...

8 views

காதல் பயணம்-5
காதல் பயணம்-5

அஸ்வின் சோகத்தோடு செல்கிறான்.அன்று இரவு ஒரு முடிவு மேற்கொள்கிறான். நாளை காலை அவள் பேருந்து நிறுத்தம் சென்று பேச வேண்டும் என்று எண்ணுகிறான் .சந்தியாவின் பேருந்து நிறுத்தம் அஸ்வினின் பேருந்து நிறுத்திற்கு ஐந்து நிறுத்தம் தள்ளி உள்ளது.

மறுநாள் காலை அஸ்வினும், அவன் நண்பர்களும் சந்தியாவின் பேருந்து நிறுத்ததிற்கு செல்கின்றனர். சந்தியா அங்கு தனியாக நின்று கொண்டு இருக்கிறாள். அவன் நண்பர்கள் நீ பேசு என்று தள்ளி சென்று நின்று கொண்டு இருக்கிறார்கள். அஸ்வின் மட்டும் சந்தியாவின் பக்கத்தில் சென்றான். அவனுக்கு பயத்தில் இதயத்துடிப்பு அதிகமானது.பேச தொடங்கும் போது காற்று மட்டுமே வந்தது. பேச்சு வரவில்லை.

அஸ்வின் பேச முயன்று கொண்டிருக்கும் போது பேருந்து வந்தது. சந்தியா வழக்கம் போல் பேருந்தின் நடுவே சென்று நின்று கொண்டாள்.அஸ்வினால் இன்று காலையும் பேச முடியவில்லை. அஸ்வின் என்னால் பேச தான் முடியவில்லை என்று ஒரு கடிதம் எழுதி சந்தியாவின் பையில் போட்டான்.அதில் ஒரு smile பொம்மையும் சேர்த்து வைத்தான்.அந்த கடிதத்தில்,
"காதலை கதைக்கின்றாய்
கட்டையிடும் உன் கண்களால்
பேச நினைக்கும் போது
உன் கண்களை பார்த்து
என் இதழ்களும் வெட்கத்தில்
ஆழ்கிறது ஏனோ!....."
_உன்னை காதலிப்பவன்
என்று கவிதையும் எழுதியுள்ளான்.

சந்தியா வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றாள். வகுப்பு தொடங்கியது.அதுவரை அந்த கடிதத்தை பார்க்கவில்லை. வகுப்பிற்கு பையை திறந்து புத்தகத்தை எடுக்க செல்லும் போது அந்த கடிதத்தையும், smile பொம்மையையும் பார்த்தாள். உடனே ரம்யாவிடம் கூறினாள்.அவள் அப்படியே வை இடைவேளையில் பார்த்து கொள்ளலாம் என்றாள். இடைவேளையும் வந்தது. சந்தியா அந்த கடிதத்தை பிரித்து படித்தாள்.

சந்தியாவிற்கு அந்த கடிதம் பிடித்திருந்ததா?
அடுத்த பகுதியில் பார்ப்போம்........



© மனதின்_காதலி

#tamilstories #tamillove #tamillove #kavitavani #lovefeeling