...

3 views

கொலைகாரக் கனவுகள்
தட் தட் தட் தட்

தட் தட் தட் தட் தட்

சத்தம் பலமா கேட்டது.

கண்முழிசு பார்த்தா ட்ரெயின் போர சத்தம்.

அதவிட அதிகமா யாரோ கதவை தட்டுற சத்தம் கேட்டது.

சீக்கிரம் எழுந்து ல்லைட் போட்டு டைம் என்னனு பத்தா இரவு மணி 2.

யார் யாரோ நிறைய பேர் பேசுற சத்தம்.

டோர் ஓபன் பண்ணி பார்த்தா
போலீஸ் அதிகாரி, இரண்டு மோப்ப நாய், நான் இருந்த ரூம் ஓட ஓனர், பக்கத்து ரூம் பசங்க, ஒரு பட்டாலமே இருந்தாங்க.

உன்ன கைது பண்ணறோம்.

ஒரு பெண்ண கொலை பண்ணிருக்க.

நான் ஒரு நிமிசம் என்ன பேசரதணு தெரியல.

அவங்க அதுக்குள்ள என்ன இரண்டாவது மாடியில் இருந்து என்ன இழுத்துடு ஜீப் ல ஏத்திடாங்க.

15 நிமிசம் என்ன நடக்குது எனக்கு தெரியல.

போலீஸ் ஸ்டேசன் ல ஒரு அறை மணி நேரம் யாரும் என்னோட கேள்விக்கு பதில் சொல்லல.

நான் எதுக்காக இங்க இருக்க அப்படிங்கற கேள்வி என் மனதில் ஒடிடே இருக்கு.

போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னை மோகன் என்று அறிமுகப்படுத்தினார்.

நான் எதுக்கு இங்க இருக்க.

ஆஷா வ கொலை பண்ண குற்றதுக்காக.

அவ யாருனு எனக்கு தெரியாது.

நீ அந்த பொண்ணோட பேசிட்டு இருந்த போட்டோ இந்த பாரு

ஓ இந்த பொண்ணு பெயர் ஆஷா வா.

இப்ப எப்படி நியாபகம் வந்தது.

எனக்கு நியாபகம் வரல. எனக்கு அந்த பொண்ணு பெயர் தெரியாது. நாங்க எதர்சைய இரண்டு தடவை மோதிக்கிடோம். என் கம்பனிக்கு பக்கத்து கம்பனி, அவ்வளவு தான் எனக்கு தெரியும்.

எப்படி இறந்தாங்க.

நீதான் சொல்லணும்.

எனக்கு தெரியாது.

நேற்று ஒரு 1 மணிக்கு நீ உன்னோட கேப் டிரைவர்
எப்பவுமே உன்னோட ரூம் வரைக்கு கூட்டிடு போவ ஆனா நேத்து நீ என் பாதியிலே இறங்கி இந்த பொண்ணுக்காக அவ ஹாஸ்டல் முன்னால நின்னுடு
இருந்த, அவள் வந்ததும் உனக்கும் அவளுக்கும் ஒரு பெரிய வாக்குவாதம்.

நீ உன்னோட ஹாஸ்டல் ல இருந்து எடுத்து வந்த அந்த கத்தியால அவளோட தொண்டை ய அறுத்து கொலை பண்ணிட.

என்னால எதுமே பேச முடியல.

நான் அது மாறி எதுவுமே பண்ணல.

அதுக்கு அப்ரம் நீ அந்த கத்திய அந்த எடத்துல விசிடு உடனே கிளம்பி போய்ட.

நான் பண்ணல, நான் அந்த பொன்ன இரண்டு தடவை மட்டும் தான் பார்த்து இருக்கேன்.

சரி, நீ உன்னோட கேப் ல இருந்து பாதில இரங்கினியா.

ஆமா , ஆனா

பேசாத இல்லையா ஆமாவனு மட்டும் சொல்லு.

ஆமா,

உன்னோட கேப் - க்கு பின்னால ஒரு கேப் வந்ததா

ஆமா, ஆனா அதுல வந்தது அந்த பொண்ணு தான் எனக்கு தெரியாது.

நான் அதுல வந்தது அந்த பொண்ணு தான் சொல்லவே இல்ல.

வேர யாரு.

அவர் அந்த வீதியில் இருக்கிற ஒருவர்.


உன்னோட கால் செருப்பிலே ரத்தம் இருக்குது.

அவள் உன்னோட கால் கிட்ட விழுந்து இறந்து போனா.

அந்த கத்தில உன்னோட கை ரேகை இருக்கு.

இல்ல, இது கண்டிப்பா நான் பண்ணல.

எல்லா விதமான ஏவிடன்ஸ் ம் உனக்கு எதிராக இருக்கு.

நீ உண்மையா ஒத்துக்கொள்ள தான் வேண்டும்.

முடியாது.

அப்போ இரண்டு காவலாளிகள் ஒரு பெரிய தடியொட உள்ள வந்தாங்க.

எனக்குள்ள ஒரு பயம்.

அவங்க என்ன அடிக்க ஆரம்பிச்சாங்க.

என்னால வலி தாங்க முடியாம ஒரே சத்தம் போட்ட,

யாரோ என்ன தட்டினாங்க.



நீங்கள் இந்த கதையோட இன்னொரு பகுதியைக் அடுத்த வாரம் பார்க்கலாம்.

© Manokarans