16) Adventures of the four friends.
" இவன் என்ன இப்படி இருக்கான் . " கீர்த்தனா .
" எப்டி . " சாப்பிட்டுக் கொண்டே கேட்டாள் சத்தியா .
" எனக்கு அவன பாத்தாலே பிடிக்கல . அவனும் அவன் பார்வையும் . ஏதோ எரிக்குற மாதிரி பாக்குறான் . " கீர்த்தனா .
" கீர்த்து . " சந்தோஷ் .
" என்ன டா . எப்பப்பாறு என்னையே திட்டு . " என்று சினுங்கி விட்டு சாப்பிடத் தொடங்கினாள் .
அப்போது அவர்கள் அருகில் வந்தான் Harry .
" hi guys . Can I join with you . " என்று கேட்டான் .
கீர்த்தனா அவனை விசித்திர பார்வை பார்த்து விட்டு , உண்பதில் கவணம் செலுத்தினாள் .
" Yeah , sure . " என்றான் சந்தோஷ் .
கீர்த்தனா சந்தோஷை பார்த்து முறைத்தாள் .
" இவங்களுக்கு என்ன பிடிக்கலை போல . " Harry .
" அப்டிலாம் எதுவும் இல்ல . இவ மூஞ்சியே இப்படி தான் . இஞ்சி தின்ன குரங்கு மாதிரியே இருக்கும் . " ஜீவா .
" பாரேன் , sirஓட பேர எனக்கு மாத்திட்டார் . " கீர்த்தனா .
" நீ வாய கொஞ்சம் சிப் போட்டு மூடிட்டு சாப்டு டி . " ஜீவா .
" உங்க அப்பா பேரு என்ன Harry . " சந்தோஷ் .
" அப்பா William , அம்மா Ragini . " Harry .
" ஓஓ . ok . " சந்தோஷ் .
கீர்த்தனா Harryஐ பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தாள் .
" இவன் எதுக்கு இங்க வந்தான் . " என்று மனதிற்குள்ளையே திட்டி கொண்டு இருந்தாள் .
" என்ன தான் மனசுக்குள்ளையே திட்டுராங்க போல . " Harry கீர்த்தனாவை சுட்டிக்காட்டி கேட்டான் .
" இப்போ உனக்கு என்ன வேணும் . ஆமா , எனக்கு உன்ன பிடிக்கலை தான் . அதுக்கு என்ன இப்போ . " கீர்த்தனா எழுந்து நின்று கத்தினாள் .
" ஏய் கீர்த்து . " ஜீவா .
" என்ன டா . இவனுக்கு support பண்றிங்களா . I hate him . " என்று கத்தியவள் அங்கிருந்து அகன்றாள் .
" விடு டா . அவ அப்டி தான் . " சந்தோஷ் .
" பரவால்ல சந்தோஷ் . எனக்காக அவ கூட சண்டை போட வேண்டாம் . " என்றவன் எழுந்து சென்று விட்டான் .
அனைவரும் கீர்த்தனாவின் மீது பயங்கர கோபத்தில் இருந்தனர் .
.
.
பல வருடங்களுக்கு முன்பு :
Ooty -
Sycoraxக்கு இப்போது 25 வயது . அவளுக்கு மந்திர சக்தி இயல்பிலேயே இருந்தது . Celine உம் Sycorax உம் நெருங்கிய தோழிகள் . இருவரின் நட்பை பார்த்து வியந்து பார்க்கும் அளவிற்கு இருந்தது அவர்களின் நட்பு . Sycoraxக்கு இன்னும் ஒரு தோழியும் இருந்தாள் . அவள் பெயர் Mary . Maryக்கு Celine Sycorax உடன் பேசுவது பிடிக்காது . இருவருக்குள்ளும் சண்டை மூட்டிவிட காத்துக் கொண்டு இருந்தாள் Mary . அதற்கு தகுந்த தருணமும் கிடைத்தது .
Celine Marx என்பவனை காதலித்து வந்தாள் .
" Celine . " Mary .
" என்ன Mary . " Celine .
" உனக்கு ஒன்னு தெரியுமா . Sycorax Marxஅ காதலிக்குறாளாம் . " என்று அவளிடம் பொய்யுறைத்தாள் Mary .
" என்ன? பொய் சொல்லாத Mary . " Celine
" நான் பொய் சொல்லல . நீ வேணும்னா போய் Marx கிட்ட கேளு . ரெண்டு பேரும் தான் காதலிக்குறாங்க . " Mary என்ன சொல்வது என்று தெரியாமல் வாய்க்கு வந்ததை கூறி விட்டாள் . ஆனால் அவள் அறிவில்லை , அவள் கூறியது பாதி உண்மை தான் என்று .
" சரி . நான் போய் கேட்டு பாக்குறேன் . அது மட்டும் பொய்யா இருந்துச்சு.... என்ன பத்தி உனக்கு தெரியும்னு நினைக்கிறேன் . " என்று அவளை எச்சரித்து விட்டு சென்றாள் Celine .
Marx அவன் நண்பன் ஒருவனுடிம் பேசிக் கொண்டு இருந்தான் .
" Marx . " என்று கத்திக் கொண்டே சென்றாள் Celine .
" என்ன Celine . எதுக்காக இப்டி கத்திக்குட்டே ஓடி வர . " Marx .
" Marx நான் ஒன்னு கேப்பேன் . உண்மைய சொல்லுவியா . " Celine .
" சொல்லு Celine . " Marx .
" நீ Sycoraxஅ காதலிக்குறியா . " Celine .
" ஆமா Celine . நான் அவள காதலிக்குறேன் . " Marx .
" அப்போ அவ . " சந்தேகத்துடன் வினவினாள் Celine .
" அவளும் தான் . " என்று தலையை கோதிக் கொண்டே கூறினான் .
இதை கேட்டவளுக்கு Sycorax மீது கோபம் வளர்ந்தது . Sycorax ஐ தேடி சென்றாள் .
" Sycorax . "
" என்ன Celine . "
" நீ Marxஅ காதலிக்கிறியா . "
இல்லை என்று சொல்ல போணவளை தனது மந்திரக்கோலை வைத்து " ஆமா , நான் அவன காதலிக்குறேன் . " என்று சொல்ல வைத்தாள் Mary .
" என்ன??? நான் அவன காதலிக்குறேன்னு உனக்கு தெரிஞ்சும் நீ அவன காதலிக்குறியா??? " என்று கத்தினாள் .
" இல்லன்னு தான சொன்னேன் Celine . " Sycorax
" நீ எப்போ இல்லன்னு சொன்ன . ஆமான்னு தான் சொன்ன . " என்றவள் கண்ணீருடன் அங்கிருந்து சென்றாள் .
.
.
இன்னும் என்ன நடக்கும் . Celineக்கும் Sycoraxக்கும் சண்டை பெருகுமா . Celine கெட்டவள் ஆனது எப்படி??? Maryக்கு Celineஐ பிடிக்காது என்பதால் மட்டும் தான் அப்படி செய்தாளா . பார்ப்போம் . கீர்த்தனாவிற்கு ஏன் Harryஐ பிடிக்கவில்லை??
© Ashwini