...

4 views

காருக்கு அடியில் ?
ஆடுமேய்க்கும் சிறுவன்,
ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான்...

லீவு நாளில் ஆடோடு அலைவது பழக்கம்...

மாற்றுவழி யின்மையால்...
வாகனங்கள் நிரம்பிவழியும்
சாலைவழியே ஆடோட்டிப்போவது , அங்கு வாடிக்கையான ஒன்று...

அன்றும் அப்படித்தான் ...
நடந்தேற வேண்டி இருந்தது...
அவனும் சிரமம் பார்க்காமல் ரோட்டோரமாகவே நடத்திக்கொண்டு போனான்...

அன்று, வழக்கத்திற்கு மாறாக, சில ஆடுகள் அதிகம் சத்தம் போட்டன.. அடுத்தடுத்து கார்களும் பறந்து கொண்டிருந்தன..

சிலருடையப் பேச்சு பயமுறுத்தும்படியாக இருந்தது...

பையனும் கூட கொஞ்சம் பயத்தோடேப் போய்க் கொண்டிருந்தான் ...

அப்போதுதான் அது எதிர்பாராமல் நிகழ்ந்துவிட்டது...
ஆமாம்...மெதுவாக நடந்து சென்றுகொண்டிருந்த, /
சினை ஆடுகளில் ஒன்று தன் குட்டிகளை ஈன்றது..

சூட்டோடு சூடாக வீட்டுக்கு போன் போட்டு சொல்லிவிட்டான்...
கிடையோடு
கொஞ்ச நேரம் அங்கேயே
காத்திருக்கும்படி யானது...

பொறுமை இன்றி..
ஹாரன் அடித்தபடியே சென்ற கார்காரன் ஒருவன்,

அலாரம் எழுப்ப ,
தூக்கத்திலிருந்து ,
எழுந்தவன் போல், நிகழ்ந்ததை ,
அரைகுறையாகப் புரிந்துகொண்டு,

ஓரமா ஓட்டுடா" என்று கத்திக்கொண்டே கடந்துபோனான்,

போறவன் ,போறான் விடுடா..
பரவாயில்லையென்று மரத்தடியில் ஆடுகளை கூட்டி நிறுத்தினான்...

இருசக்கர வாகனத்தில் பையனின் அப்பாவும், அண்ணனும் .
குட்டிகளையும், குட்டிபோட்ட ஆட்டையும் தூக்கி
மடியில்
வைத்துக் கொண்டு மெதுவாக வீடு நோக்கி நகர்ந்து சென்று மறைந்தார்கள்...

பையனும்,
அம்மா வாங்கித் தந்திருந்த,
மிட்டாய் ஒன்றை ,பையிலிருந்து எடுத்து வாயில் போட்டு ,
சுவைத்துக்கொண்டே ,, சாலையைக் கடந்து ஆடுகளோடு காடு போய் சேர்ந்து விட்டான்....

அவன் மனசு ஏனோ, அவ்விடத்திலேயே நின்றிருந்தது.
ஏதோ ஓர் யோசனையில் ஆழ்ந்திருந்தது...

சக்கரங்கள் பூட்டிய கூண்டுக்குள் ஆடுகளை அடைத்து ,

அதற்குள்ளேயே அவற்றை நடக்கவிட்டு, பத்திரமாக சாலையை கடந்து செல்ல உதவும்,

புது யுக்தி ஒன்றைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தான்.

அவன், அதை சீக்கிரம் செயல்படுத்த நானும் வாழ்த்துகிறேன்!!!





© s lucas