...

16 views

இப்படியும் சிலர்..
அது ஒரு குடியிருப்பு பகுதி..
அதனால் வீதிதான் விளையாட்டு மைதானம்

அதே வீதிதான் வாகன நிறுத்தமும் செய்யும் இடம்..

மாலையில் அங்கு பசங்க எப்போதும் போல் விளையாடிக் கொண்டிருந்தனர்..

அப்பொழுது யாரோ ஒரு சிறுவன் பேட்டிங் செய்த பந்து எவருடைய கையிலும் அகப்படாமல்..

காற்றை கிழித்துக்கொண்டு
வந்த வேகத்தில்...

அங்கு நிறுத்தி வைக்கபட்டிருந்த ஸ்கூட்டியின் முகப்பு கண்ணாடியை
பதம் பார்த்தது..

தேன் கூட்டில் கல் எறிந்த கதையாய்
மொத்த பேரும் அங்கு வந்து சேர..

பேட்டிங் செய்தவனை தவிர்த்து
அத்தனை சிறுவர்களும் திக்குக்கு ஒன்றும் திசைக்கு ஒன்றுமாய் பரந்து விட்டார்கள்..

இதுங்களுக்கு இதே வேலையா போச்சு.. என
எல்லோரும் அவரவர் பங்குக்கு திட்டி தீர்க்க..

அந்த ஸ்கூட்டிக்கு சொந்தமான
ஒரு பெண் மட்டும் முன்னால் வந்து நின்றாள்..

யாரு இப்படி பண்ணினது என கேட்டு முடிக்க..

" sorry கா நான் தான் பேட்டிங் பண்ணினேன் கண்ணாடில பட்டு உடைஞ்சுடுச்சு.. நான் அப்பாகிட்ட சொல்லி உங்களுக்கு வேற ஒரு கண்ணாடி புதுசா மாத்தி கொடுக்க சொல்றேன்க்கா.. "

அதெற்க்கெல்லாம் அந்த பெண் செவி கொடுப்பதாயில்லை..

இருந்த கோபத்தில்..
பளார்... என்று கன்னத்தில் ஒரு அறை விட்டாள்..
போதாதென்று
கொடு அந்த பேட்ட.. இது இருந்தால் தான இங்குட்டு விளையாட வருவ என வெடுக்கென்று பறித்துக்கொண்டு
கிளம்பிவிட்டாள்...

அழுது கொண்டு நின்ற அந்த சிறுவனை பார்த்த மற்ற
சிறுவர்கள்..

இவனுக்கு இது தேவையா..
பேசாம நம்மகூடவே ஓடி வந்திருக்கலாம்..

இப்போ என்ன ஆச்சுனு பாரு
உன் பேட்ட அந்த அக்கா புடிங்கிடுச்சு என்று கேலி செய்ய..

அழுது கொண்டே..
அந்த இடத்தில் இருந்து நகர்ந்தான்...

இப்படியும் சிலர்..✍️


.....................××××××××..............

எல்லா பசங்களையும் போல் அந்த சிறுவனும் ஓடியிருக்கலாம்..

உண்மையை சொல்ல துணிவோடு நின்றிருந்தவனை..
பாராட்ட வேண்டாம்..

உண்மையை பேசினால் கூட தண்டிக்கபடுவோம என்ற அச்சத்தை அந்த சிறுவனின் மனதில் விதைக்காமல் இருந்திருக்கலாம்... ✍️


மற்றுமொறு குறுங்கதையோடு..
உங்களை மீண்டும்
சந்திக்கிறேன்.. ✍️



© sha💕jan