...

2 views

களவாணி 3
மெதுவாக பைக்கை

விட்டு இறங்கி ,

எதிரில் இருந்த கடைக்குள்
நுழைந்தான்

முகமூடி மனிதன் !

அவன் கையில் பைக் சாவி இருந்தது !

அந்த சாவிக்கொத்தில் சிறு

கூர்தீட்டிய கத்தி தொங்கியது !

நேராக கடை ஓனரிடம் சென்று ,

500 ரூபாய்க்கு சில்லறை கேட்டான் !

அவர் பயத்தை காட்டிக்கொள்ளாமல்

காசை எடுத்து கொடுத்துவிட்டு ,

நடுக்கத்துடன்
நின்றிருந்தார் !

அவன் சிகெரட் பாக்கெட் ஒன்றை எடுத்து ,

அதிலிருந்து ஒரு சிகெரட்டை உருவி ,

பற்றவைத்து அங்கிருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி ,

மெதுமெதுவாக அந்த சிகெரட்டை அநுபவித்தான் !

பிறகு ,

டீயும் பஜ்ஜியும் பார்சல் வாங்கிக்கொண்டு ,

சாவிக்கொத்தில் தொங்கிய கத்தியை ,

கடை ஓனர் கழுத்தில் வைத்து

கல்லாவில் இருக்கும் காசு மொத்தத்தையும் எடு-யென்றான் !

ஓனரும் கல் பொம்மையாக ஏதும் செய்ய இயலாதவராக கல்லா பெட்டியை உருவி டேபிள் மேல் வைத்தார் !

அந்த நாள் வருமானம் முழுவதையும்
அப்படியே ஒரு பையில் கவிழ்த்து கொண்டு
அந்த கடையை விட்டு வெளியேறினான்

முகமூடி ஆசாமி !

இதை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் ,

செல்போனை அணைத்து ஃபேன்ட் பின் பாக்கெட்டில் சொருகி கொண்டு,

முகமூடி மனிதனை நோக்கி விரைந்து வந்து ,
அவனை சுதாரிக்க விடாமல் ,
முகமூடி ஆசாமியின்

பின்னாலிருந்து முஷ்டியால்,

அவன் மூக்கில் ஒரு குத்து ,

கழுத்தில் ஒரு குத்து - என குத்தி ,

கையில் இருந்த பணப்பையை பிடுங்கி கழுத்தில் மாட்டிக்கொண்டு !


ஆன் செய்யப்பட்டிருந்த முகமூடி ஆசாமியின்
பைக்கில் கியரை மாற்றி
இஞ்சினை முடுக்கி ஜிவ்வென்று பணப்பையோடுப் பறந்து போனான் !

முகமூடி ஆசாமி ,
நடந்ததை புரிந்து கொண்டு , மர்ம நபரை விரட்டி பிடிக்க ,
பைக்கை தேடினான் !

கடை ஓனரோ ,
தலையில் துண்டை போட்டுக்கொண்டு ,
பரிதவித்துக் கொண்டிருந்தார் !

அப்போது,

பாகுபலி போல் ,
கம்பீரமான தோற்றமுடைய ஒரு இளம் வயது காவலர் ,

ஆபத்பாந்தவனாக அந்த கடை வாசலில் தோன்றினார் !

அவர் தோள்களில் நட்சத்திரங்கள் மின்னின !

சுற்றியிருந்தோர் தூர நின்று வேடிக்கை பார்க்க ,

அடுத்து என்ன நிகழுமோ என்ற படபடப்புடன் - நான்

வைத்தக் கண் வாங்காமல்
டிவியையேப் பார்த்துக்கொண்டிருந்தேன் !


© s lucas