...

4 views

காரணமேதுமின்றி
கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த வேளையில் ராஜாவிற்கு ஜஸ்வர்யாவுடன் நட்பு ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மலர்ந்தது .தன் காதலை சொல்லத்துடித்த ராஜா அதற்கான தருணம் பார்த்து காத்திருந்த வேளையில்.அதற்கான நேரமும் வந்தது .கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடியபோது ஜஸ்வர்யாவை முதல் முதலில் பட்டுப் புடவையில் பார்த்த ராஜாவிற்கோ எல்லை மீறிய காதல் ,காதலையும் சொல்லவைத்தது .ஜஸ்வர்யாவும் ராஜாவின் காதலை ஏற்றுக் கொண்டாள் ஒரு சில மாதங்களை மிகவும் சந்தோஷமாக களித்த காதல்ஜோடிக்கு வரவிருக்கும் ஆபத்து தெரியவில்லை.ஒரு நாள் ராஜாவின் வகுப்பைச் சேர்ந்த அபிலஷா எனும் பெண் உணவு இடைவேளையில் ராஜாவிடம் உன்னை ஜஸ்வர்யா கல்லூரியின் மொட்டைமாடிக்கு வரும்படி சொன்னதாக கூறினாள் .இதனை நம்பி ராஜாவும் மொட்டை மாடியில் சில நிமிடங்கள் காத்துக் கொண்டிருந்த வேளையில் ஜஸ்வர்யாவும் மொட்டை மாடிக்கு வருகிறாள் .வந்தவள் ராஜாவிடம் எதற்காக என்னை இப்போது மொட்டை மாடிக்கு அழைத்தாய் எனக் கேட்க ராஜாவோ நடப்பது தெரியாமல் குழம்பி நீதானே அழைத்தாய் என அபிலஷா கூறினாள் என கூற இருவரும் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு இறங்கி வந்த வேளையில் சரியாக அங்கு வந்த தலைமையாசிரியரிடம் மாட்டிக்கொள்ள மிகவும் பயத்துடன் தலைமை அலுவலகத்திற்கு சென்றனர் .அங்கு வரவழைக்கப்பட்ட வகுப்பாசிரியர் காதல்ஜோடி சொல்வதை கேட்காமல் இருவருக்கும் டிசி தருவதாக கூறி டிசியை எடுத்துவரச் செல்ல தயாரான வேளையில்.அவரை தடுத்த ராஜா வகுப்பாசிரியரிடம் .நான் தான் ஜஸ்வர்யாவை வரச் சொல்லி வற்புறுத்தினேன் ஒருவேளை வரவிட்டால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினேன் அதனால் தான் அவளும் அங்கு வந்தாள் ஆகவே டிசி வழங்குவதாக இருந்தால் எனக்கு வழங்குங்கள் என கூறினான்.அதனால் ராஜாவிற்கு மட்டுமே டிசி வழங்கி கல்லூரியை விட்டு நீக்கினார்கள்.ராஜாவோ மேலும் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பமில்லாமல் கிடைத்த வேலைகளை செய்து கொண்டு வீட்டில் இருந்தான்.இவ்வேளையில் ஒரு ஆண்டுகளாக ஜஸ்வர்யாவிடமிருந்து அழைப்பு வராததை எண்ணி மிகவும் மனமுடைந்திருந்த ராஜா எதார்த்தமாக அபிலசாவை பேருந்து நிருத்தத்தில் பார்த்த வேளையில் எதற்காக எனனையும் ஜஸ்வர்யாவையும் திட்டமிட்டு மாட்டிவிட்டாய் என கேட்க அவளோ எந்தவொரு பதிலும் கூறாமல் சென்றுவிட்டாள்.இவள் எதற்காக மாட்டிவிட்டாள் என குழப்பத்தில் இருந்த ராஜாவின் கைபேசி ஒரு நாள் அலற எடுத்து பேசினான்.அதில் ஜஸ்வர்யா பேச மிகவும் சந்தோஷமடைந்த ராஜாவிற்கோ பேரிடி காத்துக் கொண்டிருந்தது.கைபேசியில் பேசிய ஜஸ்வர்யா உன்னை எனக்கு பிடிக்கவில்லை எனக் கூற எதற்காக பிடிக்கவில்லை என ராஜா கேட்க காரணமெல்லாம் சொல்ல முடியாது என கூறிவிட்ட ஜஸ்வர்யா அ ழைப்பையும் துண்டித்து விடுகிறாள்.....இதனால் மிகவும் மனமுடைந்த ராஜா இன்று வரை விடை தேடி அழைகிறான் அபிலஸா எதற்காக மாட்டிவிட்டாள் என்ற காரணமும் புரியாமல் ஜஸ்வர்யா எதற்காக தன்னை வேண்டாமென கூறினாள் என்ற காரணமும் புரியாமல்....தொடரும் .........