...

1 views

அரசு விளையாட்டு
ஒன்றாக ஒற்றுமை வாழும் சிறுவர்கள் ஒரு மகா திடலில் தர்மர், பீமன் மற்றும் தம்பி யாரும், தூரோயோதணன் மற்றும் நூறு தம்பி மார்களும் சிறு வயதில் அரசு பாரம்பரியம் பின்பற்றி அரசு விளையாட்டு ஆடுகின்றனர்

திடலில் தர்மர் அரசராக இருக்கட்டும் என்று தேர்வு செய்கின்றனர், பின்னர் சேனாபதி யார் யென்று பேச்சுவார்த்தை நடக்கிறது, பீமன் நான்தான் சேனாபதி, யென இல்லை இல்லை, தூரோயோதணன் நான்தான் சேனாபதி, யென வாய்ச்சன்டை முற்றி வர உடனே, தர்மர் பீமனை பார்த்து " சும்மா இருடா தடிப்பைலே" என்றார், பீமன் அண்ணா என்றான், தர்மர் "பீமா" நீ துணை சேனாபதி யாக இரு, சரி அண்ணா என்றான் பீமன்.

சற்று அமைதிக்கு பிறகு ஒரு ஒழுங்கு முறையில் படைகள் போல் அணி வகிக்கின்றனர். இதற்கு கிடையில் திடீரென ஒரு காட்டு யானை மதம் பிடித்து ஊருக்குள் அதவாது அரமனையை நோக்கி வந்துக்கொண்டு இருக்கிறது, உடனே அரசர் தருமருக்கு ஒருவன் தெரிவிக்கிறான், உடனே தர்மர் உரத்த குரலில் "சேனாபதி" என்றார்.

தூரோயோதணக்கு தூக்கி வாரி போட்டது "அஹா"என்று தூரோயோதணன் இப்படி யென்று தெரிந்திருந்தால் சேனாபதி பதவி வேண்டாம் சொல்லி இருப்பேன்,என்று யானை பார்த்தான், பிளிறிக்கொண்டு ஓடி வருகிறது.

உடனே தூரோயோதணன் "தம்பிமாருகளா" நான் முன்னாடி ஓடுறேன், நீங்க பின்னாடி ஓடி வாங்க, "வாங்கடா " ஓடி போகலாம் யென்று ஒரே ஓட்டம், ஒருவர் பின் ஒருவராக ஓடிக்கின்றனர்.

தர்மர் பார்த்தார் உடனே "துணை சேனாபதி" என்றார், பீமன் அரசே என்றான், தர்மர் யானையை "அடக்கு", என்றார், பீமன் உடனே யானைக்கு எதிர்க் கொண்டு ஓடினான், சாமர்த்தியமாக யானை மீது ஏறி அமர்ந்து கொண்டான், தூரோயோதணன் ஓடிப்போய் அரமனை மீது நின்று பார்க்கின்றனர்.

யானை மீதுள்ள பீமன் இரு கரங்களை கொண்டு யானை தலை ஓங்கி அடித்தான், யானை சற்று வேகம் குறைந்தது, தூரோயோதணன் அப்பொழுது தான் பீமனின் பலத்தினையை நேரடியாக காண்கிறான், பீமன் மறுபடியும் யானை தலையின் மீது ஓங்கி அடித்தான் யானை ஓட்டத்தை நிறுத்தி முன் கால்களை மண்டியிட்டது, மறுபடியும் ஒரு அடி அடித்தான் யானை இறந்து விட்டது.

தர்மர் பீமனை பாராட்டினார், தூரோயோதணன் பீமன் இப்படிப்பட்ட "பலசாலி "யா இருக்கின்றனே யென்று, பீமனை கண்டு அஞ்சுகிறான்... !

குறிப்பு :-
இதனூல் இருக்கும் கதை யமைப்பு அறியப்பட்டவை....... !