...

3 views

விதவையின் கடைசி கண்ணீர்...
கால ஓட்டத்தில் உயிரை யாரோ ஒருத்தருக்காய் பிடித்து வைத்துக்கொண்டு அடம் பிடிக்கும் ராக்காயி தான் மரனத்தோடு போராடிக்கொண்டிருக்கின்றால் ராக்காயிக்கு கிட்டத்தட்ட  80 வயது இருக்கும்
ஊரே ஒன்று கூடி உயிர்த்தண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அவள் தன் மூச்சை மட்டும் விட்டு விடுவதாக இல்லை ஆம் ராக்காயிக்கு இரண்டு பிள்ளைகள் ஒரு மகன் ஓர் மகள் கனவன் ராமு இளையவள் பிறந்து இரண்டு வயது முடிவிலே இறந்து விட்டான்...

ராமு ஓர் தெரு பொறுக்கி என்று தான் ஊர் மக்களால் அடையாளபடுத்த பட்டவன் அடிதடி வெட்டு குத்து, கொள்ளை,கட்டப்பஞ்சாயத்து என பால்ய வயதில் பள்ளிக்கூடம் கூட சென்றதில்லை ஆனால் தினம் தினம் போலீஸ் நிலையத்திற்கு மட்டும் செல்வதை வழமையாக வைத்திருந்தான்..

இவன் அடிதடி மட்டும் அல்ல போதைக்கு முற்றாக அடிமையானவன் கஞ்சா, கசிப்பு என கிடைக்கும் ஒன்றையும் விட்டு வைத்தில்லை இளம் வயதில் துடுக்குத்தனம் நிறைந்தவனாய் தோற்றத்தில் கம்பீர தன்மையும் அவனிடம் பல பெண்கள் சீரழிந்து போக காரணமாயிற்று. ஆம் அப்படி சிக்கியவள் தான் ராக்கயி. ராககாயி அவன் மாமன் மகள் அதனாலோ என்னவோ அவளை திருமணம் செய்து கொண்டான். ராக்காயி வயிற்றுப்பசிக்கும் வயிற்றுக்கு கீழே பசித்தாலும் வக்கனையாய் பரிமாறினாள்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது ராக்காயி திடிரென்று ஓர்நாள் மயக்கம் போட்டு விழ பயந்து போன ராமு அந்த ஊரு வைத்தியரை அழைத்து அவள் உடல் நிலையை பரிசோதித்தான் '" வைத்தியர் நாடி துடிப்பை அவதானித்து விட்டு பயப்படுறதுக்கு ஒன்னும் ராக்காயி மாசமா இருக்கால் என்று சொல்லி முடித்து புறப்பட்டார். ராக்காயிக்கு சந்தோஷம் ஆனால் ராமுக்கு பெரிதாக சந்தோஷம் இல்லை அவன் முகத்தில். நாட்கள் நகர மூத்தவன் சின்ராசு பிறந்தான் வாழ்க்கை எவ்வித குறையும் இன்றி நகர்ந்து கொண்டே இருந்தது இளையவள் பாரிசாதமும் பிறந்த விட்டால். 

ராமுக்கு அவன் மகனை விட மகளின் மீதுதான் கொள்ளை பிரியம் எல்லா அப்பாக்களுக்கும் மகள்கள் தானே இளவரசிகள் இவன் மட்டும் என்ன விதிவிலக்கா என்ன. மகள் பிறந்து இரண்டு ஆண்டுகள் தான் அவளோடு சந்தோசமாகவே வாழ்ந்தான் யார் கண் பட்டதோ தெரியவில்லை ராமு புற்றுநோயில் பாதிக்கபட்டு படுத்த படுக்கை ஆகி விட்டான் அவன் நீண்ட நாட்கள் உயிர் வாழ விரும்பவில்லை அவன் கவலைகள் எல்லாம் அவன் மகள் தான் ஓர் மாதத்தில் அவன் உயிர் உடலை விட்டு பிரிந்தது.

குடும்ப சுமை அத்தனையும் ராக்காயி தலையில் வந்து விழுந்தது ராக்காயி கூலி வேலை செய்து இரண்டு குழந்தைகளையும் வளர்த்து வந்தால் நாற்பட நாள்பட அவர்கள் வளர்ந்து பள்ளிக்கு செல்லும் வயதை எட்டினர்.
இருவரையும் பள்ளிக்கு சேர்த்தால் ராக்காயி அவள் வீடு விடாக பத்து பாத்திரம் தேய்த்து வாழ்க்கையை ஓட்டி கொண்டு இருந்தாள்.
அந்த பணம் பிள்ளைகளின் படிப்பிற்கு பத்தவில்லை ஆனால் ராக்காயி பிள்ளைகளை படிப்பித்து நல்ல நிலைக்கு ஆக்கிவிட வேண்டும் என்ற வெறி மட்டுமே அவளிடம் மிச்சமாக இருந்தது.

அதற்கு அவளிடம் அவள் உடலை தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை குழந்தைகளின் வயிற்றை நிரப்பவும் படிப்பிற்கும் அவள் தேர்ந்தெடுத்தது தன் உடலை விற்பது ஆம் அவள் நல்ல வாட்டசாட்டமான பெண் என்பதால் அவளை ஆண்கள் நிறையப் பேர் அணுகுவது வழக்கமாகி விட்டது. குழந்தைகளின் பசியை விட அவர்களின் படிப்பை விட அவளுக்கு அவள் உடல் வலி ஒரு பொருட்டாக தெரியவில்லை.

இப்படியே நாட்கள் நீண்டது பாவம் ராக்காயி வாழ்க்கையில் மட்டும் எந்த விடிவுகாலம் பிறக்கவில்லை அவளை அணுகும் ஆண்கள் கூட அவளை சதைகளின் காட்சி பொருளாகவே பார்த்தனர் பாவம் அவள் ஆடையை உடலை மறைக்க போட்டாலும் அவள் மனவலி மற்றும் உடல்வலியை  மறைக்க மட்டும் அவளால் முடியவில்லை. உடலின் நரம்பு மண்டலங்களை விட நகக்கீறல்களின் தழும்புகள் தான் ஏராளம்.

அதுமட்டும் அவளை விட்டு வைக்கவில்லை ஊர்மக்களின் அவதூறு வார்த்தைகளும் அவளை கொலை செய்தன அவளுக்கு ராக்காயி என்ற பெயரின் புலக்கத்தை விட அந்த ஊரில் அவளுக்கு "தாசி, விபச்சாரி, ராசி இல்லாதவள்" என பல பெயர்கள் இருந்தாலும் அவள் அத்தனையும் பொறுத்துக் கொண்டே ஓடிக்கொண்டே இருந்தால்.

இத்தனைக்கும் நடுவே இரண்டு கார்களின் சத்தம் ராக்காயி படலையை திறந்து விட பரமன் ஓடினான் இவன் ஓர் முடவன் அவனால் சரியாக எழுந்து நிற்க கூட முடியாது அவனுக்கு என்று பெரிய கதை ஒன்று உண்டு அவன் முடவனாக பிறந்த காரணத்தால் தாய் தந்தையால் வெறுக்க பட்டு சந்தையில் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தவன் ஓர் நாள் நல்ல ""ஜொரம்"" அந்த சமயம் மயக்கம் போட்டு ராக்காயி சந்தை செல்லும் போது வழியில் கிடந்தான் உடனே ராக்காயி அவனை தூக்கி ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினாள் அவனை காப்பாற்றி தன்னோடே வைத்திருக்கின்றால்.

இவன் தான் மூத்த பிள்ளை போல சின்ராசு பாரிசாதம் இருவரும் இவன் மேல் கொள்ளை பிரியம். படலையை திறந்து விட்டு குடு குடு என ஓடிவந்த பரமன் ஆத்தா நம்ம சின்ராசு, பாரிசாதம் வந்திற்றாங்க என்று உரக்க கத்தினான் பரமன். ராக்காயி தலையை சற்று தாழ்த்தி இருவரும் நடந்து வரும் கம்பீரத்தை பார்த்து புலங்காகித்தால். அவளால் இருவரையும் கட்டி அனைத்து கதறி அழுது முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது ஆனால் அவளால் முடியவில்லை.

உடனே சின்ராசு, பாரிசாதம் இருவரும் ஓடிவந்து கட்டியணைத்து கதறி அழுதனர் ஆம் இருவரும் அழுகையில் ஒரு சமயம் உறைந்து போனது ராக்காயி வீடே. பரமனும் கதறி அழுதான் இந்த அனாதை க்கு இனியாரு துணையா யாரு இருக்கப்போறங்களோ தெரியாது என கதறினான். பாரிசாதம் கண்ணீர் ராக்காயி முகத்தில் மேல் விழுந்தது ஆம் அவளின் அத்தனை காத்திருப்புகளும் பாவங்களும் கரைந்தது. ராக்காயி உயிர் மெல்ல அவளை விட்டு கழன்றது.

ஆம் அன்று ஊர்மக்களால் ஊதாசினம் செய்யப்பட்ட , விபச்சாரி, தாசி, ராசியில்லாதவள் என முத்திரை குத்தப்பட்ட ராக்காயின்  மூத்த மகன் சின்ராசு மிகப்பெரிய புற்றுநோய் வைத்தியர் இளையவள் பாரிசாதம் அந்த மாவட்ட கலெக்டர் ஆம் பிள்ளைகளை வளர்க்க ராக்காயி தெரிவு செய்த தொழில் விபச்சாரமாக இருந்தாலும் இன்று அவள் இரண்டு குழந்தைகளையும் வைத்தியர் கலெக்டர் ஆக்கி அழகு பார்த்திருக்கின்றால்.

ஆம் ராக்காயி தாய் என்பதை நிரூபித்து காட்டினாள் பிள்ளைகளும் அவள் ஆசையை நிறைவேற்றி காட்டினார்கள் இன்று ராக்காயி மருத்துவமனை என்ற பெயரில் சின்ராசு நடத்தி வரும் இளவச மருத்துவமனையில் நாகூசமல் ராக்காயியை தாசி, ராசி இல்லாதவள் ,விபச்சாரி என ஒதுக்கிய ஊர்மக்கள் அவர்கள் பாதம் கூசும்படி குற்ற உணர்வோடு சென்று திரும்புகின்றனர் இலவச மருந்து எடுத்துக் கொண்டு...

© கவிதைபித்தன்.,,