...

8 views

ருசிக ரசிகா!!
நகரத்தின் மையத்தில்... நகரத்தின் அத்தனை பரபரப்புக்கும் இடையில், நகரத்தினர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணமாக , நடக்கும்,
கோலாகலமான ,
உணவு திருவிழா .... விறுவிறுப்பையும்..
பலரின் ஆர்வத்தையும் கூட்டியிருந்தது...
ஏராளமானோர் ஆஹா"ஓஹோ" என, புகழ்ந்து கொண்டிருந்தனர்...

அதேநேரம்... அதே இடத்தில்,
அதே உற்சாகத்துடன்,
ஏராளமானோருடன்,
உணவுத்திருவிழாவுக்கு போட்டியாக,

சாப்பாட்டுக்கு செத்தவர்கள் கூட்டம் ஒன்றும் நடந்துகொண்டிருந்தது...

ஊரில் உள்ள பல பேர் அதில் கலந்துகொண்டிருந்தனர்...
எல்லோரும், தயவு தாட்சண்யம் பாராமல், சாப்பிடக்கூடியவர்கள்....
முதலையாக இருந்தாலும், முழுசாக முழுங்க கூடியவர்கள்....

அங்கு, இருந்த,உணவு மேசையே ,பல ரக பலகாரங்கள், பல ஊர் ஸ்டைல் உணவுகள்,
என , உணவுகளால் அமர்க்களமாக நிறைந்து இருந்தது...


கலந்தாய்வு கூட்டம் முடிந்ததும் பந்தி தொடங்குமென அறிவிப்பும் ஒலிக்கத் தொடங்கியது...


கூட்டத்தை தலைமை தாங்கி வழிநடத்தும்,முட்டை போண்டா "மூர்த்தி.... என்பவர்...
கலகலப்பாக மைக்கில் பேச ஆரம்பித்தார் ....

கூட்டத்திற்கு வந்திருக்கும் உணவு ப்ரியர்களே... வணக்கம்...

உணவு மிக அவசியம்...அவசியமான உணவை தருவது சமையலறை...
சமையலறையை கோயில் எனலாம்...எனவே, அங்கு சமைக்கும்
சமையர்காரர்கள் பூசாரிகளே.
பூசாரி பெற்று தரும் வரம் ...தான்....வாய்க்கு ருசியான உணவு.
ஆகவே, குழுமியுள்ள சாப்பாடு பிரியர்களே ....
சந்தோஷமாக , எல்லா பதார்த்தங்களையும், பிரசாதமாக எண்ணி, சாப்பிடுங்கள்...
நன்றி, வணக்கம்.

முட்டை போண்டா,
நன்றாக பேசுவார். அதைவிட
நன்றாக சாப்பிடுவார்...
கேட்டால் -இது எச்சி "என்று நக்கலடிப்பார்...
பத்திரிகையாளர் கேட்டதற்கும் அதே நக்கலைதான் அடித்தார்...

அது இல்ல....சார்....என
இழுத்த,அந்த பத்திரைக்கைகாரர்...இந்த கூட்டம் ?என முனுமுனுக்க....

முட்டை போண்டா .....
அதற்கு பதிலாக,
யோவ், பத்திரிக்கை,
இது கூட்டந்தான், சாப்பாட்டு கூட்டம்...
சாப்பிடுற கூட்டம்...என்னய்யா நீ இது கூட தெரியாம, இங்க வந்திருக்க, என....சொல்லி...
பெக்கபெக்கபெக்கெ வென, சிரித்தது....

கடுப்பான பத்திரிக்கையாளர்...எனக்கு தெரியும்...
சார், கூட்டத்தை பற்றி...
ஒத்தவரியில எப்படி எழுதுறது...
கொஞ்சம் , நாளு வார்த்தைல,
சொன்னீங்கனா நல்லா இருக்கும், என்றார் ...

அப்படியா? கேட்டுக்கப்பா... சுடச்சுட
சாப்பிடும் போது தான் ...
முட்டை போண்டா ...
அதுசுவையாய் இருக்கும்...
அதேபோல,
சூடாக இருக்கும் போதே சாப்பிட்டாதான் டீ" டீயாய் இருக்கும்... அதனால, '

ஒற்றுமையாய் இருக்கணும்...

பத்திரிக்கை தம்பி!!

காக்கையப் பாருங்க.....
கழுகை பாருங்க....
அவ்வளவு தூரம் ஏன் போகனும்?
தம்பி...!!
நம்ம நாட்டு தேசிய விலங்கு புலியை பாருங்க....
அதைப் போல ...
சாப்பிடணும்...
சாப்பிட்டு நல்லா தூங்கனும்..

புரிஞ்சதா? இல்லையா?
நல்லா சாப்பிடனும்... அரைவயிறா சாப்பாட்டு மேஜையிலிருந்து எழுந்திரிக்க கூடாது....
சொல்லு தம்பி... வேறெதுவும் கேட்கணுமா?.
என்றார்...

ஆமாம் ,சார்,

அனாதையருக்கு, ஆதரவற்றோர்க்கு,
ஏழை எளியவர்களுக்கு ...
ஏதாவது , சாப்பிட , தருவீங்களா?
என , கேட்டுவிட்டு,

முட்டை போண்டா மூர்த்தியின் முகத்தை ,
அப்பாவியாய்,பார்த்தார் பத்திரிக்கையாளர்.

அட என்ன தம்பி இப்படி கேட்டுட்ட ?
சாப்பாட்டுக்கு செத்தவங்க " எங்க, கூட்டத்தில,
அதுதானே விசேஷம்...
தெரியாதா?
என,
கேட்டுவிட்டு,மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தது முட்டை போண்டா...

அப்படியே வலது கையை நீட்டி ரெண்டு சிக்கன் லெக் பீஸை எடுத்து கடித்தபடியே...
கூட்டம் முடிந்ததும் பந்தியில் மீந்தது ஏதாவது இருக்கும்...
அதை நீ சொன்ன பாரு, அவங்களுக்கு கொடுப்போம்...
ஏழைகளும் சாப்பிட்டு போகட்டுமே...என்றார்...

சுற்றும் முற்றும்
ஒரு ரவுண்டு
பந்தியை பார்த்துவிட்டு , பத்திரிக்கைக்காரர்
மெதுவாக ..
தயங்கத்துடன்...
கேட்டார்...


சாப்பாடு..... " மீறுமா "? சார்?!!!

அவர் குரலில் கவலை இருந்தது...🙏


வழக்கம்போல லைக்-
கமென்ட்....பண்ணுங்க..
ஆனால்,
வழக்கத்தை விட மிகுதியாக, ஏழைகளுக்கு உதவுங்கள்...



..© s lucas