...

10 views

இவள் யாரோ!
அது மே மாதம். அஜய்க்கு சரியாக போரடித்துக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை பள்ளிகளில் விடுமுறை இரண்டு மாதம் என சொல்லி விட்டார்கள். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வேறு வெளியிடப்படும் நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் ஏனென்றால் அஜய் தான் வகுப்பிலேயே சுமாராக படிக்க கூடியவர் ஆனால் மூளைக்காரன் ஏன் இப்படி சொல்லுகிறேன் என்றால் அவனை செஸ் போன்ற சில மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டில் தோற்கடிக்க ஆட்கள் பிறக்கவில்லை என்றே சொல்லலாம். தன்னுடைய ஒரே தோழி நர்மதாவுக்கு போன் செய்தான் அஜய். "என்ன தான் பண்ற போர் அடிக்குது"

" எதாவது பிக்னிக் மாதிரி நம்ம பிரண்ட்ஸோட போனா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன் "

மறுமுனையில் அஜய் பரவசப்பட்டான் நான் நெனச்ச நீ சொல்லிட்டியே.
நர்மதா சிரித்தாள் "நண்பர்கள் வினித்தையும் அன்வரையும் கூட்டிட்டு எங்கேயாவது கூலிங் பிளேசஸ் போலாம். எந்த ஊருக்கு போலாம் தெளிவா சொல்லு ஊட்டி ,கொடைக்கானல் இது மாதிரி..

"வருஷ வருஷம் சம்மருக்கு அங்க தான் போறோம் இந்த தடவ டிஃபரண்ட் எங்கேயாவது போவோம். சரி எங்க போலாம் வினித்துக்கும் அனைவருக்கும் கான்பிரன்ஸ் போடு"

இணைந்தார்கள்.
...