...

4 views

கவலைப்படுவதை நிறுத்துங்கள்
கவலைப்படுவதை நிறுத்துங்கள், உங்களுடைய கவலைகள் அதற்கான தீர்வை ஒருபோதும் உங்களுக்கு அளிக்காது. அது உங்களுடைய பொன்னான நேரத்தை செலவிட செய்து மீண்டும் உங்களுடைய கவலையை அதிகரிக்க செய்யும்.

நான் ஒரு வாழ்க்கை கதையைப் பற்றி பார்ப்போம்.

நான் ஒரு கல்லூரியில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்த பொது, எனது ஜூனியர் ஒருவன் என்னிடம் அந்த ஹாஸ்டலில் போடும் உணவைப் பற்றி குறை கூறிக் கொண்டே இருப்பான்.
நானும் முதலில் அவனுக்கு அந்த சாப்பாடு மட்டும் தான் பிடிக்கவில்லை என்று நினைத்தேன்.

ஆனால், அவனிடம் பழகிய பின் நான் தெரிந்த கொண்ட விஷயம் என்னவென்றால் அவன் எல்லாவற்றிலும் ஒரு வித அதிருப்தியுடன் இருப்பதை அறிந்து கொண்டேன்.

நான் அவனிடம் எவ்வளவோ எடுத்து சொல்ல முயற்சி செய்தேன். அவன் அதை கொஞ்சம் கூட கேட்க வில்லை.

பின்னாளில் ஒரு ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு முறை நான் அவனை பெங்களூரில் ஒரு ஹோட்டலில் பார்த்தேன். அவன் மாறி இருப்பான் என்று நினைத்தேன், ஆனால் அவன் அங்கும் அதே சாப்பாடு சரி இல்லை என்று தான் பேசிக்கொண்டிருந்தான்.

அவனது நண்பர்கள் அவனை கிண்டல் செய்து கொண்டு இருந்தார்கள்.
இதற்குக் காரணம் அவன் மாற வேண்டிய அந்த நேரத்தில் மாறி இருக்கலாம்.

அவன் ஒரு இரண்டு, மூன்று நாட்கள் நன்றாக தூங்காமல் இருப்பது போல தோற்றமளித்தான்.
காரணம் கேட்டால் தூக்கம் வர வில்லை என்றான். நான் மீண்டும் அதே பழைய விஷயத்தை சொல்லி அதை மாற்ற வேண்டும் என்றேன். அதற்காக நான் ஒரு புத்தகம் படிக்க சொன்னேன்.
Atomic habits by James clear.

பிறகு ஒரு இரு மாதங்கள் கழித்து நடந்த இன்னொரு சம்பவத்தை பற்றி பார்ப்போம்

நான் ஒரு சில சமயம் அருகில் உள்ள ஒரு குளத்துக்கு சென்று சிறிது நேரம் மன அமைதிக்காக நடந்து வருவது வழக்கமாக இருந்தது.

அப்படி நான் ஒரு நாள் அங்கு உள்ள ஒரு குளத்திற்கு சென்று விட்டு திரும்பி வரும்பொழுது அங்கே ஒரு தமிழ் நாட்டு குடும்பம் இருப்பதை கவனித்தேன்.

ஒரு தமிழ் பெண் தனது குடிகாரக் கணவருடனும்,அவரது தாயார் மற்றும் மகளுடனும் வாழ்ந்து வந்தார். அவர்கள் எந்த ஊர் ஏன் இங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி தெரிந்து கொள்ள ஆசை பட்டோம்.

அப்போது ஒரு பெரிய செய்தியை கேட்டு நான் மிகவும் கலங்கி விட்டேன்.

அந்த மாமியாருக்கு வயது கிட்டத்தட்ட ஒரு 70 இருக்கும்.
அவள் மகளுக்கு ஒரு 8 அல்லது 10 வயது இருக்கும்.

அவர்கள் அந்த கட்டிட வேலைக்கு தர்மபுரி மாவட்டத்தில் இருந்து வந்ததாகவும், இங்கே ஒரு வருடமாக இருப்பதாகவும்
இப்போது இந்த கட்டிட உரிமையாளர் ஒரு லேண்ட் பிரச்சனையில் இருப்பதால். இங்கே வேலை சரியாக இல்லை என்பதையும், தன் கணவருக்காக, இங்கே இருப்பதாகவும் கூறினாள்.

வேலை சரியாக இல்லாததால் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப் பட்டு கொண்டு இருப்பதாகவும் சொன்னாள்.
அவர்கள் அங்கே கிடைக்கும் சிறு சிறு தொழில் செய்து ரொம்ப கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தனர்.

அந்த மாமியார் தினமும் அங்கே உள்ள ஒரு மேம்பாலத்தில் பிச்சை எடுத்து அதில் வரும் காசை ஒரு கடையில் கொடுத்து பண நோட்டாகா மாற்றி அதை தன் குடிகார மகனுக்கு தெரியாமல் சேமித்து வைத்து அம்மாவும், பாட்டியும் சேர்ந்து அந்தக் குழந்தையை படிக்க வைத்துக் கொண்டு வந்தார்கள். அதைக் கேட்டவுடன் எனது மனம் மிகவும் கலங்கியது.

அப்போது எனக்கு ஒரு கவிதை ஒன்று ஞாபகம் வந்தது.

அதிவீரராம பாண்டியர் தாம் பாடிய வெற்றி வேற்கை என்ற நூலில் எழுதியுள்ளார்.

“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே
எக்குடிப் பிறப்பினும் யாவரே யாயினும்
அக்குடியில் கற்றோரை மேல்வருக என்பர்
அற்வுடை ஒருவனை அரசனும் விரும்புவர்"

எனது நண்பர் ஒருவர் இப்படி அடிக்கடி பிச்சை எடுப்பவரிடம் கூறுவார்.

“நீங்கள் ஏன் பிச்சை எடுக்கிறீர்கள், உங்களுக்கு உணவு தானே வேண்டும் நான் வாங்கி தருகிறேன் என்று.”

ஆனால் அவருக்கு தெரியாது உணவு ஒன்று மட்டும் வாழ்க்கைக்கு போதாது என்று.

அவர்கள் அவ்வளவு கஷ்டத்திலும், தங்கள் மகளை படிக்க வைக்க வேண்டும் என்று தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.

பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் எனது ஜூனியரை பார்த்தேன் அவனிடம் இந்த நிகழ்வை கூறினேன்.

அவர் சொன்னார் அவர்களிடம் எதுவும் இல்லை என்றாலும் அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் ஆனால் நான் மட்டும் வருத்தமுடன் இருக்க வேண்டிய காரணம் என்ன என்பதை அவர் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவுக்கு வந்தார்.

'நானும் இனிமேல் அவர்கள் போல எந்த ஒரு குறையும் கூறாமல் வாழ முடிவு செய்து விட்டேன்' என்ற ஒரு முடிவை அவர் எடுத்து விட்டார்.

அதை நடைமுறைப்படுத்த அவர் தினமும் மாலை நேரத்தில், இன்று ஏதாவது நான் குறை கூறினேனா என்பதை ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துக் கொண்டார்.

மாத முடிவில் அதற்கான முடிவுகளை ஆராய்ந்து பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக அதை சரி செய்து கொண்டே வந்தார்.

பிறகு ஒரு வருடம் கழித்து மீண்டும் ஒரு கோவில் விழாவில் அவரை சந்திக்க நேர்ந்தது.

நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் நான் ஒரு வருடத்திற்கு முன்பாக பார்த்த எனது நண்பன் மிகவும் மாறி இருந்தான் என்பதை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அவன் என்னிடம் தனது நன்றியை கூறினான். நான் எதற்கு என்று கேட்டேன்.அதற்கு அவன் நீங்கள் மட்டும் அந்த தமிழ் ஃபேமிலி பற்றி கூறாவிட்டால் நான் இன்றும் மிகவும் வருத்தத்துடன் இருந்திருப்பேன் என்று கூறினார்.

நீங்கள் எனது வாழ்க்கை மாற்றி விட்டீர் அதற்கு மிகவும் நன்றி என்றார்.

வாழ்க்கையில் அனைவருமே கஷ்ட நஷ்டங்களை அனுபவித்து வருகிறார்கள் அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்ப அவர்களுடைய வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப அவர்களுடைய கஷ்டங்களும் மாறுகின்றன. ஒவ்வொரு முறையும் வருகின்ற சிறிய கஷ்டத்தை அனுபவிக்க தவறினால் பிறகு நாம் எழுந்திருக்கவே முடியாத அளவிற்கு ஒரு பெரிய கஷ்டத்திலிருந்து நாம் வெளிவருவது மிகவும் கடினம்.
© Manokarans
A story by Manokaran