...

4 views

🤍ராட்சசனின் இரட்சகி=1️⃣ 🤍
ஆகாஷ் நில்லுடா... என்றாள் அனு அவனோ நிற்காது பைக்கில் ரவுண்டு அடித்தான் அவளை சுற்றி முகத்தில் மண் அபிஷேகம் நடக்க ஏற்கனவே அவனக்காக பார்த்து பார்த்து கொடுக்கப்பட்ட மேக்கப் இப்போது பூதம் போல் இருக்க... ஹேய் அங்கு பாருடா அனுவை இப்பதான் அவ்வளவு அழகா இருக்கா..! என்றான் அரவிந்தன்.ஆகாஷ் வாய் கொள்ளா சிரிப்புடன் வண்டியை நிற்பாட்டி சாரி டியர் என்று வர அவளோ அதற்குள் அரவிந்தன் அருகில் நின்றவள் என்ன சொன்ன...? ஹிம்ம்... ரொம்ப அழுக்கா இருக்கா என்றேன்... என்று கூறி வம்பு செய்தவனை ஒரு நொடி கூட யோசிக்காமல் கை அவனின் கன்னத்தில் இறங்கி இருந்தது ... அவனோ அனு... என்று கத்த ... ஸ் வாயை மூடு என்று விரல் உதட்டில் வைத்து கூறிக்கொண்டிருந்தவள் முன்பு நின்ற ஆகாஷ் அரவிந்தனிடம் சாரி டா மச்சான் நீ வீட்டிற்கு கிளம்பு என்றதும் அனைவரின் முன் அடித்து விட்டாளே இவன் என்னடா வென்றால் ஒன்றுமே சொல்லாமல் ச் சா... என்று கிளம்பிவிட்டான்
பிறகு என்னாச்சு அனு ஏன் இவ்வளவு கோவம் அரவியை அப்படி பண்ண என்றான் நான் சொல்றத கேட்கிறபோல ஓஹோ அவனுக்கு அடி விழுந்தால் நீ கேட்பியா... கை முஷ்டி இறுக்கியவன் என்ன... னு சொல்லு என்க.. வீட்டில் கேட்கிறார்கள் எப்போது கல்யாணம் பண்ணிக்க போற என்று ... அவனோ அவளை மாற்றும் விதமாக இப்போவே என்று கூறு என்றான்... விளையாட இது நேரமில்லை ஆகாஷ் ஓகே ஓகே சொல்லுமா... பொறுமையாக கேட்க உனக்கு வேலை கிடைத்து விட்டதா படிச்சிட்டு இருந்தியே இல்லம் மா இந்த எக்ஸாம் க்கு பிரிப்பேர் பன்னி இருக்கேன் எக்ஸாம் எழுதினா இந்த தடவை எனக்குதான் அந்த போஸ்டிங் புரியாத அவ்வளவு நேரம் இருந்த அன்பு காணாமல் போய் ஏன்டா இவ்வளவு நேரம் பொறுப்பு இல்லை கண்ட தருதலை அதும் தராதரம் தெரியாமல் சுற்றுவது மட்டும் உன் வேலை இல்லை என்று நக்கலுடன் பேச பேச...., அனு... என்று கத்தியவனின் சத்தத்தை விட அனு என்று கத்திக்கொண்டே அவளின் அக்கா வந்து நிற்க ஆகாஷ் கோவம் மட்டுப்படுத்த முயன்று தோற்றான் இருவரின் நிலை கண்டு கண்டுபிடித்து சரியாக யூகித்த அனுவின் அக்கா ஹேய் இங்க என்ன பண்றிங்க எனக்கு ரொம்ப பசிக்குது வாங்க சாப்பிடுவோம் என்று அழைக்க இருவரும் முறுக்கி கொண்டு நின்றனர். ஓஹோ டேய்... ஆகாஷவாணி... என்று எப்போதும் சொல்லும் கிண்டல் மொழியில் கூற அவனோ வேணாம் டி பண்ணு என்றதும் என்ன கொழுப்பா... டி போட்ட மொவனே உன் டப்பா வண்டியை தூக்கிடுவேன் என்று இல்லாத பலம் இருப்பது போல் புசு புசு கன்னத்தை குவித்து உடைப்பது போல் கூற அவனோ அவளின் சிறுபிள்ளை சேட்டையில் மனம் உவகை எழும்பி அம்மா தாயே வாங்க என்ன சாப்பிடணும் என்று திரும்ப அனுவோ இருவரின் பேச்சில் வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தாள் அப்பாடா சிரிச்சிட்டா அனுக்குட்டி என்று மூவரும் ஹோட்டல் சென்று உங்களுக்கு பிடிச்சதை சொல்லுங்க என்று எனக்கு எப்போதும் போல் பிரியாணி தான் உனக்கு அனு என்றான் எனக்கு சிக்கன் உனக்கு மட்டன் தானே ஆமாம் என்று மூவரும் பிரியாணி தான் கொஞ்சம் புது விதம் ஆகாஷ் இறால் பிரியாணி வாங்கிக்கொண்டு சாப்பிட அனு சீக்கிரம் சாப்பிட்டவள் மொபைலில் குறுந்தகவல் வர வெளியே சென்றாள்... போகும் அனுவை பார்த்தவன் பிரியாணி யை அளக்க எதிரில் அமர்ந்த அதாங்கம் ஜானகி (அனுவின் அக்கா) அவனின் உணர்வுகளை படித்தவள் டேய் பையா சாப்பிடும் போது உணவை அளக்க கூடாது புரியுதா ஹிம்கூம்.. என்று சலித்து கொண்டு அவளை பார்க்க என்ன.. என்றவள் வீட்டில் என்னை பற்றி அப்பா அம்மா என்ன சொல்றாங்க இவள் என்னமோ சொல்றா... அதுவா...கொஞ்சம் வலிக்கும் தான் ஆனால் சொல்வது என் கடமை என்று எங்க அப்பாவின் தூரத்து சொந்தம் அவங்க தங்கை போல் அவங்களுக்கு இரண்டு பசங்க அண்ணன் தம்பி உங்க வீட்டில் போன்றே... என்றவளை.
ஆகாஷ் சரி மேலே சொல்லு என்றதும் அவளோ அவனை விசித்திரமாக பார்த்துவைக்க மேலே பார்த்துவிட்டு அவங்களுக்கு என் தங்கை தம்பிக்கும்,அண்ணனுக்கு என்னையும் கேட்கிறார்கள் என்று கூற மறுபடியும் மேலே பார்த்துவிட்டு அதில் அண்ணன் எப்படி என்று தெரியாது தம்பி ஒரு விசேஷத்தில் தங்கையை பார்த்துவிட்டு திருமண வேண்டாம் என்று இருந்தவன் எனக்கு அந்த பெண்ணை பிடிச்சிருக்கு என்று கூறிவிட்டானாம் பேச்சுக்கு ஒரு தரம் மேலே பார்த்து பார்த்து சொல்லும் ஜானகியை என்னடி பண்ணு ஏதாவது நட்டு கழண்டு விழுந்துட்டா என்றான்... என்னடா.... எருமை மாடே கனன்ற கோவத்தில் முகம் சிவக்க கேட்க அவனோ அவளின் முகம் கோவத்தில் கூட சிவந்து காணப்பட்டதை கண்டு சீண்டும் விதமாக ஆமாம் டி.., டின் டப்பா நீதான் என கூறினான்......
தொடரும் 🌼🙏
அநபாயன் 🤍
© Ash(ஈசன் )