...

8 views

Computer.........

© நாவல்

[#கணினி part 7

அருங்காட்சியத்தை வெடிக்க வைக்க இரண்டு போர் விமானங்கள் தயார் நிலையில் கிளம்பின.

அப்போதுதான் ஏதோ தப்பாக இருக்கிறது என்று தர்ஷினி கணித்தாள்,

தன்னுடைய வீட்டில் பாதுகாப்புக்காக இருந்த போலீஸ்காரர்களிடம் சென்று உடனே அந்த போர் விமானங்களை கிளம்ப விடாமல் நிறுத்த சொன்னாள் தர்ஷினி.

அங்கிருந்த இன்ஸ்பெக்டர் தர்ஷினியின் பேச்சை பெரியதாக காதில் வாங்கவில்லை சின்ன பொண்ணு பயத்தில் உளறுகிறது என்று அசால்ட்டாக விட்டு விட்டார்.

அதே சமயம் கமிஷ்னர் தர்ஷினியின் வீட்டிற்கு வந்தார்.
கமிஷ்னரை பார்த்ததும் அவரிடம் வேகமாக ஓடி சென்று பேச முயற்சி செய்தாள் தர்ஷினி.
அதை பார்த்ததும் தர்ஷினியை பேச அருகில் அழைத்தார் கமிஷ்னர்.

அவரிடம் கம்ப்யூட்டரின் தந்திரத்தை தெளிவாக எடுத்து கூற தொடங்கினாள்.

அந்த கம்ப்யூட்டர்க்கு நான் தான் வேண்டும் என்று நிபந்தனை வைத்துள்ளது.
அந்த கம்ப்யூட்டரின் கட்டுப்பாட்டில் பல ரோபோக்கள் உள்ளன அந்த கம்ப்யூட்டர் நினைத்திருந்தாள் அந்த ரோபோக்களை பயன்படுத்தி அங்கிருந்த மக்கள்களை பனைய கைதியாக பிடித்து வைத்துக்கொண்டு உங்களை மிரட்டி என்னை ஒப்படைக்க வைத்திருக்க முடியும் ஆனால் அந்த கம்ப்யூட்டர் அப்படி செய்யாமல் வெளியே இருந்த மொத்த ரோபோக்களையும் அருங்காட்சியத்தில் உள்ளே வைத்துக்கொண்டு அமைதியாக காத்திருக்கிறது என்றால் அந்த கம்ப்யூட்டர் வேறு ஏதோ பெரிய திட்டத்தை செயல் படுத்தப்போகிறது என்று கமிஷ்னரிடம் அனைத்து விஷயங்களையும் தர்ஷினி கூறினாள்.

இதை கேட்டதும் கமிஷ்னர் சிரித்து விட்டார் மனுஷங்க தான் பாப்பா நீ சொல்லுற மாதிரி யாரையாவது பனைய கைதியா பிடிச்சு வச்சுக்கிட்டு அரசாங்கத்தை மிரட்டி காரியத்தை சாதிக்க நினைப்பார்கள்,
நாங்க அந்த மாதிரியான திட்டத்தையே...