்க அம்மாவுக்கு
Call பண்ணனும் பிறகு வாரேன் என்று
அவளது அறைக்கு சென்று விட்டாள்....

சுடரும் அவளது குரல் கேட்டதும்
ஓகே டா கண்டிப்பா எல்லாம் வாங்கிட்டு
Evening கொண்டு வந்து தாரேன் என்று
சொல்லி விட்டு அழைப்பை துண்டித்து கொண்டான்.....

மதிய வேளை நெருங்க உணவுக்கு
கீழே செல்ல வேண்டும்.....

எப்பொழுதும் மூவரும் சேர்ந்து மட்டுமே
செல்வார்கள் விடுமுறை நாட்களில் .....

அவ்வாறே சென்று உணவு வாங்கி வந்து
அறையில் வைத்து சாப்பிடத் தொடங்கினார்கள்.....சட்டென்று
பாடல் இசை ஒலித்தது.....
அது சுடரின் video call அழைப்பு மணி......

அண்ணன் என்பதால் துள்ளிக்
குதித்தது வழக்கம் போலே அவர்களின்
இரு இதயமும்....

On செய்து அண்ணா இப்போ தா சாப்பிட ஆரம்பித்தோம் நீங்க call பண்ணிட்டீங்க
என்றாள் பிரியா.....

கார்த்திகா கொஞ்சம் சாப்பாட்டு பிரியை
ஆகையால் தட்டில் இருந்த கூட்டு பொரியல்
எல்லாவற்றையும் ரசித்துருசித்து கொண்டிருந்தால்....

மலர் எப்போதும் உணவை கொஞ்சம்
மெதுவாய் மென்று தின்பாள்....
தட்டில் இருக்கும் கறிவேப்பிலையை
தேடி தேடி சுவைத்துக் கொண்டிருந்தாள்...

பிரியா பேசிக் கொண்டிருக்கும் போது

திடீர் என்று
மலர் என்ற அழைப்புக் குரல் கேட்டது....
விக்கலும் அவளைத் தொற்றிக் கொள்ள
ஆரம்பித்து......
ஏதும் பேச முடியாமல் விழித்தாள் மலர்...

டீ மாதிரி சாப்பாடும் ரொம்ப ரொம்ப
பிடிக்குமோ என்று நக்கல் செய்தார் சுடர்
அவள் விக்கித் தவிக்கும் அழகைக்
கண்டு கொண்டே......
நீர் அருந்தி கொண்டே இல்லை இல்லை
என்று தலையை ஆட்டினாள்......

காதோர கற்றை முடி அவள் கன்னங்களை
முத்தமிட்டு ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தது.....
வானவில் போன்ற புருவங்கள் பாதி மட்டுமே
அவன் விழிகளில் தெரிந்தது....

ஆனால் அவன் அதையும் தாண்டி ஒன்றை
தேடிக் கொண்டிருந்தான்......

ஆனால் அவனால் அதைப் பார்க்க இயலாது
போனது...மலர் சிறிதும் அசையாமல்
கன்னம் காட்டியவாரு
அப்படியே அமர்ந்து கொண்டு இருந்ததால்.....

சரி சரி நீங்க மூன்று பேரும் சாப்பிடுங்கள்
நானும் சாப்டுட்டு things வாங்கிட்டு ஈவ்னிங் வாரேன் என்று கூறி call ஐ கட் செய்தான்.. .

மூவரும் உணவு அருந்திய பின் கொஞ்ச நேரம்
கதைத்துக் கொண்டிருந்தனர்....
போனது வந்தது என்று சில நிகழ்வுகளை....
பின்பு உறக்கம் வர மலர் அவளது அறைக்கு
சென்று விட்டால்...
அவர்களும் ஓய்வு எடுக்க தொடங்கினார்கள்.

மென் மாலை பொழுது விடிய ஆரம்பம்
ஆகியது....சூரியன் தன் காதலி நிலாவினை
தேடச் செல்ல ஆயத்தம் ஆகிய வேளை....

கார்த்திகா மற்றும் பிரியங்கா அதாவது பிரியா
எழுந்ததும் மலருக்கு call செய்தனர் ...
Hello மலர் கீழ போகலாம் வா என்று..
மலர் சொன்னாள் ஒரு 10 மினிட்ஸ் வெயிட் பண்ணுங்கடி fresh ஆகிட்டு வாரேன் என்றாள்...

ஓகே ஓகே மெதுவா வாடி வெயிட் பண்றோம்
என்றார்கள்...

மலரும் முகம் கழுவி தலைவாரி
வந்து நின்றாள் கையில் டீ டம்ளரை
எடுத்துக் கொண்டு வந்து......

அதைப் பார்த்த பிறகு அவர்களும்
டீ டம்ளரை எடுத்து வந்து வா போகலாம்
என்றனர்.....

கீழே இறங்கியதும் டிவியில் பாடல் காட்சிகள்
ஓடிக் கொண்டிருந்தது.....
இருக்கையில் அமர்ந்து பாடலைக் கேட்டு
முணுமுணுத்து ரசித்துக் கொண்டிருந்தார் கள்
மூவரும்....

டீ ரெடி வாங்க என்று அழைத்தாள் உணவு சமைத்து கொடுக்கும் ராசாத்தி.....
இதோ வாரோம் என்று எல்லோரும்
அவரவர் தேவைக்கு டீ யை நிரப்பிக்
கொண்டு சென்றனர்....

கார்த்திகா பிரியங்கா மலரும்
அவரவர் டம்ளரில் பிடித்துக்கொண்டு
டிவி அறையில் அமர்ந்து கொண்டு
பாடலோடு சேர்த்து சுவைத்துக் கொண்டிருந்தனர்......

விடுமுறை
மாலை வேளை என்பதால் கொஞ்சம்
பேச்சு சத்தம் அதிகமாக இருந்தது
டிவி அறையில்.....

வெளியில் இருக்கும் வாயிற்கதவு
திறக்கும் சத்தம் கேட்டது.....அந்தக் கதவின்
துரு பிடித்த கிரீச் என்ற சத்தமும் தாழ் பாள்
அவிழும் சப்தமும் ......

நேர் எதிரே தான் இருந்தனர் அவர்கள்
மூவரும்...

சுடர் உள்ளே வந்தார் ....அவர்கள் இருவருக்கும் தேவையான
பொருளை வாங்கிக் கொண்டு.....
இருவரும் அண்ணா என்று சொல்லிவிட்டு
Permission வாங்கி வந்து
பேசிக் கொண்டு இருந்தார்கள்.. ..

ஆனால் சுடர் மலரை மட்டுமே
பார்த்துக் கொண்டே இருந்தார்.....
அவள் டீ யை ரசித்து ருசித்து குடித்துக்
கொண்டிருக்கும் அழகையும்
அந்த பெரிய டம்ளரை பிடித்துக்
கொண்டிருந்த விரலையும்......

பிரியா ஏன் உன் தோழி மலர் வர மாட்டாங்களா
என் கிட்ட பேச மாட்டாங்களா என்று
கேட்டார்.
ஏன் அண்ணா பேசனுமா!?!
ஆசையா இருக்கா என்று கேட்டால்
கொஞ்சம் குறும்பாக ....
அண்ணா ம் ம் என்று..

அப்படியெல்லாம் ஒன்னும்
இல்ல....
இங்க கூப்டு அவுங்கள என்றான்...
கார்த்திகா உடனே அழைத்தாள்
மலர் இங்கே வா என்று.....

காலையில் அவன் பார்த்த போது
செய்த கிண்டலை மறுபடியும் செய்தான்....
டம்ளர் போதுமா என்று.....
மெல்லச் சிரித்து போதும் போதும்
என்றாள்.....

கார்த்திகாவும் பிரியங்காவும்
Things ஐ வாங்கிக் கொண்டு அண்ணா
பேசிக்கிட்டு இருங்க இத ரூம்ல
வைத்து விட்டு வருகிறோம் என்று
சென்று விட்டார்கள்.....

சுடர் சட்டென்று தன் பாக்கெட்டில்
இருந்து ஸ்டிக்கர் பொட்டு பாக்கெட் ஐ
எடுத்து அதை அவளிடம் கொடுத்தான்......

இது என்ன என்று அவள் கேட்க
அவன் இது பொட்டு ங்க நெற்றியில்
வைத்துக் கொள்ளுங்கள்...
உங்கள் நெற்றியில் அது இல்லாமல்
அழகாக இல்லை....
வான் நிலவை இழந்த சாயலாகத் தெரிகின்றது
என்று கூறினான்.....

அவள் விழிகளில் நீர் அதிகம் வரத் தொடங்கியது.... ஏன் ஏதும் தவறாக சொல்லிவிட்டேனா என்று பயந்தான்....
இல்லை இல்லை.... என்று சொல்லிவிட்டு
ஏதும் பேசாது நின்றாள்....

இது போன்று பல முறை சந்திப்பு
நிகழ்ந்தது..... காதலைச் சொல்லவில்லை
இருவரும்...
வருடங்கள் நான்கு ஆகிய போதும்....
தோழிகள் இருவரும் விடுதியை விட்டு
செல்லும் நேரம் வந்தது.....
அது தான் அவள் சுடரை இறுதியாக
பார்க்கப் போகும் நாள் என்று அவளுக்குத்
தெரியாது.....

அவரவர் அவரவர் வாழ்க்கை பயணத்தில்
பிரிந்து சென்றார்கள்.....
மூன்று வருடம் கழித்து மலருக்கு ஒரு
Call வந்தது.... பிரியா அதாவது பிரியங்கா
பேசினால்....
நலம் விசாரித்து கொஞ்சம் பேசி
முடித்தவுடன் தனக்கு கல்யாணம் என்றாள்...
அடியே சொல்லவே இல்லை என்று
கூறி வாழ்த்து சொன்னாள்...
நான் மறந்துட்டேன் அண்ணா தா எல்லாரையும்
Invite பண்ணனும் மறந்துடாம
மலரையும் கூப்பிடு என்று சொன்னார்....

அதுனாலதான் call பண்ணினேன் என்று
பிரியங்கா
சொன்னால்...

மலர் சட்டென்று சரிந்து விழுந்தால்..
அவன் பெயர் கேட்டதும்.....

சரி கண்டிப்பா வாரேன் பிரியா என்று
சொல்லி call ஐ cut செய்து விட்டு

ஸ்டிக்கர்
பொட்டை எடுத்து முத்தம் வைத்து
அழுதாள்..

இன்னும் என் நினைவுகள் உங்களுக்கு
இருக்கா சுடர் என்று......

விதியின் விளையாட்டில் அவள்
அவனுக்காக எழுதப் பெற்ற
அன்புத் துணைவன்.......
நேசத்தின் சுடர் (ஒளி)

காலங்கள்
பல கடந்த பிறகு அவளின் வலிக்கு
தீர்வு தர வந்த ஒரு அன்பான மனிதர்
சுடர் என்று சொல்லிக் கொண்டாள்....

தனக்குத் தானே....

அவர் மீது தோன்றிய அதீத அன்பின்
நேசத்தினால்❤️....

நீங்க வாங்கிக் கொடுத்த ஸ்டிக்கர் பொட்டு
என் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்க வில்லை

என் இதயத் துடிப்பில் உயிர் பசையில்
ஒட்டிக் கொண்டது என்று....
❤️❤️❤️❤️❤️❤️






© All Rights Reserved