...

0 views

உன்னோடு நான் இருப்பேன்
அத்தியாயம்-5

ஆதியின் சம்மதம்

தன் காதலை சொல்ல முடிவெடுத்த ப்ரியா... ஆதியின் கேபினில் தயிரியத்தோடுதான் நுழைந்தாள் ஆனால் அவன் கண்களை பார்க்க...எல்லாம் கற்பூரமாக கரைந்திருந்தது... இதயம் படபடவென அடித்து கொள்ள...நெற்றியில் வேர்வை முத்துக்கள் வழிய பயத்தோடு கைகளை பிசைந்து அவன் முன்னே நின்றவளை புரியாமல் பார்த்த ஆதி...

என்னாச்சு ப்ரியா ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? என்று கேட்டான்... அவ்வளவுதான்... அதற்குமேல் அங்க நின்றாள் மயக்கமே வந்துவிடும் போல இருந்தது ப்ரியாவுக்கு....
Sir i have to go என்று சொன்னவள் அவன் முகத்தையும் பாராமல் வேகமாக வெளியேறி இருந்தாள்...

புருவம் சுருக்கி அவளை பார்த்தவன்... தோலை குளுக்கிவிட்டு தன் வேலையில் கவனம் செலுத்தினான்....

விட்டால் போதும் என்று தன் இறுக்கையில் வந்து அமர்ந்தவள்... தலையை பிடித்து கொண்டாள்....

என்னது இது? எல்லோரிடமும் ஓயாமல் பேசுறவ நான்... இவர்க்கூட பேச ஏன் இவ்வளவு தயங்குற?... நாம நினைக்கிற மாதிரி இது அவ்வளவு ஈஸி இல்லையோ?... ஐயோ கடவுளே என்ன கொடுமை இது?... காதல சொல்லவும் முடியல சொல்லாம இருக்கவும் முடியல... பிள்ளையாரே நீ்தான் ஹெல்ப் பண்ணனும் என்று கடவுளிடம் கோரிக்கை இட...

அவரும் ஆகட்டும் என்றே ஆசீர்வதித்தார்✋️✋️✋️....

💕💕💕💕💕

ஆதியின் வீட்டில் விஜயாவும் விஷ்வாவும் அமர்ந்திருக்க விஜயாவே பேச தொடங்கினார்...

இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுங்க... பய்யன் கஷ்டபடுறானேனு கொஞ்சமாச்சு இறங்கி வரீங்களா? அவனும் அப்பனுக்கு ஏத்த புள்ள.... உங்க பிடிவாதம் அப்படியே இருக்கு...என்று சலித்து கொள்ள...

மெலிதாக புன்னகைத்தவர்... விஜீ முள்ள முள்ளாளதான் எடுக்கனும்...அதே மாதிரிதான் உன் பய்யனோட பிடிவாதத்த என் பிடிவாதம் எப்படி சரி ஆக்குதுனு பாரு... கொஞ்ச நாள்லயே நீங்க எந்த பொண்ண சொல்றீங்களோ அவளையே கல்யாணம் பண்ணிக்கிறனு சொல்லுவான்...

அதெல்லாம் அவன் சொல்லுவான் விஷ்வா... ஆனால் உங்களுக்கு எதாச்சு ஆச்சுனா??? அதற்கு மேல் பேச முடியாமல் குரல் நடுங்க...

ஐயோ விஜிம்மா என்று தன் மனைவியை இறுக்க அணைத்து கொண்டவர்... எனக்கு ஒன்னு ஆகாதுடா... என் பய்யன் கல்யாண வாழ்க்கைய சந்தோஷமா வாழ்றத பாக்கவே இருக்கு...என் பேரன் குழந்தைகளோட விளையாட இருக்கு... உன் தோழ்ல கை போட்டு "காலங்களில் அவள் வசந்தம்"னு டூயட் பாட இருக்கு இதெல்லாம் செய்யாம அதுக்குள்ள போயிருவனா என்ன?... அவர் குறும்பாக கேட்க...

அவரை வைத்த கண் வாங்காமல் முறைத்த விஜயா... இந்த வாய்க்கு ஒன்னும் குறச்சல் இல்ல என்று முறுக்கி கொள்ள... சத்தமாக சிரித்தே விட்டார் விஷ்வா...

கணவனின் தோழில் சாய்ந்தார் போலவே... என்னங்க என்று அழைக்க...

அவரும் சொல்லுங்க என்றார்...

அது வந்து... 2 நாள் முன்னாடி ஒரு பொண்ண பாத்த நம்ம ஆதியோட ஆஃபிஸ்லதான் வேல பாக்குறா.... எனக்கும் அந்த பொண்ண எனும்போதே குறுக்கிட்டார் விஷ்வா...

விஜி நான்தான் சொன்னல்ல என் ஃப்ரெண்டோட பொண்ணு இருக்கானு... அப்பறம் என்ன?

அது இல்லைங்க... நம்ம ஆதிக்கு அவள பிடிச்சுருக்குனு நினைக்கிற...

யாருக்கு? உன் பய்யனுக்கா? அப்பறம் ஏன் கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டின்றான்?...

ம்ச் அதெல்லாம் தெரியாது... எனக்கு என்னமோ இந்த பொண்ணுதானோனு தோனுதுங்க... அவங்க குடும்பமும் இயல்பா இருக்காங்க... நீங்களும் ஒருதடவை ப்ரியாவ பாத்திங்கனா உங்களுக்கும் அவள பிடிச்சு போயிரும்...

என்னது ப்ரியாவா?... என் ஃப்ரெண்டோட பொண்ணு பேரும் ப்ரியாதான் விஜி...

விஜயாவுக்குதான் எவ்வளவு சந்தோஷம்... என்னங்க சொல்றீங்க? கண்கள் மின்ன கேட்க...

ஆமா விஜி... என் ஃப்ரேண்ட் பேர் மோகன்... அவங்க மிஸஸ் ஜானகி என்று விஷ்வா சொல்லி கொண்டிருக்க... உடனே இடையிட்ட விஜயா... அவங்க வீடு மைலாபூர்ல இருக்கு கரெக்டிதன...

ஏய் உனக்கு எப்படி தெரியும் நீ அவங்க வீட்டுக்கு போயிருக்கியா?...

போயிருக்கியாவா? டின்னரே சாப்டுறுக்க...

அட பாவிங்களா... அம்மாவும் மகனும் சேந்து எனக்கு தெரியாம என்னெல்லாம் பண்றீங்க?ம்...

உங்ககிட்ட மறைக்கனும்னு இல்ல விஷ்வா... நேத்தே சொல்லாம்னு நினச்ச ஆனால் உங்க அப்ப மகனுக்கும் நடக்குற உலகப் போர்ல மனுஷ பேச முடியுமா?...

ஏய் என்ன சொன்ன?என்று விஷ்வா முறைக்க...

சரி சரி உடனே கோவபடதீங்க... அதுதான் பழ நழுவி பால்ல விழுதுல்ல அப்பறம் என்ன? நாளைக்கே போய் உங்க ஃப்ரெண்ட் கிட்ட பேசுங்க...

பழ நழுவுதுனு நாம சொன்னா போதுமா? அதுதான் உன் பையன் இருக்கானே கைக்கு எட்டுனத வாய்க்கு எட்ட விடாம பண்றதுக்கு... விஷ்வா அலுத்து கொண்டு சொல்ல...

அதெல்லாம் ஒன்னும் ஆகாதுங்க... நீங்க நாளைக்கே பேச போங்க மத்தத நான் பாத்துக்குற என்றதும்...

சரி நான் போற... ஆனா இப்போத்தைக்கு ப்ரியாவ பத்தி ஆதிக்கிட்ட எதுவும் சொல்லாத... நானும் ஆதி ப்ருயாவோட ஆஃபிஸ்லதான் வேல பாக்குறானு சொல்ல மாட்ட... ப்ரியாவுக்கு தெரிஞ்சா அவளே போய் பேசினாலும் ஆதி கெடுத்துருவான் என விஷ்வா எச்சரிக்க...

தன் கட்ட விரலை தூக்கி டன் என்று கூறினார் விஜயா....

💕💕💕💕💕

மறுநாள் காலை ஆதி காஃபி குடித்தபடி உணவு மேஜையில் அமர்ந்திருக்க... விஷ்வா தன் அறையில் இருந்து வெளியேறினார்... ஹாலில் வந்து அமர்ந்தவரை பார்த்த விஜயா...

என்னங்க காஃபி எடுத்துட்டு வரவா? என்று கேட்க...

இல்ல விஜி... ஒரு டம்ளர் தண்ணி கொண்டு வா என்று சொல்ல... தண்ணீரை எடுத்து சென்றார் விஜயா... அவரின் உதிர்ந்த முகத்தை பார்த்தவர்...

என்னங்க ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க? உடம்புக்கு முடியலயா?

அதெல்லாம் ஒன்னும் இல்ல விஜி... அவன் ஆஃபிஸ் போக லேட் ஆகிறுச்சு எதாச்சு சாப்ட கொடு போ என்று சொல்ல...
அவரும் சரி என்று சென்று விட்டார்...

ஆதிக்கு உணவு பரிமாறியபடியே... ஆதி இன்னிக்கு நீ ஆஃபிஸ்க்கு போய்தா ஆகனுமா?...

ஏன்ம்மா? என்னாச்சு?

அப்பாவோட முகமே சரி இல்லடா... எனக்கு என்னமோ பயமா இருக்கு ஆதி...

அம்மா என்னை என்ன பண்ண சொல்றீங்க? செக்கப்க்கு போலாம்னு சொன்னா கேட்க மாட்டின்றாரு... நான் என்னதான் செய்ய?...

உனக்கு தெரியாதது ஒன்னும் கிடையாது ஆதி... என்ன செய்யனுமோ அத செய் என்று சொல்லி விட்டு கிச்சனுக்குள் நுழைந்தவர்... காஃபியை எடுத்து கொண்டு விஷ்வாவுக்கு கொடுக்க செல்ல... விஷ்வா தரையில் விழுந்து கிடந்தார்...

என்னங்க என்று பதறி அடித்து ஓட... விஜயாவின் அலறும் சத்தம் கேட்டு ஆதியும் அங்கே வந்தான்... விஷ்வா விழுந்து கிடப்பதை கண்டவன் அப்பா என்று அருகில் வந்தபடி அவரை தூக்கி வாசலுக்கு விரைந்தான்...

கதிர் கார் எடுங்க என்று கதவில் இருந்தே கூற... கதிரும் உடனே காரை கிளப்பினான்... அடுத்த பத்து நிமிடத்தில் கார் மருத்துவமனையை சென்றடைந்தது...

விஷ்வாவுக்கு ஐ.சி.யூ வில் சிகிச்சை அளிக்க பட விஜயா வெளியே அமர்ந்தபடி அழுது கொண்டு இருந்தார்...

தன் தாய் அழுவதை பார்க்க மனம் வலித்தாலும்... இந்த நேரத்தில் நானும் உடைந்து விட்டால் சரியாக இருக்காது என்று தன்னை நிலை படுத்தியவன்... விஜயாவின் அருகில் சென்று அமர்ந்துபடி

அம்மா அழாதிங்க அப்பாக்கு ஒன்னும் ஆகாது என்று தேற்ற... அவன் தோழிலே சரிந்த விஜயா இன்னும் கதற ஆரம்பித்தார்...

அன்னையை தன் மார்போடு அணைத்து கொண்டவன்... என்ன சொல்லி தேற்றுவது என்று பேச்சற்று கிடந்தான்...

மருத்துவர் விஷ்வாவின் தோழனாக இருக்க... ஆதியின் அருகில் வந்தபடி ஆதி என்று அழைக்க...

அவசரமாக எழுந்தவன் அங்கள் அப்பாக்கு எப்படி இருக்கு? அவருக்கு ஒன்னும் இல்லையே?...

டோன்ட் வரி ஆதி... ஹி ஸ் ஓகே கொஞ்ச நேரத்துல கண் முழிச்சுருவான்... நீ அம்மாவ கூட்டிட்டு என் கேபினுக்கு வா என்று தன் அறைக்குள் சென்றுவிட...

விஜயாவை அழைத்து செல்வாவின் கேபினுக்குள் நுழைந்தான் ஆதி...

உக்காருங்க அண்ணி... உக்காரு ஆதி என்று செல்வா சொல்ல இருவரும் அமர செல்வா பேச தொடங்கினார்...

கடைசி செக்கப் இருக்கும் போதே நான் உங்க ரெண்டு பேர்கிட்டயும் சொல்லி இருந்த... சீக்கிரம் வந்தா சீக்கிரம் பைபாஸ் சர்ஜரி பண்ணனும்னு சொல்லி...

ஆதி இடையிட்டபடி இப்ப பண்ணலாமே அங்கிள்...

எப்படி முடியும் ஆதி?... ப்ளட் ப்ரஷர் லெவல் நார்மல் இல்ல...போனதடவ நான் கொடுத்த மருந்த அவன் எடுத்துக்கவே இல்லை... சர்ஜரிக்காக B.P,SUGAR இதெல்லாம் நார்மலா இருக்கனும்... இல்லனா கஷ்டமாகிறும் என்று கூற...

இதுவரை அமைதியாக இருந்த விஜயா மீண்டும் அழ ஆரம்பித்தார்...

அண்ணி அழாதீங்க ப்ளீஸ்... விஷ்வாவுக்கு ஒன்னும் ஆகாது... இப்ப நான் கொடுக்குற மருந்த டைம்க்கு சாப்ட கொடுங்க... ரெண்டு வாரம் கழிச்சு செக்கப் பண்ணலாம் B.P லெவல் சரி ஆனதும் சர்ஜரி பண்ணிரலாம் கவல படாதீங்க... என்று தேற்ற...

ஆதியும் விஜயாவின் கரத்தை இறுக்கமாக பற்றினான்...

ஆதியை பார்த்த செல்வா... அவன கொஞ்சம் கேர்ஃபுல்லா பாத்துக்கோ ஆதி... மாத்திரையெல்லா ஒழுங்கா போட வை... என்று சொல்ல...

சரி அங்கிள் நான் பாத்துக்குற என்று லேசாக தலை ஆட்டியவன் விஜயாவை அழைத்து அங்கிருந்து வெளியேறினான்...

சில மணி நேரங்களில் விஷ்வாவும் கண் விழித்து விட மாலை வீட்டிற்கு அழைத்து வர பட்டார்...

இரவு உணவை முடித்து விட்டு ஆதி அறைக்கு செல்ல போக...

ஏங்க இப்படி பிடிவாதம் பிடிச்சு தொலையிறீங்க? என்ற விஜயாவின் குரல் கேட்க

ஆதி அப்படியே நின்றான்...

உனக்கு எத்தனை தடவை சொல்றது விஜி... நான் இந்த மாத்திரைய போட்டுக்க மாட்ட என்று விஷ்வா கூற...

கதவை திறந்து கோப முகத்துடன் உள்ளே நுழைந்துருந்தான் ஆதி...

அப்பா நீங்க என்ன சின்ன குழந்தையா? எதுக்காக இப்படி அடம் பிடிக்குறீங்க? எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு அத்து மீறி போகாதீங்க... ஆதி அதட்டலாக கூற...

விஜயா குறுக்கிட்டபடி ஆதி... என்ன பேசுற அவர் உன் அப்பா... என்று சொல்லி கூட முடிக்கவில்லை...
விஜயாவை கண்கள் சிவக்க பார்த்தவன்... நீங்க பேசாதீங்கம்மா... எல்லாம் உங்களாளதான்... எதாச்சு சொல்லி என் வாய அடச்சுருங்க ஆனால் உங்க புருஷன்கிட்ட ஒன்னு சொல்லிறாதீங்க... அவர் என்ன செஞ்சாலும் சரி அப்படிதன...

என்னை திட்டுறதுக்கு பதிலா அவர திட்டி மாத்திரைய போட வெச்சுறுந்தா இந்நேரம் ஆப்ரேஷன் நடந்திருக்கும்... அவன் பல்லை கடித்து கொண்டு கூற...

தலை கவிழ்ந்து போனார் விஜயா... அதை கண்டதும் கோபமான விஷ்வா...

டேய்... மாத்திரை போடமாட்டனு அடம் பிடிச்சது நான்... தேவை இல்லாம அவள எதுக்குடா திட்டிட்டு இருக்க... இனிமேல் நீ அவள எதாச்சு சொன்ன பல்ல கழட்டிருவ ராஸ்கல்... உன்னை யாருடா என்னை ஹாஸ்ப்பிடல் கூட்டிட்டு போனு சொன்னா? நான் என்னமோ ஆகிட்டு போற உனக்கு என்ன வந்தது? உன் வேலைய பாத்துட்டு போக வேண்டியதுதான... விஷ்வா பொறிந்து தள்ள...

ஆதியின் கோபம் உச்ச கட்டத்தை அடைந்திருந்தது...

என்ன பண்றதுப்பா உங்கள மாதிரி கல்லு மனச கடவுள் எனக்கு கொடுக்கலயே... யாருக்கு தெரியும் நீங்க இப்படி என் உயிர வாங்குவீங்கனு... இல்லனா 5வருஷத்துக்கு முன்னாடியே யார் எக்கேடோ கெட்டு போங்கனு போயிருந்தாலாவது உங்க தொல்லை இல்லாம நிம்மதி இருந்துருப்ப என்று சொல்லி விட

அடுத்த நொடியே ஆதியின் கண்ணத்தில் விஜயாவின் கரம் பதிந்திருந்தது...

விஜி என்று விஷ்வா கத்த... கண்ணத்தை பற்றியபடி கண்கள் விரித்து பார்த்து கொண்டிருந்தான் ஆதி...

அவன் நினைவு தெரிந்த நாளில் இருந்து விஜயா ஒரு முறை கூட கை நீட்டியது கிடையாது... இன்று அவன் சொன்ன வார்த்தையில் நாம் என்ன செய்கிறோம் என்ற சுயத்திலே இல்லாமல்தான் அறைந்திருந்தார் விஜயா...

இத்தனை நாளாக இருவரில் யாருக்காக பேசுவது என்று தவித்த பொறுமை இன்று சுத்தமாக இழந்திருந்தார் விஜயா...

ஆதியை எரித்து விடுவது போல பார்த்த விஜயா.... போடா போ உனக்கு எங்க போகனும்னு தோனுதோ அங்க போ... நாங்க யாரும் எதும் கேட்க மாட்டோம்... மகன் சந்தோஷமா இருக்கனும்... அதுக்காக தான் என்ன ஆனாலும் பரவால்லனு இதெல்லாம் செய்யிறாருல்ல.... நீ இன்னும் பேசுவ இதுக்கு மேலயும் பேசுவ...


நீ கல்யாணம் பண்ணுனா பண்ணு இல்ல எக்கேடோ கெட்டு போ எங்களுக்கு என்னடா வந்தது...பெத்தவங்கன்ற கடமைக்காக நீ எங்ககூட இருக்கவே வேணாப்பா... நீ உன் இஷ்டத்துக்கு இரு நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம்......எப்படியும் கொஞ்ச நாள்ல இவர் போய் சேந்துருவாறு... அப்பறம் நானும் சீக்கிரமாவே போயிற்ற... நீ மட்டும் தனியா நிம்மதியா சந்தோஷமா இரு... என்று டேபுளில் இருந்த மாத்திரையை கையில் எடுத்தவர்... ஆதியின் மீது வீசி விட்டு

இங்க எந்த கல்யாணமும் நடக்க தேவையில்ல... எந்த ஆப்ரேஷனும் நடக்க தேவையில்ல என்று கடுமையாக சொல்லி விறுவிறுவென வந்து படுக்கையில் படுத்து கொண்டார்....

அதற்குமேல் ஆதியும் அங்கே ஒரு நிமிடம் கூட நிற்கவில்லை... வேகமமாக தன் அறையை நோக்கி வந்துவிட... விஷ்வாதான் மனம் நொந்து போனார்...

மகனுக்காக செய்த பிடிவாதம் தன் மனைவியை இவ்வளவு பாதிக்கும் என்று அவர் கொஞ்சம்கூட எதிர் பார்க்கவில்லை... விஜி என்று அவர் தோழை தொட...

பட்டென தட்டி விட்டவர்... நீ பேசாத... உன் பிடிவாதத்தையே கட்டிட்டு அழு... என்று கர்ஜிக்க அதற்குமேல் விஷ்வாவும் ஒன்றும் பேசவில்லை அமைதியானார்...

இங்கே அறைக்கு வந்த ஆதி... படாரென கதவை சாத்தி விட்டு கட்டிலில் வந்து அமர்ந்தவன்... கோபத்தில் பல்லை கடித்தபடி ஒரு கரத்தை முஷ்டியிட்டு மறு கர்த்தால் பிடித்தபடி அமர்ந்து கொண்டான்...

நேரம் செல்ல செல்ல கோபமும் வலியாக மாறியது... அந்த வலி இன்று முன்நாள் காதலி மஹாவை நினைவு படுத்தியது... மணமேடையில் வேறு ஒருவனோடு அமர்ந்திருக்கும் அந்த காட்சியே கண்ணில் தோன்ற இதயமே வெடித்து விடும் போல இருந்தது அவனுக்கு...

வேகமாக எழுந்து கபர்டை திறந்தவன் அதில் இருந்த சின்ன லாக்கர் ஒன்றை திறந்தான்... அங்கே வெள்ளி காப்பு ஒன்று இருக்க அதை தன் வலது கரத்தில் போட்டு கொண்டவன்... மென்மையாக இடது கரத்தால் அதை தடவினான்...

"விக்ரம்" என்ற மஹாவின் குரல் ஒலிக்க கண்களை இறுக்க மூடி கொண்டான்...

"ஏய் விக்ரம் இத உன் கையில இருந்து எப்பவும் கழட்டாத... இது நீ போட்டுகிட்டா நானே உன் கைகுள்ள இருக்குற மாதிரிடா"அன்று அவள் சொன்னது காதில் ஒலிக்க... இதயமே இறுகியது....

"நான் என்னைவிட உன்னைதான்டா நம்புற... நீ இல்லாம நான் இல்ல விக்ரம்" அந்த வார்த்தை இன்று பொய்யாகி இருந்தது...

அவசரமாக அந்த காப்பை கழட்டி மீண்டும் கபர்டில் வைத்து பூட்டியவன்... தன்னை நிலை படுத்த பால்கனியை நோக்கி விரைந்தான்...

இரவு நேரத்தில் தூரத்தில் மின்னி கொண்டிருந்த அந்த கடலில் தன் பார்வையை செலுத்தியவனுக்கு கரையில் மோதிய அலைகளை பார்க்க பார்க்க ஏனோ மனம் லேசாகி இருந்தது....அங்கிருந்த சோஃபாவில் சரிந்தவன்... கடலை பார்த்தபடியே உறங்கியும் போனான்...

"காதல் அலைகள் கரையை வந்து சேர்ந்தாலும் அது விட்டு செல்லும் நினைவு எனும் நுரைகள் மட்டுமே கரைக்கு சொந்தமடி"

காலை அறையில் இருந்து வெளியேறிய ஆதி அம்மா காபி என்று குரல் கொடுத்தான்...

இதோ வந்துட்ட என்ற மறு மொழி இன்று கேட்கவில்லை கிச்சனில் சென்று பார்க்க விஜயா அங்கு இல்லை... அப்பாக்கு ஏதேனும் ஆகி விட்டதா? என்ற எண்ணம் தோன்ற வேகமாக அறையை நோக்கி சென்றான்... கதவு கொஞ்சம் திறந்திருக்க விஜியும் விஷ்வாவும் கட்டிலில் அமர்ந்திருப்பதை பார்த்தவனுக்கு அப்போதுதான் உயிரே வந்தது...

திரும்பி கிச்சனை நோக்கி வந்தவன்... மூன்று கப்பில் காஃபியை ஊற்றி ட்ரேயில் வைத்து பெற்றோர்களின் அறைக்குள் நுழைந்தான்...

குட் மார்னிங்ம்மா என்று விஜயாவிடம் காஃபியை நீட்ட...

சிறு புன்னகையோடு மார்னிங் ஆதி என்று காஃபியை வாங்கி கொண்டார்...

குட் மார்னிங்ப்பா என்று விஷ்வாவின் முன்னே ட்ரேவை நீட்ட... அவரோ எடுக்காமல் அமர்ந்திருந்தார்... அதை கண்ட விஜயா ட்ரேவை வாங்கி ஓரம் வைத்தபடி ஒரு கப்பை எடுத்து ஆதியிடம் கொடுத்தபடி உக்காரு ஆதி என்றார் அவனும் வாங்கி கொண்டு அமர்ந்தவன்...அப்பா என்க

எந்த பதிலும் இல்லை...

ஆதியே பேச தொடங்கினான்...

அப்பா மாத்திரையெல்லாம் ஒழுங்கா போடுங்க... இந்த ஆப்ரேஷன் சீக்கிரமே எனும்போதே குறுகிட்ட விஷ்வா...

தன் மனைவியை பார்த்து, விஜி நான் என் முடிவ சொல்லிட்ட... என்னை திரும்பி திரும்பி வற்புறுத்த வேணானு எனும்போதே ஆதி இடையிட்டு இருந்தான்...

அப்பா நான் இன்னும் பேசி முடிக்கல... நீங்க எந்த பொண்ண சொல்றீங்களோ நான் கல்யாணம் பண்ணிக்கிற... ஆனால் ஒரு கண்டிஷன்... என் கல்யாணத்துக்கு முன்னாடியே உங்க ஆப்ரேஷன் நடந்தாகனும்...ஆதி கராராக கூற

அவனை ஏகத்திற்க்கும் முறைத்து விட்டு விஜயாவை பார்த்தபடி... எதுக்கு பொண்ணு பாக்குற மாதிரி பாத்துட்டு என் ஆப்ரேஷன் முடிஞ்சதும் கல்யாணத்த நிறுத்தவா? இந்த கதையெல்லாம் வேணா...என்க

ஆதியும் அப்பனுக்கு ஏத்த பிள்ளைபோல... அம்மா நான் சொல்றத சொல்லிட்ட... இன்னும் நம்பிக்கை இல்லனா ஆப்ரேஷன் முடிஞ்சாலும் கல்யாணம் பண்ணிக்கிறனு வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டு தரவா?.... அவன் கோபமாக கேட்க...

என்னங்க அதுதான் அவன் சரினு சொல்றால்ல அப்பறம் என்ன? விஜயா கம்மிய குரலில் கேட்க... விஷ்வா இன்னும் அமைதியாக இருந்தார்...

அதை கண்ட ஆதிக்கு கோபம் இன்னிம் கூட... பட்டென எழுந்து நின்றவன்... இப்ப என்ன நான் கல்யாணம் பண்ணுக்கனும் அவ்வவளவுதன... சரி வாங்க போல... பொண்ண காட்டுங்க இப்பவே தாலிய கட்டுற வாங்க....என்று பொறுமையை இழந்து கத்த...

அவனை நக்கலாக பார்த்த விஷ்வா... போலா போலானா... எங்க போறது? உனக்கு சம்மதம்னா இப்பவே எல்லாம் நடக்கனுமா? நான் நாளைக்குதான் பொண்ணோட அப்பா அம்மாகிட்ட பேச போற... அவங்க சரினு சொன்னாதான் பொண்ணு பாக்கவே போகனும் என்று சொல்ல...

அமைதியாக விஜயாவை ஒரு முறை பார்த்த ஆதி ஒன்றும் பேசாமல் வெளியேறி இருந்தான்...

இப்பதான் அவனே ஏதோ வழிக்கு வந்துறுக்கான்... கொஞ்சம் நல்லா பேசுனாதான் என்னாவா? விஜயா முறைத்தபடி கேட்க...

உன் பய்யன் கல்யாணத்துக்கு சரினுதான் சொல்லிருக்கான்... இன்னும் கல்யாணம் ஆகல... நீ நேத்து விட்டியே அறை அதை கொஞ்சம் முன்னாடியே விட்டுறுந்தா இந்நேரம் பேர பிள்ளைங்களே பிறந்திருப்பாங்க.... விஷ்வா நக்கலாக கூற...

ஓவரா பேசாம நீங்களும் மாத்திரைய ஒழுங்கா போடுங்க.... இனி சொல்றத கேக்காதவங்க யார இருந்தாலும் அடிதான் மருந்து... என்று சொல்லி விட்டு நகர...

ஒரு நிமிடம் விஜயாவை வாயை பிளந்தபடி பார்த்தவர்... ஒருவேளை என்னையும் அடிப்பாளோ?... பய்யன் பாசத்துல செஞ்சாலும் செய்வா... என்று முணங்கியவர் மாத்திரையை எடுத்து போட்டு கொண்டார்...

ஆதியின் சம்மதம் விஷ்வாவிற்கு ஏதோ ஒரு மூலையில் சந்தோஷமாகவே இருந்தது....

மகனின் சம்மதித்திற்காக காத்திருந்தவர் தாமதிப்பாரா என்ன? மறுநாளே ப்ரியாவின் வீட்டில் இருந்தார்

💕💕💕💕

உன்னோடு நான் இருப்பேன்❤️

மீண்டும் தொடரும்










© All Rights Reserved