நெடிய கழியும் இரா 2
சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை உணர்வு மனம் (Conscious Mind), உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind), தொலை நோக்கு மனம் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்தார்.
மேலும் உந்தப்படும் இயல்பு (Id), முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego), மீஅகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego) ஆகிய
மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார்.
சூப்பர் ஈகோ - ஒரு மனிதனுக்கு எல்லா குழப்பங்களையும் நிதானமின்மையையும் கோபங்களையும் பயங்களையும் விதைத்துக் கொண்டே இருக்கிறது. சமூகம் வழங்கியத சூப்பர் ஈகோ தான் மனிதனை இயக்கிக் கொண்டிருக்கிறது
ஈகோ - அவருடைய தன் முனைப்பாகவும்
இட் - வழங்கப்படுகிற கருப்பொருள் அவருடைய உந்துதலாகவும் ஆசையாகவும் இருப்பதாக சிக்மன் பிராய்ட் வரையறுத்து வைத்திருக்கிறார்.
- நன்றி விக்கிப்பீடியா
இனி கதை...
உள்ளம் கவ்விய சோகத்தை அவனது முகம் அப்படியே தத்தெடுத்திருக்க மருந்துக்கும் கூட கண்ணீர் துளிகள் பிறந்ததற்கான தடங்கள் மட்டும் அவரது கன்னங்களில் இல்லை.
தலையை கைகளால் தாங்கியபடி குனிந்தபடி உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருந்த கௌதமனை தோளில் கை வைத்து நிமிர்ந்து பார்க்க வைத்தார் அவனது சித்தப்பா சக்திவேல்.
"ஊருக்கு போற கிளைபாதைகிட்டே வந்துட்டோம். இன்னும் இருபது நிமிஷத்துல ஊர் எல்லைக்கு போயிருவோம்." என்று நினைவு படுத்தினார்.
அவனிடமிருந்து பதில் ஏதும் வராது இருக்கவே, "அப்புறம் இது ஏற்கனவே முக்கால்வாசி எரிஞ்சிப்போன சவம். இருட்டிடுச்சு. அதனால்..." என்றவர் சிறிது இடைவேளை விட்டு "சவத்தை
வீட்டுக்கு கொண்டு போக கூடாதுப்பா. நேரடியா சுடுகாட்டுக்கு தூக்கிட்டு போய் விடலாம்." என்றார்
ஆமென்றோ வேண்டாமென்றோ எந்த பதிலையும் கூறாது அப்போதும் அமைதியாகவே இருந்தான் கௌதமன்.
அவனின் மௌனத்தை புரிந்து கொண்டவர், "பாடையெல்லாம் கட்டி ரெடியா வச்சி இருக்காங்கன்னு இப்பதான் அண்ணன் போன் பண்ணாரு. ஊருக்கு வெளியே ஆலமரம் இருக்கு இல்லே. அங்கேயே இறங்கிக்கலாம்" என்று விஷயத்தை
மெதுவாக தெரிவித்தார்.
அதுவரை மௌனத்தை கடைபிடித்த கௌதம் இப்போது வாய் திறந்தான்
"பசங்க?"
"அது... குழந்தைங்க... வேண்டாம்... பயந்துடுவாங்க. பார்க்க வேண்டியவ மத்தவங்களை ஆலமரத்தாண்ட வர சொல்லியிருக்கேன். முக்கியமா அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் ஒரு முறை பாத்துட்டாங்கன்னா சவத்தை சுடுகாட்டுக்கு கொண்டு போய்விடலாம்" என்றார் சக்திவேல்.
ஆழமூச்செடுத்த கௌதமன்
"கடைசியா ஒரு தடவை கூட அம்மாவ பார்க்கவில்லையே... நீ எவ்வளவு பெரிய அரக்கன்னு பிள்ளைங்க கேட்டா..."
"இல்லடா.."
"ஆமாம் சித்தப்பா.. நாளையிலிருந்து யார் விரும்பினாலும் அவளை பார்க்க முடியாது. அதனால... தம்பிகிட்டே...