...

10 views

சிறைப்பட்ட கிளி
அழகு பஞ்சவர்ண கிளி
ஆசையாய் பறந்து திரிந்த கிளி
இரவோடு உரையாடி
ஈசலோடு சண்டையிட்டு
உல்லாசமாய் வலம் வந்த கிளி
ஊண் சிறுதானதால்
என்னமோ
ஏன்? இப்படி சட்டென்று
கீகீகீ என்று சத்தம்
ஐயோ என்பதுக்குள் சிறைப்பட்டது...
சிறையில் என்னமோ
ராணிய மிஞ்சிய மரியாதை
தங்க தட்டில் வைத்த உணவுதான்.....
சிறையிலே ஒருசில நாட்கள்
பறந்தன நாட்கள் கூட கூட
பறப்பதை மறந்து போனாள்
கிளியானவள் ! சட்டென்று
சிறையில் இருந்து வெளியே வர....பறக்கவே மறந்து போனாள்! சிறையில் அடைப்பட்டது கிளி மட்டும்
அல்ல அவளின் ஆசைகள்!
தேவைப்படும் போது கிடைக்காத வாய்ப்புகள், அன்பு
தேவையற்றதாய் மாறிப் போகிறது! கிளிபோல் பேசிட்டால் அழகு ஆனால் கிளி போல் பறந்திட்டால் தவறு !
கிளியின் இன்பம் பறந்து திரிந்த பின் கிடைக்கும் பழத்தில்... அவளின் இன்பம்
வாய்ப்புகள் தேடி தேடி தன் இலக்கை அடைவதில் ‌.... வாய்ப்புகள் கிடைக்கும் அனுமதி தான் கிடைப்பதில்லை அவளின் சிறை அன்பின் சுவரால் கௌரவம் என்னும் கம்பியால் பாசம் என்னும் பூட்டால் பூட்டப்பட்டது ....பேசாத வரை தமக்கான வாய்ப்புகள் கிடைக்காது என அறிந்தும்
படைத்தவனிடம் மட்டும் பேசுகிறாள்... இவ்வனைத்தும் அவன் பார்த்துதான் இருக்கிறான் என்பதை அறியாமல்... தண்ணீர் இல்லாமல் கிணறு இருந்து என்ன பயன்?
அவள் பாசக்காரி அன்பானவள் என்பதில்
பெருமை என்றபோது
அவள் அறிவாளி அற்புதமான
இரசனைப்படைத்தவள் வரிகளின் பிரியமானவள் என்றபோது மனம் ஏற்க
மறுக்கிறது ...
மதி ஒன்று யோசிக்க!
விதி ஒன்று யோசிக்க !
என்னாகும்!