...

5 views

( 12 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .
( 12 ) வஞ்சம் தீர்க்க வருகிறாள் .


பச்சை பசேலென இருக்கும் கிராமம் . எங்கு பார்த்தாலும் கண்ணுக்கு குளிர்ச்சியாக வயல்கள் . ஆங்காங்கே தென்னமரங்கள் நின்று கொண்டிருந்தது . ஆற்றில் சலசலவென தண்ணீர் ஓடியது . வயல்களில் பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர் . அங்கு உள்ள பெரிய க்ரௌன்டில் சிறிய குழந்தைகள் அனைவரும்  விளையாடி கொண்டிருந்தனர் .  அப்போது  அங்கு ஒரு பெண் வந்தாள் . ஐந்தரை அடி இருப்பாள் . வெள்ளை நிறம் . அந்த காலை வேலை குளிரில் கன்னங்களும் , முக்கும் சற்றே சிவந்து இருந்தது . பச்சை கலர் பாவடையும் , அதே பச்சை இலர் ப்ளௌசும் , இளம் பச்சை கலர் தாவனியும் அனிந்து இருந்தாள் அவள் . அவளை பார்த்ததும் சிறிவர்கள் அனைவரும் அங்கும் இங்கும் ஓட ஆரம்பித்து விட்டனர்  .


" எதுக்கு டா ஓடுரிங்க . உங்க கிட்ட நா நேத்து என்ன சொன்னேன் . என்னையும் விளையாட்டுக்கு சேத்துக்கனும்னு சொன்னேன்ல . ஆனா நீங்க , நா வரதுக்குள்ள , விளையாட ஆரம்பிச்சுட்டிங்க . " என்று கோபித்து கொண்டாள் அவர்களிடம் .

" அக்கா . சாரிக்கா . நீ வா விளையாடுலாம் . " என்று கூறினான் ஒரு சிருவன் .

" போ . நா வரல . " என்று இன்னும் முறுக்கி கொண்டாள் அந்த பெண் .


" அக்கா . நீ வரவர ஓவரா பண்ற . வா விளையாடுலாம் . " என்ற அந்த சிறுவன் , அவளின் கையை பிடித்து இழுத்தான் .


" அடேய் . எங்க அம்மா எனக்கு ஒரு வேல குடுத்துருக்கு . நா போய் அத பண்ணிட்டு வந்தர்ரேன் . " அந்த பெண் . அப்போது தூரத்தில் அவள் தாய் வருவது போல் இருக்கவும் " டேய் , எங்க அம்மா வந்துருச்சு டா . இப்போ எனன பண்றது . " என்று கேட்டாள் .


" எங்க கிட்ட கேட்டா . எங்குளுக்கு தெரியாது . " ஒரு சிறுவன் .


" சரி டா . நான் போறேன் . " என்றவள் , குறுக்கு வழியில் அவழ் வீட்டுக்கு ஓடி வந்தாள் . அங்கு அவள் தாய் எப்படி விட்டு சென்றாரோ அப்படியே இருக்க , அவள் அதை வேகவேகமாக சுத்தம் செய்து...