...

4 views

உன்னோடு நான் இருப்பேன்

அத்தியாயம்-1

ப்ரியாவின் அறிமுகம்

மைலாபூரில் காலை எட்டு மணி அளவில் சூரிய ஒளி பிரகாசமாக ஒளிந்து கொண்டிருக்க ஆட்கள் நடமாட்டம் நிரம்பி இருந்து.மெயின் ரோட்டின் மூன்றாவது குறுக்கு சந்தில் ஒரு அழகான சின்ன இல்லம். அதன் சமையலறையில் காஃபி ஆற்றியபடி,ப்ரியா ஏழுந்திரி என்று குரல் கொடுத்தார் ஜானகி. ஆற்றிய காஃபியை ஹாலில் அமர்ந்து நாழிதள் படித்து கொண்டிருக்கும் தன் கணவன் மோகனிடம் கொடுத்து விட்டு ,ப்ரியாவின் அறையை நோக்கி சென்றார். ப்ரியாவின் தோழில் மெதுவாக ஒரு அடியை வைத்தபடி மணி எட்டாச்சு இன்னும் என்னடி தூக்கம் ஒழுங்கா எழுந்திரி என்று அதட்ட,

அம்மா கொஞ்சம் நேரம் என்று பெட்ஷிட்டை இழுத்து போத்தி படுத்தாள் ப்ரியா...

அது சரி...எழுப்பும்போது எழுந்திரிக்காத அப்பறம் ஆஃபீஸ்க்கு டைம் ஆச்சுனு கால்ல சக்கரத்தை கட்டிட்டு நில்லு... ஒழுங்கா எழுந்திரிடி என்று அதட்ட...

ஜானகி என்னை டிஸ்டர்ப் பண்ணாம கொஞ்சம் நேரம் தூங்கவிடு, என்று ப்ரியா சொல்ல...

சொல்வதை கேட்காமல் அடம்பிடிக்கும் மகளை சலிப்புடன் பார்த்தவர்... நானும் பாக்குறன்டி எத்தனை நாள்தான் என்கூட மல்லு கட்டிட்டு இப்படி தூங்குறனு... புருஷன் வீட்டுக்கு போனதும் மாமியார் ரெண்டு தட்டு தட்டுனா தெரியும்டி இந்த அம்மாவோட அருமை என்று புலம்ப

அதை கொஞ்சம்கூட காதில் வாங்காத ப்ரியா... ம்.ம் அதெல்லாம் ஆனதும் பாத்துக்காலாம் நீ போய் உன் வேலய பாரு ஜானு இங்க நின்னு டிஸ்டர்ப் பண்ணாத என்று நக்கலாக கூற...

அழுகாத குறையாய் தன் தலையில் அடித்த ஜானகி... உன்னை கட்டிக்கிட்டு எவன் தலை உருள போகுதோ பாவம்டி அவன் என்று புலம்ப...

அவசரமாக முகத்தில் இருந்து போர்வையை விளக்கியவள்... ஏய் ஜானகி என் புருஷன அவன் இவனு சொல்லாதனு எத்தனை தடவ சொல்லிருக்க... உன்ன என் அப்பா சமாளிக்கும்போது என்னை அவரு சமாளிக்க மாட்டாரா என்று சொல்ல...

ம்க்கூம் இந்த வாய்க்கு ஒன்னும் குறச்சல் இல்ல... பெத்த அம்மாவ பேர் சொல்லி கூப்டுட்டு வராத எவனுக்கோ மரியாதை கொடுக்காம இருக்குறதுதான் இங்க கொறச்சல் என்று சளித்து கொண்டபடி அறையை விட்டு வெளியேற,

சற்று முன்பு மோகனிடம் கொடுத்த காஃபி குடிக்காமல் அப்படியே டேபுளில் இருந்தது. அதை கண்டு இன்னும் எரிச்சலான ஜானகி மகளின் கோபத்தை தந்தையின் மீது காட்ட ஆரம்பித்தார்

நீங்க இப்ப பேப்பர் படிக்கலனு யார் அழுதா? அப்பாவும் பொண்ணும் ஒருத்தர் ஒருத்தர மிஞ்சிக்க மாட்டிங்களே... நாளைல இருந்து நானும் எட்டு மணி வரை தூங்குற இல்ல பேப்பர் படிச்சுட்டு உக்கார்ர யார் யாருக்கு என்னென்ன பண்ணனுமோ பண்ணிக்கோங்க என்று கோபமாக சொல்ல...

தன் மனைவியை பார்த்து புன்னகை புரிந்த மோகன், ஜானு இப்ப எதுக்கு தேவை இல்லாம கத்திட்டு இருக்க? உனக்கு அவள பத்தி தெரியாதா... நீ என்னதான் எழுப்புனாலும் அவ எழுந்திரிக்க நேரத்துலதான் எழுந்திரிப்பா... சும்ம பொண்ண தொந்தரவு பண்ணாத என்று கூற

அவரை ஏடாகூடமாக முறைத்த ஜானகி,வயசு பொண்ண செல்லம் கொடுத்தே கெடுத்து வைங்க... அவ இப்படி சொல்றத கேக்காததுக்கு காரணமே நீங்கதான் என்று புலம்பியபடியே கிச்சனுக்குள் செல்ல

ம்க்கூம் சொல்றத கேக்காதது இங்க பொண்ணு மட்டுமா? என்று மோகன் முணுமுத்தது ஜானகியினா காதில் அறைகுறையாக விழுந்தது...அவரை திரும்பி பார்த்து முறைத்தவர் என்னது என்ன சொன்னிங்க? என்று அதட்ட

மோகன் சமாளிக்கும் விதமாக ஒன்னும் இல்லம்மா... காஃபி சூப்பரா இருக்குனு சொன்ன என்று பிட்டை அடித்து விட்டார்...

ம்.ம். கேட்டுச்சு என்று முறுக்கியபடி கிச்சனில் நுழைந்தார் ஜானகி...

சிறுது நேரத்தில் தயாராகி அறையில் இருந்து வெளியேறிய ப்ரியா மோகனை பார்த்து குட்மார்னிங்ப்பா என்று கூறி விட்டு அம்மா டிஃபன் என்றாள் கிச்சனை பார்த்தபடி...

மார்னிங் ப்ரியாம்மா... ஆஃபீஸ்க்கு கிளம்பியாச்சா? என்று மோகன் கேட்க...

ம் ப்பா என்றாள் புன்னகையோடு...

மகளின் தலையை மென்மையாக வருடியவர், என்னடா ஒருமாதிரி டல்லா இருக்க ஆஃபீஸ்ல ரொம்ப வேலயா?

ஆமாப்பா ப்ராஜெக்ட் வர்க் போயிட்டு இருக்கு,லேட் நைட் வேலை... அதனாலதான்

ரொம்ப ஸ்ட்ரெஸ் பண்ணியெல்லாம் வேலை செய்யாத ப்ரியா... உடம்ப பாத்துக்கோ என்று அக்கரயாக சொல்ல...

சரிப்பா நான் பாத்துக்குற நீங்க கவலபடாதிங்க என்று புன்னகைத்தாள்...

ஜானகி டிஃபன் எடுத்து வந்து ப்ரியாவிடம் ம்... என்று முன்னே வைத்துவிட்டு நிற்க... தன் அன்னையின் கோபம் அறிந்தவள் அமைதியாக உண்ண ஆரம்பித்தாள்...

சில நிமிடம் அங்கே மௌனம் நிகழ... ப்ரியா மோகனை பார்த்தபடி ,அப்பா ஜானகி கையால சாப்ட கொடுத்து வெச்சுருக்கனும் இல்லப்பா என்னா டேஸ்ட் என்னா டேஸ்ட் என்று புகழ...

தன் காலரை தூக்கி விட்ட மோகன் பொண்டாட்டி யாரோடது என்றார்...

இருவரையும் முறைத்த ஜானகி,போதும் போதும் அப்பாவும் மகளும் ஐஸ் வைக்காதீங்க எனக்கு சலி பிடிச்சுரபோது என்று உதட்டை சுழிக்க...

கோபமாக எழுந்த ப்ரியா... எனக்கு டிஃபனும் வேணா ஒன்னு வேணா என்று எழுந்து செல்ல பார்க்க அவள் கரத்தை இறுக்கமாக பற்றிய ஜானகி,என்னாச்சு ப்ரியா ஏன் சாப்டாம எழுந்திருச்சுட்ட என்று கேட்க

கோபமாக மோகனை பார்த்தவள் அப்பா என் கைய விட சொல்லுங்க நான் போகனும் என்றதும் மோகனும் பதறியபடி என்னாச்சு ப்ரியாம்மா என்றார்...

பின்ன என்னப்பா? என் அம்மாக்கு,உங்க ஜானகிக்கு ஐஸ் வைக்கனும்னு என்ன அவசியம் இருக்கு? அப்படியும் நம்ம வெச்சா கரையிர ஆளா இவங்க என்று கேட்டபடி கண்ணடிக்க.... இப்போது அவளின் குறும்பை அறிந்த மோகன் ஆமா ஆமா என் ஜானகிக்கு யாரலும் ஐஸெல்லாம் வைக்க முடியாதுப்பா என்று அவரும் மகளோடு கூட்டு சேர்ந்து விடைடார்...

ப்ர்யாவின் காதை செல்லமாக திருகிய ஜானகி ஏய் வாயாடி எங்க இருந்துடி உனக்கு இந்த நாடமெல்லாம் வரும்?... ஒரு நிமிஷத்துல என்னையே பயபட வெச்சுட்ட என்று செல்லமாக அதட்டி சிரிக்க... அன்னையின் முகத்தில் புன்னகையை கண்டதும் ப்ரியாவும் சிரித்தபடி ம்... இந்த ஸ்மைல்காகதான் இந்த நாடகமே... என் ஜானு சிரிக்கும்போது செம அழகா இருப்பாங்க அதனாலதான் என்று கண்ணடிக்க

இன்னும் சத்தமாக சிரித்தவர்... போதுன்டி ஒழுங்கா உக்காந்து சாப்டு என்று சொல்ல...

அவளும் ஓகே என்று அமர்ந்து உணவில் கவணம் செலுத்தினாள்...

மோகன் ப்ரியாவின் காதருகே சென்று எப்படிடா ஒரே அடியா கௌத்துட்ட என்று கிசுகிசுப்பாக கேட்க...

எல்லாம் உங்க ட்ரெயினிங்தாப்பா என்று கண்ணடித்தாள்...

மோகனும் தலையை ஆட்டியபடி ம் நடத்து நடத்து என்றார்...

அலுவலகம் செல்ல புரபட்ட ப்ரியா ஸ்கூட்டியில் அமர்ந்தபடி பாய்ப்பா பாய்ம்மா என்று கை அசைக்க... பத்ரமா போயிட்டு வாம்மா என்று மோகன் சொல்ல, ஈவ்னிங் வீட்டுக்கு சீக்ரம் வந்துரு என்றார் ஜானகி...

ஓகே என்று சொல்லி விட்டு தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து அலுவலகம் நோக்கி பயணித்தாள் ப்ரியா....

ப்ரியா... இவள்தான் நம் கதையின் கதாநகயகி... மோகன் மற்றும் ஜானகியின் ஒரே செல்ல மகள்....அன்பானவள்... அழகும், அறிவும் ஒன்று சேர்ந்த காவியம்... எந்த ஒரு விஷயத்தையும் மற்றவரின் மனம் நோகாமல் செய்பவள்... யாராக இருந்தாளும் தன் பேச்சாலும் புன்னகையாலும் தன் கை பைக்குள் போட்டு கொள்பவள்...

தி-நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்க,பல வாகனங்கள் நகர முடியாமல் மாட்டி கொண்டிருந்தது... அதில் ஆதித்யாவின் காரும் ஒன்று...

கையில் இருந்த கடிகாரத்தை பார்த்தபடி தன் ட்ரைவர் கதிரிடம்...
கதிர் என்னாச்சுனு கொஞ்சம் கீழ இறங்கி பாருங்க... மீட்டிங்கு வேற லேட் ஆச்சு என்று சொல்ல...

அவனும் சரி சார் என்று காரில் இருந்து இறங்கி முன்னே சென்று பார்த்தான்... அங்கே ப்ரியா ஒரு இளைஞனிடம் வாதடி கொண்டிருந்தாள்... அவள் அருகில் ஒரு சிறுவன் முழங்காலிலும் நெற்றியிலும் ரத்தம் வழிய நின்று அழுது கொண்டிருந்தான்...

ஏய் இந்த பய்யன ஒழுங்கா ஹாஸ்ப்பிடல் கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் பண்ணு இல்ல என்று ப்ரியா சொல்ல...

அந்த இளைஞன் குறுக்கிட்டபடி... முடியாதுடி என்னடி பண்னுவ என்றான் திமிராக...

ப்ரியாவுக்கு கோபம் அதிகரிக்க... ஏய் மரியாதையா பேசு வாடி போடின்ன நடக்குறதே வேற ...

அவன் அசராது அவளை பார்த்து நக்கலாக சிரித்தவன்...

ஏய் உனக்கெல்லாம் என்னடி மரியாதை கொடுக்க வேண்டி கிடக்குது நீ என்ன பெரிய இவளா? ஆமா நான் யாருனு தெரியுமா? எங்க அப்பா யாருனு தெரியுமா? நீ இப்படி பேசறதெல்லாம் அவருக்கு தெரிஞ்சது என்று அவன் பாட்டிற்கு தலைகணம் பிடித்து பேச... ப்ரியாவின் கோபம் தலைக்குமேல் ஏறி இருந்தது...கடைசியாக பொறுமையை இழந்தவள் விட்டாள் ஒரு அறை கண்ணத்தில் பளாரென்று.

அவள் அறையில் அவன் கண்ணம் எரிய அதை பற்றியபடி சுற்றியும் முற்றியும் பார்த்தான் அந்த இளைஞன். அங்கிருந்த எல்லோரும் அவனையே பார்த்தபடி இருந்தனர்...

கோபத்தை கட்டு படுத்த முடியாத ப்ரியா அவனை கத்த ஆரம்பித்திருந்தாள்... பைக்க கண்ணா பிண்ணானு ஓட்டுனதும் இல்லாம,ஸ்கூல்க்கு போற பய்யன இடிச்சுட்டு இப்ப ஹாஸ்ப்பிடல்க்கு கூட்டிட்டு போக சொன்னா திமிரா பேசுறியா? நீ யாரா இருந்தா எனக்கு என்ன? ஒழுங்கா இந்த பய்யன கூட்டிட்டு போய் ட்ரீட்மென்ட் பண்ணி கொடு இல்ல நடக்குறதே வேற... என்று அதட்டியவள் அருகில் இருந்த ஆட்டோவை அழைத்து அந்த சிறுவனையும் இளைஞனையும் அமர வைத்து விட்டு தன் ஸ்கூட்டியை எடுக்க சென்றாள்.

வாகனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நகர... கதிர் அவசரமாக வந்து காரை ஸ்டார்ட் செய்தான்.

என்னாச்சு கதிர் என்ன பிரச்சனை ஆதி கேட்க...

ஒரு பைக்கார ஸ்கூல் போர பய்யன இடிச்சுட்டு ட்ரீட்மென்ட் பண்ண கூட்டிட்டு போக மாட்டனு அடம் பிடிச்சுட்டு இருந்தா... ஒரு பொண்ணுதான் அவன சம்மதிக்க வெச்சு கூட்டிட்டு போகுது என்று சொல்ல

ஆதி பதறியபடி,ஐயோ அந்த சின்ன பயனுக்கு ஒன்னும் இல்லயே என்றான்...

காயம் அவ்வளவு ஆழம் இல்லனு நினைக்கிற சார் என்று கதிர் சொல்லி கொண்டு இருக்க... ஆதியின் கார் ப்ரியாவை கடந்து சென்றது.கதிர் ப்ரியாவை காட்டியபடி... அதோ அங்க ஸ்கூட்டில உக்காந்து ஆட்டோ ட்ரைவர் கூட பேசிட்டு இருக்கே அந்த பொண்ணுதான் சார்....பைக்காரனுக்கு விட்டது பாருங்க ஒரு அறை அவ்வளவு நேரம் திமிரா பேசுனவ எலி வால சுருட்டுன மாதிரி சுருண்டு போயிட்டான் என்று சொல்ல...

கண்ணாடியை இறக்கி ப்ரியாவை பார்த்த ஆதி... யாரு கதிர் அந்த ப்ளு சுடிதார் போட்டுருக்காங்களே அந்த பொண்ணா? என்று கேட்க

ஆமா சார் அதே பொண்ணுதான் இங்க இருந்துதான் கூட்டிட்டு போயிருச்சு ஹாஸ்ப்பிடல்ல ஏதும் பிரச்சனை பண்ணாம இருந்தா சரி... அந்த பையன பாத்தா பெரிய இடம் மாதிரி தெரியுது என்க

புன்னகை ஒன்றை சிந்திய ஆதி... கதிர் அவங்க பேர் ப்ரியா... நம்ம ஆஃபிஸ்லதான் வேல செய்றாங்க... ரொம்ப தயிரியமான பொண்ணு ஸ்மார்ட்டும் கூட எந்த பிரச்சனை இருந்தாலும் சமாளிச்சுக்குவாங்க என்றான் பெருமையுடன்...

ஆனா சார் அந்த பொண்ண கட்டிக்க போறவ ரொம்ப பாவம்...சின்ன தப்பு செஞ்சாலும் வெளுத்து வாங்கிரும் என்று கதிர் சொல்ல...

இப்போது சத்தமாக சிரித்த ஆதி...ஹோட்டல் கார்டனுக்கு போங்க கதிர் அங்க சின்ன மீட்டிங் இருக்கு அதை முடிச்சுட்டு ஆஃபிஸ் போகலாம் என்றவன் கண்களை மூடி சீட்டில் தலை சரித்து கொண்டான்...

ப்ரியா மருத்துவமனையில் இருந்து அலுவலகம் வந்தடைய மதியம் ஆகி இருந்தது... அவசரமாக ஸ்கூட்டியை பார்க் செய்தவள்... லிஃப்ட்டை நோக்கி வந்து கொண்டிருக்க அதே நேரம் லிஃப்டும் மூட போனது...

ஸ்டாப் த லிஃப்ட் ஸ்டாப் த லிஃப்ட் என்று கத்தியபடி ஓடி வர உள்ளே இருந்த நபர் கரத்தை இடையில் விட்டு லிஃப்ட்டை நிறுத்த லிஃப்ட்டும் திறந்தது.

ஓடி சென்று ஏறி கொண்டவள்... மூச்சு வாங்கியபடி ஆறாவது பட்டனை அழுத்தி விட்டு ஸ்கூட்டி சாவியை பையில் வைத்து கொண்டிருந்தாள். அப்போதுதான் நினைவு வந்தது...தனக்காக லிஃப்ட்டை நிறுத்தியவருக்கு இன்னும் நன்றி சொல்லவில்லை என்று பின்னே திரும்பியவள் தேங்கயூ என்று புன்னகையோடு சொல்ல

ஆதி மொபைலில் கவனம் செலுத்தியபடியே யூ ஆர் வெல்கம் என்றான்...

ஆதியை கண்டவளுக்கு பயத்தில் உடலெல்லாம் நடுங்க ஆரம்பித்தது... கு கு குட் மார்னிங் சார் என்று திக்கி திணரி கூற... அவளை ஒரு பார்வை பார்த்தவன் குட் ஆஃப்டர் நூன் என்றான் அழுத்தமாக...

உடனே தன் கரத்தில் கடிகாரத்தை பார்க்க அது 12:15 என காட்டியது... அவசரமாக நாக்கை கடித்து கொண்டவள்... ஆதியை பார்த்து சாரி சார் குட் ஆஃப்டர் நூன் என்றாள். அவன் ஏதும் பேசாது தன் மொபைலிலே கவனம் செலுத்தி இருக்க

ப்ரியாவுக்குதான் பயமாக இருந்தது... ஐயோ ப்ரியா எம்.டி கிட்டயே மாட்டிட்டியாடி... என்னெல்லாம் சொல்லி திட்ட போறானோ? என் வேலைக்கு எந்த ஆபத்தும் வராம பாத்துக்கோங்க பிள்ளையாரே உன் பிள்ளைய நீதான் காப்பத்தனும் என்று பலத்த வேண்டுதலில் இருக்க ஆறாவது ஃப்ளோரும் வந்தது... ஆதி வேகமாக லிஃப்டில் இருந்து வெளியேற அவன் அலுவலகத்தில் நுழையும் வரை வெளியே நின்றவள் சில நிமிடங்களில் அவளும் நுழைந்தாள்.

தன் இறுக்கையில் சென்று அமர... எதிர் முனையில் கொஞ்சம் தள்ளி அமர்ந்துருக்கும் மது ஸ்..ஸ் ப்ரீ என்று மெல்லிய குரலில் அழைத்தாள்...

மது ப்ரியாவின் உயிர் தோழி...

என்ன என்பதுபோல ப்ரியா சைகையில் கேட்க

ஆஃபிஸ்க்கு ஏன் லேட்? என்றாள் மது.

அது ஒரு பெரிய கதை அப்பறம் சொல்ற என்று சொன்னவள்... தன் கணினியில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.சில நிமிடங்களில் கேபினில் இருந்து ஆதியின் அழைப்பு வர பயத்தில் உடல் நடுங்கி போனாள் ப்ரியா...

இப்ப எதுக்கு கூப்டுறுக்காறு? ஒரு வேளை லேட்டா வந்ததுக்கு கூப்டு வெச்சு திட்ட போறாரா என்று நினைத்தபடி மெதுவாக எழுந்து கேபினை நோக்கி செல்ல...

மது மீண்டும் கிசிகிசுப்பாக அழைத்தாள்... முகம் சுழித்தபடி அவளை திரும்பி பார்த்தவள்... என்னடி என்று கண்களால் கேட்க...

இன்னிக்கு உன் சீட்டு காலி என்று கைகளால் கிழித்து காட்டியபடி போய் வாங்கி கட்டிக்க என்று சைகையாலே கூற...

அவளை ஏடாகூடமாக முறைத்து விட்டு கேபினுக்குள் நுழைந்தாள்.

சார் மே ஐ கமின் என்று கேட்க... ஏதும் பேசாது கைகள் ஆட்டியபடி அழைத்தான்.

எச்சில் விழுங்கியபடி அவன் முன்னே சென்று நின்றாள்.அவளை அழைத்து விட்டு ஒன்றும் பேசாமல் கணினியில் ஏதோ டைப் செய்து கொண்டு இருக்க,

அவளுக்கோ இதய துடிப்பே நின்றுவிடும் போல இருந்தது... என்னை கூப்டுட்டு அவர் பாட்டுக்கு என்ன டைப் பண்ணிட்டு இருக்காரு? ஒருவேளை ரிசைன் பண்ண லெட்டர் டைப் பண்ணிட்டு இருக்காரோ? பயம் கூடி போக "சார்"என்றாள் அவளையும் மீறி

ஜஸ்ட் அ செகென்ட் என்று அவளை கை நீட்டி நிறுத்தியவன்... தன் வேலைகளை முடித்து விட்டே அவளை பார்த்தான்...

மிஸ் ப்ரியா என்று அவன் ஏதோ சொல்ல வர பதட்டத்தில் அவளாகவே குறுக்கிட்டபடி... சார் ஐ அம் ரியலி சாரி... ஆஃபீஸ்க்கு லேட்டா வந்தது தப்புதான்... அதுக்காக என்னை வேலைய விட்டெல்லாம் நிறுத்திறாதீங்க ப்ளீஸ்... நைட் எவ்வளவு நேரம் ஆனாலும் சரி இருந்து வேலைய முடிச்சுட்டு போற சார்... இந்த ஒருதடவ எக்ஸ்கியூஸ் கொடுங்க சார் ப்ளீஸ் அவள் கெஞ்ச...

முகத்தில் எந்த ஒரு சலனமும் காட்டாமல் அவள் பேசுவதை அமைதியாக கேட்டவன்... உங்களுக்கு எதாச்சு சொல்லனும்னு இருந்தா முன்னாடியே சொல்லி இருக்கனும், இப்ப நான் கூப்டதுக்கு அப்பறம் வந்து சொல்ல கூடாது என்று சொல்ல...

அவனை பார்க்க முடியாமல் தலை குணிந்து கொண்டவள் சாரி சார் என்றாள்...

அதையெல்லாம் கண்டு கொள்ளது தான் அழைத்தது எதற்காக என்று சொல்ல ஆரம்பித்தான் ஆதி.

எனிவே... நம்ம கம்பெணியில ஒவ்வொரு டீம்ல இருந்து ஒருத்தர ஃபாரின் ப்ராஜெக்ட்காக அனுப்பலாம்னு இருக்கோம். உங்க டீம்ல இருந்து யார அனுப்பலாம்னு அஸ் அ டீம் லீடரா உங்கள கேக்கலாம்னுதான் கூப்ட... சோ யார அனுப்பலாம் ப்ரியா? என்று கேட்க...

அப்போதுதான் அவள் உயிரே திரும்பி வந்தது போல இருந்தது.பெரும் மூச்சை இழுத்து விட்டவள்... வேலைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்ததும் இவ்வளவு நேரம் அவள் முகத்தில் மறைந்திருந்த புன்னகை இப்போது மலர... எங்க டீம்ல இருந்து நீரஜ் அனுப்பலாம் சார்... அவருக்கு ஃபாரி்ன் எக்ஸ்பீரியன்சும் இருக்கு என்று சொல்ல...

சில நிமிடம் யோசித்தவன் ஓகே நான் ஜெயராம் கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு சொல்ற யூ கேன் கோ நௌ என்று அனுமதி கொடுக்க

ஓகே சார் என்று இரண்டு அடி எடுத்து வைத்திருப்பாள்... ஆதி ஏதோ நினைவு வந்தவனாய்... ப்ரியா என்று அழைத்தான்...

அவளும் திரும்பி பார்த்து எஸ் சார் என்று சொல்ல...

காலையில ஏக்ஸிடென்ட் ஆச்சே சின்ன பையன் இப்ப எப்படி இருக்கான்? he is ok... அக்கரையோடு கேட்க...

ஆச்சரியமாக அவனை பார்த்த ப்ரியா,சார் உங்களுக்கு எப்படி? நீங்களும் அங்க இருந்தீங்களா? என்று கேட்க...

ம்.. மீட்டிங்கு போயிட்டு இருந்த

ஓ அப்ப விஷயம் தெரிஞ்சுதான் லேட்டா வந்ததுக்கு ஒன்னும் சொல்லலயா? என்று நினைத்து கொண்டவள்...he is fine sir ... ட்ரீட்மென்ட் முடிஞ்சதும் அவனோட அப்பா வந்து கூட்டிட்டு போயிட்டாரு என்றாள்...

அந்த பைக்கார ஹாஸ்ப்பிடல்ல ஏதும் பிரச்சனை பண்ணலயே ?என்று ஆதி கேட்க...

இல்ல சார்... என்றாள்

அந்த பைக்காரனை ப்ரியா அடித்ததாக கதிர் சொன்னது ஆதிக்கு நினைவு வர புன்னகையுடன் அவளை பார்த்தவன்... என்ன ப்ரியா உங்கள ஸ்வீட் அன்ட் சாஃப்ட்டுனு நினச்ச ஆனால் நீங்க ரொம்ப டெரரர் போல அந்த பைக்காரனுக்கு செம அடியாமே என் ட்ரைவர் சொன்னாறு நக்கலாக கூற

அவனை தயக்கம் கொண்டு பார்த்தவள் எவ்வளவு சொல்லியும் கேக்கல சார் அதுதான் கோபத்துல அடிச்சுட்ட... அதுக்கு சாரியும் கேட்டுட்ட அவசரமாக சொல்ல

சத்தமாக சிரித்த ஆதி... ப்ரியா இது ஆஃபீஸ் இங்க யாரச்சு பிரச்சனை பண்ணுனாங்கனா என்கிட்ட சொல்லுங்க நீங்களா வன்முறையில இறங்கிறாதீங்க,அப்பறம் நான் எம்ப்ளாயர்ஸ் தேடி அலைய வேண்டியதா இருக்கும் என்று கிண்டலாக சொல்ல

ப்ரியாக்குதான் சங்கடமாக போயிற்று... ஐயோ சார் அப்படியெல்லாம் நடக்காது என்று பதட்டமாக கூற

ரிலாக்ஸ் ப்ரியா ஏன் சீர்யஸ் ஆகுறீங்க? நான் சும்மா விளையாட்டுக்குதான் சொன்ன...

அவளும் புன்னகைத்தபடியே சாரி சார் என்றாள்...
உடனே அவளை தடுத்தவன்... நோ நோ டோன்ட் பி சாரி கெட் பேக் டு யுர் வர்க் என்று சொல்ல

ஓகே சார் என்று புன்னகையோடு அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.

மாலை அலுவலகம் முடிந்ததும் ப்ரியாவும் மதுவும் வழக்கமாக வரும் கேஃபேக்கு வந்திருந்தார்கள் காஃபியை ஆர்டர் செய்து குடித்தபடி இருக்க

மது ப்ரியாவை சீண்ட நினைத்து... ஏய் ப்ரியா இருந்தாலும் உனக்கு ரொம்ப தயிரியம் தாண்டி ஆஃபிஸ்க்கு லேட்டா வந்ததும் இல்லாம எம்.டி கூடவே வரல்ல...

அவளை முறைத்து பார்த்த ப்ரியா... சும்மா இரு மது நானே எவ்வளவு பயந்து போயிருந்த தெரியுமா? நல்ல வேல அவருக்கு விஷயம் தெரிஞ்சதால விட்டுட்டாறு இல்ல இன்னிக்கு என் வேல போயிருக்கும் என்று சொல்ல...

அவளை நக்கலாக பார்த்து சிரித்த மது... ஏய் உண்மையா சொல்லு வேலை போயிரும்னு பயமா இருந்ததா? இல்ல வேலை விட்டு தூக்கிட்டா ஆதி சார பாக்க முடியாதுனு பயமா இருந்ததா என்று கேட்க...

அமைதியாக காஃபி கப்பை பார்த்தபடி இருந்தவள்... சிறு மௌனத்திற்க்கு பிறகு புன்னகைத்தபடி ரெண்டும்தான் என்றாள்.

ப்ரீ இது மட்டும் அவருக்கு தெரிஞ்சது உன்னை அடுத்த நிமிஷமே வேலைய விட்டு தூக்குவாறு தெரியுமில்ல

தெரியும் மது அதனாலதான் அவர்கிட்ட என் மனசுல இருக்குறத சொல்லாம இருக்க... அவர நெருங்க நினச்சு நான் எதாச்சு சொல்ல போய் அவருக்கு அது பிடிக்காம என்னை ஒதுக்கி வெச்சுட்டாருனா? அத என்னால தாங்கிக்க முடியாது மது... அதனாலதான் அவர தூரத்துல இருந்தே பாத்துட்டு இருக்க...

ப்ரீ நீ ஆதி சார காலேஜ்ல இருந்து இப்ப வரைக்கும் தூரத்துல இருந்தேதான் பாத்துட்டு இருக்க... வாழ்நாள் பூரா இப்படி பாத்துட்டேதான் இருக்க போறியா? இதெல்லாம் வேணா ப்ரீ... you have your own life... அதை ஏன் புரிஞ்சுக்க மாட்டின்ற... ஆறு வருஷம் ஆச்சு ப்ரீ... அப்பா அம்மா பாக்குற பய்யனா கல்யாணம் பண்ணிக்க இல்ல நம்ம ஆஃபிஸ்லயே எத்தனை பேர் உன் பின்னாடி சுத்துரானுங்க யார்கிட்டயாச்சு பேசு பழகு ஆதி சார மறக்க ட்ரை பண்ணு ப்ரீ

வென்று புன்னகை ஒன்றை சிந்திய ப்ரியா... ட்ரை பண்ணாம இல்ல மது.... என்னால முடியல... அவர்கூட இருக்கும்போது,பேசும்போது, i feel so happy... அவர் என்னை ப்ரீயானு கூப்டும்போது எப்படி இருக்கும் தெரியுமா? சொல்ல வார்த்தைகளே இல்லடி.... ஆதிமேல இருக்குற இந்த காதல் உணர்வுகள் இதுல்லாம் இன்னோருத்த மேல வருமானுகூட தெரியல மது... அப்படியும் யாராச்சு வந்தாலும் அவனுக்குள்ள நான் என் ஆதியதான் தேடுவ அந்த கண்ணு,அந்த சிரிப்பு,இப்படி சொல்லிட்டே போகலாம்... என் மனசு முழுக்க அவர் மட்டும்தான் இருக்காரு... வேற ஒருத்தன நினச்சுதான் பாக்க முடியல அப்பறம் எப்படி மது பேசுறது? பழகுறது?... என்று நிறுத்த

அவளையே கண் இமைக்காது பார்த்தாள் மது... தன் தோழியின் காதலை கண்டு பிரம்மித்துதான் போனாள்... புன்னகை ஒன்றை புரிந்தவள்... எப்படி ப்ரீ உன்னால எந்த எதிர் பார்ப்பும் இல்லாம இவ்வளவு காதலிக்க முடியுது?... நீ கொஞ்சம்கூட மாறலடி... இவ்வளவு காதல மனசுல பூட்டி வைக்காத ப்ரீ சீக்கிரமே சொல்லிறு என்று கூற

ப்ரியா புன்னகையுடன்... every thing had a good time மது, அதே மாதிரி என் காதலுக்கான டைமும் வரும்...அதுக்காகதான் waiting என்று கண் இமைத்தாள் ப்ரியா...

உன்னோடு நான் இருப்பேன்❤️

அத்தியாயம்-2

ஆதித்யாவின் அறிமுகம்

ஆதியின் வீட்டு டைனிங் டேபுளில் அமர்ந்து காலை உணவை அருந்தி கொண்டிருந்தார் விஷ்வநாதன் அவருக்கு உணவை பறிமாறி கொண்டிருக்கும் தன் மனைவி விஜயாவை பார்த்து... என்ன விஜி உன் பய்யன் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டானா? என்று கேட்க...

நீங்க சொல்லி கேக்காதவ நான் சொல்லியா கேக்க போறா? விடுங்க இவன் வாழ்க்கை முழுக்க இப்படியே தனியாதான் இருக்கனும்னு எழுதி இருக்கோ என்னவோ சலிப்புடன் கூறினார் விஜயா...

நீயே இப்படி சொன்னா எப்படி விஜி?... அவன் பிடிவாதத்தை விட சொல்லு... அவனுக்கு அழகான வாழ்க்கைய நாம அமைச்சு தரலாம்... எவளோ விட்டுட்டு போன ஒருத்திக்காக உன்னையும் என்னையும் இப்படி படாத பாடு படுத்துறானே நம்மலவிட அவனுக்கு காதல்தான் பெருசா போச்சா விஜி.... இது ஏந்த விதத்துல நியாயம் நீயே சொல்லு விஷ்வா நொந்து கொண்டே சொல்ல... ஆதரவாக அவர் தோழில் கை வைத்த விஜயா... என்னங்க உங்க உடம்பு இருக்குற நிலைமைல நீங்க ரொம்ப ஸ்ட்ரேஸ் ஆக கூடாது என்று தேற்ற...

பெரும்மூச்சை இழுத்து விட்ட விஷ்வா... இதை இப்டியே விட்டா ஆகாது விஜி... இவனுக்கு எப்படியாச்சு ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கனும்... பொண்ணு பாக்க ஆரம்பிச்சரலாம் விஜி

விஜயா உதட்டை சுழித்தபடி.... எங்க அண்ணன் பொண்ண தர ரெடியா இருந்தாரு அருந்ததி கிட்ட என்னத்த சொல்லி வெச்சானோ கடைசில மாட்டேனு சொல்லிட்டாறு... சொந்த மாமா பொண்ணயே வேணானு சொன்னவ வேற யார கட்டிக்க போற...

விஜயாவை முறைத்த விஷ்வா... ஏன்? உன் அண்ணன் பொண்ண தவிர இந்த உலகத்தல வேற பொண்ணுங்களே கிடையாதா? என் ஃப்ரெண்டோட பொண்ணு இருக்கா பேர் ப்ரியா... உன் பய்யனுக்கு அவதான் கரெக்டா இருப்பா இன்னும் ரெண்டு நாள்ல பேசலாம்னு இருக்க நீ என்ன சொல்ற விஷ்வா ஆர்வமாக கேட்க...

ஃப்ரெண்டோட பொண்ணுனு சொல்றீங்க பாத்து பேசுங்க... முதல்ல இவன் ஒத்துக்கனுமே... இவன் பிடிவாதத்தால ஒரு பொண்ணு வாழ்க்கை கெட்டுற போது யோசிச்சு முடிவு எடுங்க... இருவரும் பேசி கொண்டிருக்க...

ஆதி தன் அறையில் இருந்து வெளியேறி படியில் இறங்கி கொண்டிருந்தான். அவனை பார்த்த விஜயா... விஷ்வானின் காதருகே சென்று அவன் வரான் சாப்டு முடிக்கிற வரைக்கும் எதுவும் சொல்லாதீங்க என்று மெல்லிய குரலிலும் அதே சமயம் கண்டிப்பாகவும் கூறினார்.

விஷ்வாவும் அதற்குமேல் ஏதும் பேசாமல் தன் உணவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்...

அங்கே வந்த ஆதி குட் மார்னிங்ப்பா என்றபடி நாகற்காலியை இழுத்து அமர... அவன் சொன்னதை கேட்டும் கேட்காதவர் போல அமர்ந்திருந்தார் விஷ்வா...

விஜயாவை பார்த்தவன் மார்னிங்ம்மா... என்று புன்னகைக்க... விஜயாவும் புன்னகைத்தபடி மார்னிங் ஆதி என்று காஃபியை ஊற்றி கொடுத்தார்...

சில நிமிடம் அங்கே மௌனம் நிகழ விஜயா பேச தொடங்கினார்... ஆதி இன்னிக்கு அப்பாவ செக்கப்காக அழைச்சுட்டு போகனும் எனும்போதே இடையிட்ட ஆதி...

நான் நேத்தே செல்வா அங்கள்கிட்ட கால் பண்ணி சொல்லிட்டம்மா... 11 மணிக்கு அபாய்ட்மெண்ட் இருக்கு... ஆஃபிஸ்க்கு போயிட்டு கதிர அனுப்பி வைக்கிற என்று சொல்லும்போதே இடையிட்டார் விஷ்வா...

விஜி நான் எந்த செக்கப்க்கும் போக மாட்ட... அதுதான் எதும் பாக்குறது இல்லனு முடிவாகிறுச்சே அப்பறம் எதுக்கு இந்த தேவை இல்லாத செக்கப், ஆப்ரேஷனெல்லாம்... செத்தா செத்துட்டு போற என்று சொல்ல...

விஜயா பதறியபடி,விஷ்வா என்ன பேசுறீங்க? என்று அழ ஆரம்பித்தார்...

பின்ன என்ன பேச சொல்ற விஜி... இங்க எல்லாரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு இருக்கும்போது நானும் என் இஷ்டம் எதுவோ அததான் பண்ணுவ... நான் எந்த செக்கப்க்கும் போக போறது இல்ல... எந்த ஆப்ரேஷனும் பண்ணிக்க போறது இல்ல என்றார் உறுதியாக...

விஜயாவின் அழுகை விம்பலாக மாற... தாய் அழுவதை பார்க்க முடியாமல் தந்தையிடம் பேச ஆரம்பித்தான் ஆதி....

அப்பா எந்த விஷயத்தை கொண்டு போய் எதுல சேக்குறீங்க? நீங்க இப்படியெல்லாம் பேசும்போது அம்மாவோட மனசு எவ்வளவு கஷ்டபடும் கொஞ்சமாச்சு யோசிங்க... அம்மாக்காக இந்த ஆப்ரேஷன நீங்க செஞ்சுதான் ஆகனும்... இந்த பிடிவாதமெல்லாம் வேணா ஆதி உறுதியாக கூற...

என்ன ஆர்டர் போடுறியா? நான் சொல்றத நீ கேக்காம இருக்கும்போது நீ சொல்றத நான் ஏன் கேட்கனும்... இப்ப சொல்ற கேளு... நீ கல்யாணம் பண்ணிக்காம நான் எந்த ஆப்ரேஷனும் பண்ணிக்க போறது கிடையாது... இதுதான் என் முடிவு... இத நான் மாத்த போறதும் கிடையாது என்று கூறியவர் அங்கிருந்து பட்டென எழுந்து சென்று விட்டார்.

இப்போது ஆதியின் கோபம் உச்ச கட்டத்தை அடைய தந்தையின் மீது காட்ட முடியாத கோபத்தில் டேபுளில் ஓங்கி அடித்தான்...

விஜயா பதறியபடி... ஆதி என்று அவன் கரம் பற்ற... அவர் கைகளை உதறி விட்டவன்... திரும்பியும் பாராது காரை நோக்கி விரைந்தான்... கதிர் கார் எடுங்க என்று சொல்லி விட்டு உள்ளே அமர்ந்தவன் கண்களை மூடி சீட்டில் தலை சாய்த்து கொண்டான்...

அவன் அமர்ந்ததும் வேகமாக ஓடி வந்து காரை ஸ்டார்ட் செய்த கதிர் சார் ஆஃபிக்கா என்று கேட்க...

ம்....என்றான் கண்களை மூடியபடியே...அடுத்த நிமிடமே கார் அலுவலகத்தை நோக்கி நகர்ந்தது.

விக்ரம் ஆதித்யன்(ஆதி) இவன்தான் நம் கதையின் கதாநாகயகன்... விஷ்வா மற்றும் விஜயாவின் ஒரே மகன்... அழகான ஆண்மகன்... ஆறடி உயரம்... அமைதியாக இருப்பவன். தன் அன்னையிடம் மட்டும் மனம் திறந்து பேசுபவன்... சற்று முன்பு வீட்டில் நடந்த வாக்கு வாதம் இவன் திருமணத்திற்காகதான் இருந்தது.மூன்று வருடங்களாக தூக்கம்,சந்தோஷம்,நிம்மதி இதையெல்லாம் தன் காதலி மஹாவால் தொலைந்து நிற்கிறான்.2 வருடமாக உயிருக்கு உயிராக காதலித்தவள் வேறு ஒருவனை மணந்து கொண்டதால் காதல்,திருமணம் இவற்றிலெல்லாம் ஒருவித வெறுப்பு ஏற்பட்டு விட்டது. ஆனால் இவனையே உயிராக நினைத்திருக்கும் நம் கதாநாயகி ப்ரியாஇவன் முட்கள் நிறைந்த வாழ்க்கையில் பூக்கள் பூக்க வைப்பாளா? இது கதையின் போக்கில்தான் தெரியவரும்....

கார் ஆஃபீஸில் நிற்க கதவை திறந்து இறங்கிய ஆதி கதிரை பார்த்தபடி... அப்பாவையும் அம்மாவையும் 11 மணிக்கு ஹாஸ்பிடல் செக்கப்காக கூட்டிட்டு போங்க கதிர் அம்மா கொஞ்சம் பயபடுவாங்க கூடவே இருந்து பாத்துக்கோங்க என்று சொல்ல...

சரி சார் நான் பாத்துக்குற என்று சொல்லி விட்டு நகர்ந்தான் கதிர்...

தன் கேபினில் வந்து அமர்ந்தவனுக்குதான் வேலையில் மனம் செல்லவில்லை... காலை தந்தையுடன் நடந்த வாக்குவாதமே மனதில் ஓடி கொண்டிருந்தது.ஏன்ப்பா ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டின்றிங்க? காதல்,கல்யாணம் இதுக்கெல்லாம் தகுதி இல்லாதவன்நான் , இல்லனா நான் உயிரா நினச்ச மஹா என்னை விட்டுட்டு இன்னொருத்தன கல்யாணம் பண்ணிட்டு போயிருப்பாளா? எத்தனை ஆசைகள், எத்தனை கணவுகள் எல்லாமே ஒரே நிமிஷத்துல தூக்கி எரிஞ்சுட்டு போயிட்டா... இனியும் யாரையும் நம்பி அந்த காதல் ஏற்படாது... நான் அனுபவிச்ச வலி போதும் என்று மனதில் சிந்தனைகளை ஓட்டியபடியே அமர்ந்திருக்க... தொலைபேசி ஒலித்தது அதில் சுயம் அடைந்தவன்... எடுத்து பார்க்க கதிர்தான் அழைத்திருந்தான்....

ஹலோ கதிர் சொல்லுங்க

எதிர் முனையில் இருந்து சார் அப்பா ஹாஸ்பிடல் போக மாட்டனு அடம் பிடிக்கிறாரு...

அப்பாகிட்ட ஃபோன கொடுங்க ஆதி கூற சில நிமிடங்கள் மௌனம் நிகழ கதிர் சார் என்றான்...

என்ன பேச மாட்டனு சொன்னாரா?ஆதி கேட்க

ஆமா சார் என்றான் தயங்கியபடி

சரி விடுங்க நாளைக்கு நானே கூட்டிட்டு போற... கார ஆஃபிஸ்ல கொண்டு வந்து விட்டுருங்க என்று ஃபோனை துண்டித்தான்

பெரும்மூச்சை இழுத்தபடி எழுந்து ஜன்னல் பக்கம் வந்தவன் கர்ட்டனை விலக்கி விட்டு பணியாளர்களை நோட்டம் விட ஆரம்பித்தான்... அவன் எதிரிலே ப்ரியாவின் இறுக்கை இருக்க சிஸ்டம் முன்பு தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள் ப்ரியா...

இவளுக்கு என்ன ஆகி விட்டது என்று நினைத்தவன் அவள் கம்ப்யூட்டரை பார்க்க சிஸ்டம் வேலை செய்யவில்லை என்பதை அறிந்து கொண்டான்...

வேலை இல்லாத ப்ரியா மதுவை சிண்ட நினைத்து டேபுளில் இருந்த பேனாவை எடுத்து மதுவின் தலையில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதவள் போல அமர்ந்து கொண்டாள்.

அடி வாங்கிய மது சுற்றும் முற்றும் பார்க்க எல்லோரும் அவரவர் வேலையில் மூழ்கி இருந்ததை பார்த்து விட்டு கீழே விழுந்த பேனாவை எடுத்த டேபுளில் வைத்து விட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க தொடங்கினாள்.

இப்போது ப்ரியா மீண்டும் பேனாவை எடுத்து மதுவின் மீது வீசி விட்டு அமர இது ப்ரியாவின் வேலைதான் என்று அறிந்தவள் அவள் வீசிய இரண்டு பேனாக்களையும் அவள் தலையிலே வீசினாள்...

அடி வாங்கிய ப்ரியா தலையை தேய்த்தபடியே மதுவை பாவமாக பார்க்க... உதை வாங்குவ என்று ஜாடையிலே மிரட்டினாள் மது...

இந்த கூத்தை கேபினில் இருந்து பார்த்த ஆதி தன் கவலையையும் மறந்து புன்னகைத்து கொண்டிருந்தான்... சும்மாவே இருக்கமாட்டாளா? துறுதுறுனு எதாச்சு பண்ணிகிட்டு என்று ப்ரியாவை பார்த்து முணுமுணுத்தவன்... மீண்டும் தன் இறுக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்... அவ்வளவு நேரம் தவித்து கொண்டிருந்த மனம் ப்ரியாவின் குறும்பை பார்த்து ஏனோ லேசாகி இருந்தது... கணினியை திறந்தவன் தன் வேலையில் மூழ்கினான்.

இரவு வேலைகளை முடித்து விட்டு கேபினில் இருந்து வெளியேறிய ஆதி ப்ரியா வீடு செல்லாமல் கணினியின் முன்பு அமர்ந்திருப்பதை பார்த்தான்...

ப்ரியா நீங்க இன்னும் வீட்டுக்கு போகல என்றபடி அருகில் வர...

இல்ல சார் ஒரு 15 மினிட்ஸ்ல கிளம்பிற்ற என்று வேலையில் கவனம் செலுத்தினாள்....

கடிகாரத்தில் மணியை பார்த்த ஆதி... ப்ரியா இட்ஸ் டூ லேட்... எதுவா இருந்தாலும் நாளைக்கு பாத்துக்கலாம் விடுங்க என்று கூற அவளோ பிடிவாதமாக சார் ஒரு பத்து நிமிஷம்தகன் முடிச்சற்ற... இன்னிக்கு இது கிளியர் பண்ணிட்டா நாளைல இருந்து புது டாஸ்க் ஆரம்பிக்கலாம்.... என்றாள்.

சரி சீக்கிரம் முடிங்க என்று சொல்லிவிட்டு அருகில் உள்ள இறுக்கையில் அமர்ந்து ஃபோனை நோண்ட ஆரம்பித்தான்... ப்ரியாவின் பத்து நிமிடம் அறைமணி நேரமாகியும் முடியவில்லை, கொஞ்சம் பொறுமை இழந்த ஆதி,ப்ரியா டைம் ஆச்சு,நாளைக்கு பாத்துக்கலாம் விடுங்க என்று சொல்ல

அவள் கேட்காது சார் ஒரு 5மினிட்ஸ் என்றாள்...

என்னா ஒரு பிடிவாதம் என்று மனதில் சொல்லி கொண்டவன்... எங்க நான் பாக்குற என்று எழுந்து சென்று சிஸ்டத்தில் பார்வை செலுத்தினான்.

அவன் ஒரு கரத்தை டேபுளில் உண்றிபடி கணினியில் ஏதோ டைப் செய்து கொண்டிருக்க,அவன் தோழ் ப்ரியாவின் தோழை உறசி கொண்டிருந்தது.ஆதியின் இவ்வித நெருக்கம் ப்ரியாவை ஏதோ செய்ய ஆரம்பித்தது... அவனின் ப்ரத்யேக வாசனை அவள் நாசியில் நுழைய அதை இழுத்து தன் உயிரிலே கலக்க விட்டாள் ப்ரியா.... அவன் கணினியில் கவனம் செலுத்தி இருக்க... அவள் கண்களோ அவன் முகத்தையே பார்த்து கொண்டிருந்தது. அவனது உயிரோட்டமான கண்கள் அதில்தான் அவள் தன்னை முதல்முறை தொலைத்தாள். நெற்றியில் அழகாக ஆடி கொண்டிருக்கும் கேச கண்றுகள்,நீளமான முக்கு,வலது கண்ணத்திற்க்கும் காதிற்கும் இடையில் இருக்கும் அந்த மச்சம்,அவன் மேல் இதழை கொஞ்சமாக மறைத்திருந்த மீசை பல நாட்கள் ஷேவ் செய்ய படாத தாடி அதை கண்டவள் உதட்டை சுழித்தபடி,இத எடுத்தாதான் என்னவான் என்று மனதுக்குள்ளே செல்லமாக திட்டி கொண்டாள்...இப்படி சிறு புன்னகையோடு அவனை பச்சையாக வைத்த கண் வாங்காயல் சைட் அடித்து கொண்டிருக்க... ஆதியின் தொலைபேசி ஒலித்தது. அதில் தன்நிலை அடைந்தவள் அவசரமாக தன் பார்வையை அவனிடமிருந்து விலக்கி விட்டு எங்கோ பார்த்தபடி அமர்ந்து கொண்டாள்.

அவனும் ஃபோனை எடுத்து பார்க்க விஜயாவின் அழைப்பாக இருந்தது... ப்ரியா ஒரு தடவை சிஸ்டம் ஆஃப் பண்ணி ஆன் பண்ணுங்க என்று சொல்லி விட்டு ஃபோனை எடுத்தவன் ம் சொல்லுங்கம்மா என்று அங்கிருந்து நகர்ந்து விட்டான்...

அவன் உறசிய தோழை தொட்டு பார்க்க...அவள் உடலே சிலிர்த்துதான் போனது. அவள் மனமோ ஏய் ப்ரியா ரொம்ப ஜொல்லு விடாத ஒழுங்கா வேலைய பாரு என்று கவுண்டரை போட.. சரி சரி பாக்குற என்று முணுமுணுத்தவள் தன் வேலையில் கவனம் செலுத்தினாள்.

ஓராமாக ஃபோனில் பேசியபடி வந்தவன் ஆஃபிஸ்லதாம்மா இருக்க என்று கூற...

எதிரில் இருந்து நான் மாமா வீட்ல இருக்க போகும்போது என்னயும் பிக்கப் பண்ணிக்க என்று விஜயா சொல்ல....

சரிம்மா... நான் கிளம்புனதும் கால் பண்ற வெளிய வந்து வெயிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டு ஃபோனை வைத்தவன் திரும்பி பிரியாவை பார்க்க... அவள அங்கே இல்லை.

அதுக்குள்ள போயிட்டாளா? என்று நினைத்தவன்... வெளியேற பார்க்க... ப்ரியா ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியேறியபடி சார் போலாமா?என்றாள். அவனும் ம் என்றபடி வெளியேறினான்.

வெகு நேரம் ஆனதால் லிஃப்ட்டும் மூட பட்டிருக்க... இருவரும் படியில் இறங்க ஆரம்பித்தனர்.ஆதி மௌனமாக வந்து கொண்டிருக்க ப்ரியாவுைக்கு என்ன பேசுவது என்றே புரியவில்லை.

ஏதாச்சு பேசுறானா பாரு ஊமை கொட்ட... என்று மனதில் செல்லமாக அதட்ட... அவள் மனமோ இது வேலைக்கு ஆவதுடி நீயே ஏதாச்சு பேசி கரெக்ட் பண்ணு என்று சொல்ல... அவளும் பேச நினைத்து சார் என்றாள்.

அதற்கு இடையில் கரடி போல நுழைந்தது மதுவின் தொலைபேசி அழைப்பு...அதை எடுத்து பார்த்தவளுக்குதான் அத்தனை கோபம்... இவ ஒருத்தி கரெக்டான நேரத்துல காரியத்தை கெடுத்துருவா என்று முணுமுணுத்த ப்ரியா மனமே இல்லாமல் ஃபோனை எடுத்தபடி ம் ஹலோ என்றாள்.

ஏய் ப்ரீ என்னடி பண்ற? ஏன் ஃபோனே எடுக்கல மது திட்ட...

நான் ஆஃபிஸ்ல வேலைய முடிச்சுட்டு இப்பதான் கிளம்பிட்டு இருக்க மது... மொபைல் சைலடால இருந்தது அதனாலதான் தெரியல

என்னது ஆஃபீஸ்ல இருக்கியா? டைம் என்னாச்சு தெரியமா? இவ்வளவு நேரம் அங்க என்னடி பண்ற? மது அக்கறையாக கேட்க...

கொஞ்சம் கடுப்பில் இருந்த ப்ரியா ம்... இங்க ஆஃபிஸ் இடுஞ்சு விழ போகுது அதுதான் தூக்கி பிடிச்சுட்டு நிக்குற வேணும்னா நீயும் வாயே என்று நக்கலாக கூற...

சத்தமாக சிரித்த மது... நீ என்ன ஹனுமானா பிள்டிங்க விழாம புடிக்க என்று மேலும் கிண்டலாக மது கேட்க...

மது மொக்கை போடாதடி காதுல இருந்து ரத்தமே வருது... எதுக்கு கால் பண்ணுன அத சொல்லு

இப்ப இல்ல நீ வீட்டுக்கு போனதும் கால் பண்ணு அப்ப சொல்ற

ஓகே ப்ரியா தோலை குளுக்க...

மறக்காம பண்ணு ப்ரீ...பத்ரமா போ சரியா பை என்று மது சொல்ல...

ஓகே மேடம் என்று ஃபோனை துண்டித்தாள் ப்ரியா.

ப்ரியா பேசுவதை கேட்டு புன்னகைத்து கொண்டிருந்த ஆதி... நீங்களும் மதுவும் பெஸ்ட் ஃப்ரெண்டா ப்ரியா என்றான்

அவளும் புன்னகைத்தபடி ஆமா சார் நாங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் என்க...

ஓ அதுதான பாத்த... நீங்க ஆஃபிஸ்ல சேந்ததுல இருந்தே மதுகூட க்ளோஸா பழகுறீங்க காலேஜ் ஃப்ரெண்ட்னு பாத்தாலும்... அவங்க சென்னை காலேஜ்,நீங்க டெல்லி அதனாலதான் கேட்ட... என்று கூற

ம் இவன் நம்மல ஆஃபீஸ்ல சேந்ததுல இருந்து நோட் பண்றானா? என்று நினைத்தவள் அவனை பார்த்து புன்னகைத்தாள் மட்டும்.

இருவரும் கேட்டை வந்தடைய ப்ரியா ஸ்கூட்டியை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வர....ஆதி காரில் சாய்ந்தபடி நின்றிருந்தான்.அவன் அருகில் சென்று ஸ்கூட்டியை நிறுத்தியவள் கால்களை தரையில் உண்றி அமர்ந்தபடியே அப்ப நான் கிளம்புற சார் என்றாள்...

வாய் மட்டும்தான் செல்கிறேன் என்றதே தவிர மனம் இந்த நொடி நீழாதா என்று ஏங்கி கொண்டிருந்தது.ஆனால் அவன் மனதில்தான் எந்த வித ஏக்கமும் இல்லையே உடனே சரி என்று தலை ஆட்டியவன்,பத்ரமா போங்க வீடு சேந்ததும் கால் இல்ல மெஸேஜ் பண்ணுங்க என்றான்.

சரி சார் என்றவள்... மனமே இல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.அவள் சென்றதும் காரில் அமர்ந்தவன் விஜயாவை அழைக்க மாமா வீட்டை நோக்கி பயணித்தான்.

விஜயாவும் அவர் அண்ணி மைதிலியும் வாசலில் நின்றிருக்க... விஜயாவின் அருகில் காரை நிறுத்தினான் ஆதி...விஜயாவும் அமர்ந்து கொள்ள மைதிலி ஜன்னல் வழியாக ஆதியை பார்த்தபடி ஆதி நல்லா இருக்கியா? என்று கேட்க...

அவனும் நல்லா இருக்க அத்தை நீங்க? என்றான்...

ம்... உள்ள வராம வாசல்ல இருந்தே போறியே... வாப்பா தண்ணியாச்சு குடிச்சுட்டு போ ஆதி மைதிலி அன்பாக கூற

இல்ல லேட் ஆச்சு அத்தை பரவால்ல இன்னொரு நாள் வர என்று தட்டி கழித்தான்...

அவரும் அதற்குமேல் வற்புறுத்தாமல் சரிப்பா பத்ரமா போயிட்டு வாங்க என்று வழி அனுப்ப இருவரும் விடைபெற்று வீட்டை நோக்கி நகர்ந்தனர்.

விஜயா அமைதியாக அமர்ந்திருக்க... ஆதியே பேச துவங்கிவான்... மாமா வீட்டுக்கு எப்பம்மா வந்தீங்க? போனாலும் சாய்ந்திரமே திரும்பிருவீங்களே இன்னிக்கு ஏன் லேட்? அவன் சாதரணமாகதான் கேட்டான்...

விஜயா கோபத்தில் கண்கள் சிவந்தபடி... ஏன் நான் எங்க அண்ணன் வீட்டுக்கு வர கூடாதா? உங்கள மாதிரி யாருமே வேணானு என்னால இருக்க முடியாது என்று கடுமையாக கூற...

அவரின் கோபம் புரியாதவன்... உங்கள யாரு வர வேணானு சொன்னா? யாரு யார வேண்னு சொன்னாங்க? என்று கேட்க...

விஜயா ஒன்றும் பேசாது அமர்ந்திருக்க... வெகுநேரம் கழித்தே தான் மாமாவிடம் பேசவில்லை அவரை பற்றி அத்தையிடமும் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை என்பது நினைவு வர... அம்மா நான் மாமாகூட பேசலனு கோபமா? என்றான் இளகிய குரலில்....

அப்படி என்ன கோபம் ஆதி உனக்கு... காலைல அப்பா கூடவும்தான் சண்டை போட்ட இனி அவர்கூட பேசவே மாட்டியா? என்று ஆதக்கத்தோடு கேட்க

அம்மா அருந்ததிய கல்யாணம் பண்ண மாட்டனு சொன்னது நான்... அவருக்கு என்ன கோபம் இருந்தாலும் என்னை சொல்லிருக்கனும் அத விட்டுட்டு உங்களையும் அப்பாவையும் பத்தி பேசுனா கோவம் வராதா இவனும் நியாயம் கேட்க...

தப்பு செஞ்சா சொல்லதான் செய்வாங்க ஆதி... மாமா பாத்த பய்யன வேணானு சொல்லி அப்பாவ நான் கல்யாணம் பண்ணிக்கிட்ட... அஞ்சு வருஷமா என்கூட பேசாதவரு நீ பிறந்தந்தது தெரிஞ்சதும் அடுத்த நிமிஷமே உன்னை பாக்க வந்தாறுடா... அப்பவே சொன்னாறு எனக்கு பொண்ணுனு பொறந்தா அது உன் பையனுக்குதானு... இப்ப நீ அருந்ததிய வேணானு சொன்னதும் கோவம் வந்திருச்சு அதனால பேசிட்டாரு...இன்னிக்கு கூட அருந்ததிய பொண்ணு பாக்க வந்துருந்தாங்க...அப்பகூட ஆதிய ஒரு வார்த்தை கேளுனுதான் சொன்னாருடா...அவ்வளவு பாசம்டா உன்மேல.... எப்பவோ கோவத்துல பேசுனதூக்கு காலம் பூரா இப்படி பேசாம வாசல்ல இருந்தே திரும்புவியா ஆதி என்று கேட்க...

அம்மா மாமாகிட்ட பேச கூடாதுனு இல்ல... அவர் மறுபடியும் கல்யாண பேச்ச எடுப்பாறுனுதான் என்று இழுக்க...

அதெல்லாம் இனிமேல் பேசமாட்டாரு இன்னும் ஆறு மாசத்துல அருந்ததிக்கு கல்யாணம் நிச்சியமாயிருச்சு... மாப்பிளை உன்ன மாதிரி லோக்கல்னு நினச்சியா? ஆஸ்ட்ரேலியா என்று நக்கலாக கூற...

அப்படியா? இத முதல்லே சொல்லிருக்க கூடாதா மாமாக்கிட்ட பேசிறுப்பேனே என்று ஆதியும் நக்காக சொல்ல...

அவனை செல்லமாக முறைத்த விஜயா... இருந்தாலும் உனக்கு கொளுப்பு ஜாஸ்தி தான்டா என்றார் உதட்டை சூழித்து கொண்டே...

ஆதி காரை நிறுத்தி விட்டு ஜன்னலை திறந்து வெளியே பார்க்க.... என்ன ஆதி ஏன் கார நிறுத்திட்ட என்றார் வீஜயா...

சிறிதாக புன்னகை ஒன்றை சிந்தியவன்... அங்க பாருங்களே என்றான். அவரும் வெளியே பார்க்க... அங்கே ப்ரியா தன் ஸ்கூட்டி ஸ்டார்ட் ஆகாமல் அதை உதைத்தபடி போராடி கொண்டிருந்தாள்...

ப்ரியாவை பார்த்ததுமே விஜயாவுக்கு அவளிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது... சில நிமிடம் பார்த்தபடியே இருந்தவர் யார் ஆதி அந்த பொண்ணு? என்று கேட்க...

நம்ம ஆஃபீஸ்லதான் வேலை செய்றாங்கம்மா... பேர் ப்ரியா என்றான்.

உன்னோடு நான் இருப்பேன்❤️