...

4 views

முட்டையும் இன்ப அதிர்ச்சியும்
அபிரதி என் தாய்மாமன் மகள் ஏழாம் வகுப்பு படிக்கிறாள்..... இரண்டு நாளுக்கு முன்பு எனக்காக முட்டை வேக வைத்து
முட்டை ஓட்டை எடுத்து விட்டு தட்டில் வைத்து விட்டு அதை என்னிடம் சொல்லாமல் என்னை எழுந்து வா ரம்யா ......
எழுந்து வா ரம்யா...... என அழைத்துக் கொண்டே இருந்தாள். நானும் இரண்டு மூன்று முறை இரு வருகிறேன்.... வருகிறேன்.... இரு.... இரு.......என்று சொல்லி விட்டு அவள் பள்ளிப் பேருந்துக்குப் போகும் போது வழியனுப்பத்தான் என்னை அழைக்கிறாள் என்றெண்ணி எழுந்து வெளியே போக வேண்டுமே அதற்கு இங்கிருந்தே விடை கொடுக்கலாம் எனக் கையசைத்து டாடா சொன்னேன்...... அவளும் பதிலுக்கு விடை கொடுத்து விட்டு
நான் போனதும் நீ முட்டை எடுத்து சாப்பிடு ...... உனக்காக வேக வைத்து வைத்திருக்கிறேன் நான் போனதும் சாப்பிட்டு விடு நான் போன உடனே சாப்பிடு என்று இருமுறை சொன்னாள்.....


நான் எப்போதும் போலத் தான் என்றெண்ணி நான் சாப்பிடும் போது எடுத்துக் கொள்வோம் என்றெண்ணி விட்டுவிட்டேன்
ஏனெனில் அவள் தினமும் முட்டை அவளுக்காக வேக வைத்து உண்ணும் போது கேட்காமலேயே எனக்கும் வேக வைத்து உள்ளே மிளகு, கார மசால் எல்லாம் வைத்துத் தருவாள்...... எனக்கும் மிகப் பிடிக்கும்...... அப்படி முட்டையைச் சாப்பிடுவது😍 இந்தக் கோடை விடுமுறையில் தினமும் சாப்பிட்டோம்..... இது மட்டுமல்ல எனக்கான எல்லா விதமான உதவிகளையும் அவள் செய்ய முகம் சுழித்ததே இல்லை..... வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றாலும் கேட்க மாட்டாள்...... சில நேரங்களில் விளையாட்டு வயது என்பதால் மறப்பதுண்டு அப்போதும் நான் கேட்டதும் செய்து விடுவாள் எனக்கான உதவிகளை மட்டுமல்ல உற்சாகத்தையும் உத்வேகத்தையும் எனக்குத் தருபவள்...... என்னை என் திறமையை எவரிடமும் விட்டுக் கொடுத்தே பேசவே மாட்டாள்.....
இப்படியான பெரிய மனதுக்காரி வயதில் சிறியவள் என்றாலும்!

என் அன்பு மொத்தத்தை மட்டுமல்ல ! என் கோபம் மொத்தத்தையும் பெறுபவளும் அவளே ஆவாள்.....😍☺️ ஆனால் அடுத்த நொடியே புன்னகையோடு வந்துவிடுவாள்... அழகி....😊


சரி இந்த முட்டைக்கு வருவோம் நான் சாப்பிடும் போதும் அதை மறந்துவிட்டேன் .... பாதி சாப்பிட்ட பின்பு நினைவு வந்தது ..... அதன்பிறகு அத்தையிடம் கேட்டேன்..... அபிரதி முட்டை வேக வைத்து வைத்ததாகச் சொன்னாள்..... அதைக் கொடுங்கள் என்று.....


அத்தையும் எடுத்துத் தந்தார்கள்
ஒரு தட்டத்தில் ஓடு எல்லாம் நீக்கி அழகாக இரண்டாய்ப் பிளந்து
மசால் இட்டு வைத்திருந்தது ..... நானும் எடுத்து சாப்பிட்டு மகிழ்ந்து விட்டுப் பார்க்கிறேன் அடியில் ஒரு காகிதம் இருந்தது
என்ன அது என அத்தையும் நானும் பேசிக்கொண்டே பிரித்துப் பார்க்கிறேன் நான்..... நான்காக மடிக்கப்பட்ட வெள்ளைத் தாளின் மேல் open and read it என எழுதியிருந்தது எனக்கும் அதைப்பார்த்ததும் ஆனந்தம்.....அதில் அப்படி என்ன தான் இருக்கிறது என பிரித்துப் பார்த்தேன் உள்ளே


Hi Ramya ...... 😊 ( இந்த ஸ்மைலி போல வரைந்திருந்தாள்)

Eat the eggg.... And say how it is this taste....... Bye....


என எழுதியிருந்தது...... இதை அவள் என்னைப் பார்த்து நேராகவே
முட்டையை சாப்பிட்டு விட்டு எப்படி இருக்கிறது என்று சொல் என்று சொல்லியிருக்கலாம் ஆனால் அதில் இவ்வளவு இன்பம் கிடைத்திருக்குமா ? எனறால் அது இல்லை தான்....... நமக்கு அஞ்சலில்வந்த கடிதத்தை பிரித்துப் படிக்கும் போது ஒரு ஆவல் இருக்குமே அந்த இன்பத்தை அடைந்தேன் அவ்வெள்ளைத் தாளை பிரித்துப் படிக்கையில்..... 😍 இந்தச் சின்னச் சின்ன அன்பில் தானே அழகாகிறது வாழ்வு.....😊❤️💚



அபி பள்ளி முடிந்து வந்ததும் சொன்னேன் முட்டை நன்றாக இருந்தது அதனினும் இன்ப அதிர்ச்சி அந்தக் கடிதம் தான் என்றேன்..... ஓ! சரி ! சரி ! கா ! ( அக்கா- கா - பேச்சு வழக்கு)
அவள் அடிக்கடி இப்படித்தான் அடிக்கடி இன்ப அதிர்ச்சி ( Surprise) தருகிறேன் என்று சொல்லி எழுதியோ வரைந்தோ எங்களுக்குத் ( சுகன்யாவுக்கும்+ எனக்கும்) தந்து கொண்டே இருப்பாள்.....😊❣️


இன்றெல்லாம் அறிவுறுத்தல் ,தெரிவித்தல் நிமித்தமாக அரசு சார்புக் கடிதங்கள் என்றாவது அத்தி பூத்தாற் போல அதுவும் மிகத் தாமதமாக அஞ்சலில் வருகிறதே தவிர நல விசாரிப்புக் கடிதம், அன்பர்கள் கடிதம், நண்பர்கள் கடிதம் எவையும் வருவதில்லை...... நாமும் அஞ்சலில் அனுப்புவதில்லை...... இணைய வரவில் வளர்ச்சியில் பெரும் முன்னேற்றம் பல இருந்தாலும் இப்படியான சிறு சிறு மகிழ்வை எல்லாம் இழந்து உயிர்ப்பற்று உருண்டோடிக் கொண்டிருக்கிறோம் ஆட்டு மந்தை போல அனைவரோடும் சேர்ந்து நாமும்..... என்பது பெரும் வருத்தம்.....

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்நிழல்