...

7 views

மாயை பேசுதடா 4
அதற்கு குட் மார்னிங் மனைவி, "பக்கத்து போா்சனில் ஒரே ஒரு  ஆள் தான் இருந்தார். இப்போ தான், நீங்கள் வரதுக்கு  பதினைந்து நாளுக்கு முன் வீட்டை காலி செய்து விட்டு போனார். காலி செய்யும் போது கூட ஏதோ  பிரெண்ட்ஸ்னு  சொல்லிட்டு இரண்டு பேரு  மட்டும் வந்து அவர் பொருளை எடுத்துட்டு போனாங்க." என்றாள்.

"ஏன் அவருக்கு  என்னாச்சு?.." என்றாள் ஜானு.

"இப்போ கோமாவில் இருக்கார். எப்போ நினைவு வரும்னு  சொல்ல முடியாது என்று டாக்டர் சொல்லிட்டார்னு.. ஹவுஸ் ஓனர் மனைவி தான் சொன்னாங்க. அவருக்கு கல்யாணம் ஆகல. சொந்தம்னு சொல்லிட்டு இதுவரை யாரும் வந்ததேயில்லை பாவம்... " என்று கூறினாள் குட் மார்னிங் மனைவி.

"ஏய் செல்லம், இதெல்லாம் எடுக்க கூடாது. ஆன்டி திட்டுவாங்க. அவங்களோட ஸ்டிக் இது. கொடுத்து விடு மா... " என்று ஜானு அவள் குழந்தை எடுத்த ஸ்டிக்கை  வாங்கி குட் மார்னிங் மனைவியிடம் கொடுத்தாள்.

"இது எங்களோடது இல்லை. பக்கத்து வீடு காலி செய்யும் போது ஒரு சில பொருட்களை வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டாங்க. அதை ஹவுஸ் ஓனர் சுத்தம் செஞ்சி கொண்டு இருந்தாங்க. எங்க வீட்ல இருக்கிற இரண்டு வாலுங்க  இது அழகாய் இருக்கு வேண்டும்னு கேட்டு வாங்கிட்டு வந்தாச்சு. சும்மா கையில் வச்சு விளையாடுவாங்க.  நீங்க குழந்தைட்ட  கொடுங்கள். நீ வச்சுக்கோ செல்லம்... " என்று ஆசையாக கொடுத்தாள் குட் மார்னிங் மனைவி.

மீண்டும்...