...

35 views

முதல் நீ.. முடிவும் நீ.. 39 to 41
அத்தியாயம் - 39


சரண் வீட்டின் பால்கனியில் அமர்ந்து இருந்தான். அந்த தேதி என்ன என்ற யோசனையில், ‘ நமக்கு முக்கியமான நாள்னு வேற நித்யா சொல்றா? என்னவாக இருக்கும்? ’

" அண்ணா வா சாப்பிட, அம்மா கூப்பிட்டாங்க.." ரிஷி அழைக்க

" அம்மா அப்பாக்கு கல்யாண நாள் எப்ப? அந்த நாளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? " சரண் கேட்க,

" இப்ப இதை எதுக்கு அண்ணா நீ, கேட்டு இருக்க? " ரிஷி கேட்க,

" நம்ம கவிகுட்டி காலையில என்னை வாரிவிட்டா டா.. “

" அவ கூட நீ எப்போ பேசின? விஜி அத்தை சொன்னது மறந்து போய்டுச்சா? " ரிஷி கேட்க "

“ அத்தை தான் காலையில் பேசினாங்க, அவங்க முகம் வாடி போகவும் தான் நான் கவியை திட்ட கூப்பிட்டேன் அவ என்னை வாரி விட்டு வெச்சுட்டா, என்ன வாய் தெரியுமா? எல்லாம் அந்த அஜு டிரெய்னிங் போல.."

" அண்ணா அவங்களை பத்தி பேசாதே, வா சாப்பிட" ரிஷி அழைக்கவும், சரண் யோசித்து கொண்டே சாப்பிட வர, நித்யா பரிமாறினாள். சரண் அதே கேள்வியை நித்யாவிடம் கேட்க,

" அப்போ உனக்கு தெரில அப்படித்தான?" நித்யா கேட்க,

" டேய் தேதி மறந்தா கூட பரவாயில்லை அது உனக்கு என்ன நாள் கூட தெரியலையா? " சசி கேட்க, சரண் விழிக்க,

" என்ன காதலிச்சீங்க ரெண்டு பேரும்? என்னமோ போ.." சசி சொல்லிவிட்டு சென்று விட, நித்யா சரணை கொலை வெறியோடு பார்த்து இருந்தாள்.


" என் கூட இனி பேசாதீங்க.. என்ன நாளுன்னு கூட உங்களுக்கு தெரியல தான? "

" அய்யோ சத்தியமா தெரிலடி, தெரியலைன்னா தெரில தானே சொல்ல முடியும்? நான் தான் வீட்டில இருக்க மாட்டேனே, அப்பறம் எப்படி அம்மா அப்பா கல்யாண தேதி எல்லாம் தெரியும்? கவிக்குட்டி தான் எப்பவும் எல்லாரோட பிறந்த நாள், கல்யாண நாள் பிளான் எல்லாம் சொல்வா.. அதான்.. " சரண் சொல்ல,

" உங்களுக்கு தேதியும் தெரில அது நமக்கு எவ்ளோ முக்கியமான நாளும்னு தெரில, எல்லாம் என் தலை எழுத்து " நித்யா தலையில் அடிக்க,

" எல்லாம் இந்த கவியால வந்தது. சேட்டைக்காரி என்னை வம்பில் மாட்டிவிட்டா, என் மேல நம்பிக்கை இல்லாம போய்டுச்சு பாரு. ஒரு பக்கம் அவ மேல பாசமும் வருது, இன்னொருபக்கம் கோவமும் வருது.” சரண் சொல்ல,

" ஆமா ஏன் இருக்காது? வீட்டில் எல்லார் முகத்திலும் கரியை பூசிட்டு போனவ மேல பாசம் உங்களுக்கு ஏன் இருக்காது? அண்ணா அப்பா பேசி இன்னியோட மூணு மாசத்துக்கு மேல ஆகுது, நீ அவளை பத்தி பேசிட்டு இருக்க, நம்பிக்கை துரோகி அவ, இப்ப எதுக்கு அவளை பத்தி பேசிட்டு இருக்க நீ?" ரிஷி கேட்க, சரண் மீண்டும் நடந்தவற்றை கூற,

" ஜூலை 10 அம்மா அப்பா கல்யாண நாள். அன்னிக்கி தான் நீ நம்ம நித்யா அண்ணிக்கு உன் காதலை சொன்ன, அண்ணி அப்ப பத்தாவது, நீ பிளஸ் டூ போதுமா, போ போய் வேலையை பாரு.." ரிஷி கோவமாக சொல்ல,

நித்யா முழுதாய் கோவத்தில் சரணை முறைக்க, சரண் அன்று இரவு முழுக்க நித்யாவை சமாதானம் செய்ய வேண்டியதாக இருந்தது. ஊடல் உண்டு என்றால் கூடலும் உண்டு தானே? நித்யாவிடம் சரண் சரண் புகுந்து இருந்தான்.

" இன்னிக்கி கவி பேசலன்னா உங்களுக்கு இதெல்லாம் மறந்து போய்டுச்சுனு எனக்கு தெரிஞ்சே இருக்காது.. அவ இருந்த வரை அவளே உங்களுக்கு சொல்லிட்டு இருந்து இருக்கா இல்ல!?”

" ஆமா எனக்கும் இதெல்லாம் ஞாபகம் வந்து இருக்காது, செம்ம மெமரி இல்ல நான் ப்ரொபோஸ் பண்ணது.." சரண் கேட்க,

" அதான் தேதியை மறந்துடீங்க தானே?" நித்யா வாரிவிட,


" அதான் ரிஷி ஞாபகப்படுத்திட்டான் தானே? இனி மறக்க மாட்டேன் ஓகே வா.. "

" ரிஷி இல்ல.. கவி, அவ தான் எல்லாத்தையும் இப்ப உங்களுக்கு ஞாபகப்படுத்தி இருக்கா..”

" ஆமா கவிகுட்டி தான் போதுமா, எங்க இருந்தாலும் வாலு அவ வேலையை சரியா செய்றா, அன்னிக்கு விஜி அம்மா ரொம்ப பேசிட்டாங்க. அஜு அம்மாவா, விஜி அத்தையா இல்லைன்னா நடந்து இருக்கிறதே வேற, ஏன் நித்யா இவ இப்படி பண்ணா? அஜு - கவி கல்யாணம் பத்தி என்ன எல்லாம் ஆசை தெரியுமா எனக்கு? லூசு அவசரப்பட்டு என்னை நம்பாம, ச்சா பேசாம இருந்து இருக்கணும் இன்னிக்கி அவ கூட வாயாடி அவ நினைப்பாவே இருக்கு, அஜு நல்லா தான் பார்த்துப்பான், ஆனாலும் எப்படி இருக்கான்னு தெரிஞ்சுக்கணும் போல இருக்கு நித்யா, எல்லாரும் எப்போ சமாதானமாவாங்க?" சரண் கேட்க,

" இவளோ பாசம் இருக்கு தானே அவளுக்காக இப்பவாது பேசலாம் தானே வீட்டில்? " நித்யா கேட்க,

" வீட்டில் இப்ப சூழ்நிலை சரி இல்ல, அப்பா ரொம்ப மனசு ஒடிஞ்சு போய் இருக்கார், கவி பெயர் சொன்னாலே அழுதுறாரு, அவர்கிட்ட என்ன பேச? அம்மாக்கு கவியை பார்க்க ஆசை, அப்பாவை மீறி எங்க போறது? ஒரு போன் பண்ணலா நமக்கு? அவன் அம்மாக்கு மட்டும் பேச தெரியுது, எங்க அம்மாகிட்ட பேச அவளுக்கு என்ன? வீட்டுக்கு ஒரே பொண்ணு நித்யா அவளுக்கு தான் நாங்க மூணு பேரும் சேர்க்கற சொத்து, அவ கல்யாணம் ஊரே அசந்து போக செய்யனும்னு அப்பா அடிக்கடி சொல்வாரு.."

"எல்லா சொத்தும் காவ்யா பேரில் தான் இருக்கு, அவ புருஷன் கூட அவளை கீழ நடத்த கூடாதுனு இருந்தோம். அஜு தான் கவிக்கு துணைனு தெரிஞ்சு எவ்ளோ நிம்மதி தெரியுமா? அவளுக்கு புகுந்த வீடு பிறந்த வீடு எல்லாம் பக்கம், என் தங்கச்சி என் கண் முன்னாடி வாழ போறா ன்னு இருந்தேன். அஜு கையில் தொழில் கொடுத்து இங்கையே இருக்க வைக்கணும் எவ்ளோ யோசிச்சு இருக்கேன் தெரியுமா? அவ கல்யாணம் யாரும் இல்லாம, எங்கையோ ஒரு ஊரில் அண்ணன் எனக்கு தெரியாம நடந்து இருக்கு, என்னால எதும் செய்ய முடில, என்மேல கொஞ்சம் மரியாதை பாசம் இருந்தா சொல்லி இருப்பா தானே? அஜய் முக்கியம் தான் இல்லைன்னு சொல்லல, அவ பயம் எனக்கு புரிஞ்சுது ஆனா அண்ணன் என்மேல ஏன் நம்பிக்கை இல்ல? எங்கையோ அவன் கூட சந்தோசமா இருக்கா அது போதும் எனக்கு, என் முன்னாடி வந்தா எனக்கு கோவம் தான் வருது என்னை ஏன் கவி நம்பலன்னு, அந்த கோவத்தில் அவளை நான் காயப்படுத்த விரும்பலை.." சரண் அவன் மனதை தெளிவாய் உரைக்க,


" கவி மன்னிப்பு கேட்டா பேசுவீங்களா?"

" மாட்டேன், சண்டை போடுவேன்.. பாச சண்டை.. "

" அப்ப சீக்கிரமே போடுவோம், நானும் வரேன்.." நித்யா புன்னகையோடு கூறினாள்.

சசி வீட்டில் நிலைமை இப்படி இருக்க, விஜி வீட்டில் அவர் அழுது கொண்டு இருந்தார். எப்படி கவியை அப்படி பேசினோம் என்று, அவளுக்கு எவ்வளவு வலித்து இருக்கும்? இன்று மகன் தன்னை குற்றம் சாட்டி பேசும் படி ஆகிவிட்டதே என்று, ஏன் இது எல்லாம் முன்பே தோன்றாமல் போனது என்று? அவர் மனதில் கவி மீது இருந்த அன்பு அவரை அசைத்து பார்த்தது, சிறிது தெளிந்து இருந்தார். இதுவே கவிக்கு வெற்றி தான்.

அஜு இல்லத்தில், நான்கு அறை கொண்ட வீடு அதில் இரு படுக்கை அறை, ஒரு ஹால், சமையல் அறை என்று இருந்தது. அஜு அவன் பொருட்களை ஹாலில் தான் வைத்து இருந்தான். கவியை அந்த ஹாலில் இருந்து தான் பார்க்க முடியும் என்று, இன்று அனைத்தும் அவர்களின் படுக்கை அறைக்கு மாறி இருந்தது. விஜியிடம் பேசிவிட்டு, வந்து அனைவரும் உறங்க சென்று விட, கவி அஜுவின் நெஞ்சில் சாய்ந்து இருந்தாள்.

" மாமா அத்தை கூட இனி தினம் பேசணும் சரியா? “ காவ்யா கேட்க,

" எல்லாரையும் பேச வைக்க முடியும் கவி என்னால, மாமாவையும் அப்பாவையும் நீ தான் பேச வைக்கணும். விசு மாமா முன்னாடி நிக்க கூட தைரியம் இல்ல எனக்கு..” அஜய் சொல்ல,

" என்ன மாமா தப்பு பண்ண நீ? எதுக்கு பயம் சொல்லு? அதெல்லாம் ஈசியா நடக்கும் பாரு"

" இந்த ஐடியா எப்படி வந்தது?" அஜய் கேட்க,

" எல்லாம் சாரு அண்ணி பண்ணினது தான், எவ்ளோ முறை சாந்தமா சொல்லி இருப்பாங்க உன்னை விட்டு விலக வேண்டாம்னு அப்போ கேக்கல நான், நேத்து ரோஷமா என்னை சீண்டி விட்டாங்க உடனே உன்னை கூப்பிட்டு வந்துட்டேன். நேத்து உன்னை குளிக்க வைக்கும் போது புரிஞ்சுது மாமா, உன் சுய நினைவு போகுற அளவுக்கு குடிச்சு இருக்கன்னா உன் மனசு எவ்ளோ வலிச்சு இருக்கும், அதான் இனி கண்ணாமூச்சி விளையாட்டு எல்லாம் வேண்டாம் நேரடியா பேசுவோம் முடிவு பண்ணேன்."

" லவ் யூ டி அம்முகுட்டி, அம்மா பேசுறாங்க இது போதும் எல்லாரையும் பேச வைக்க, அம்மாவே வான்னு கூப்பிட்டா வேற என்ன வேணும்?"

" சீக்கிரம் நடக்கும். சரி மாமா தூங்குவோம் நீ வெளிய போ.."

" வெளிய போனுமா? நான் உன் புருஷன்டி, வெளிய போன்னு சொல்ற, அம்மு இன்னிக்கி நீ என் கைக்குள்ள இருந்தது எவ்ளோ நிம்மதியா இருந்தது தெரியுமா? நான் உன் கூடவே தூங்குறேன் அம்மு பிளீஸ், சத்தியமா வரம்பு மீற மாட்டேன். கண்ணியமா இருப்பேன்.." அஜய் சொல்ல,

" எதுக்கு இப்போ பிளீஸ் எல்லாம் சொல்ற? அண்ணாங்க எல்லாரும் இருக்காங்க அவங்க போனதும் இங்க வந்துரு அது வரை மட்டும் வெளிய தூங்கு சரியா? " கவி கூற,

அஜு அவளை அணைத்து நெற்றியில் முத்தம் ஒன்று கொடுத்து எழுந்து அவன் நண்பர்கள் இருக்கும் அறைக்கு சென்றான்.

காதல் வளரும்.


அத்தியாயம் - 40

அஜு அவன் நண்பர்கள் அறை வர, நால்வரும் அவனை பார்த்து விழிக்க,

" என்னடா இது லூக்கு? அதும் ஒருத்தன் லூக்கும் சரி இல்லையே, என்ன விஷயம்?"

" நீ ஏன் இங்க வந்த இப்போ?" யாது கேட்க,

" துக்கம் வரலைன்னு எங்களோட பேச வந்தியா?"

" தூங்க வந்தேன். தினம் தானே தனியா தூங்குறோம் இன்னிக்கி உங்க கூட தூங்குவோம் வந்தேன்.." அஜய் சொல்ல,

" என்னடா அஜு சொல்ற, அப்போ நீயும் கவியும்? சாரி அஜய்.. " ஷ்யாம் சட்டென கேட்டு அவன் கேட்டது அவர்களின் அந்தரங்கம் என மன்னிப்பு கேட்டு இருக்க,

" விளையாடாத டா, நீ என்ன பண்றனு உனக்கு புரியுதா? நாங்க எல்லாரும் ஒரே கேள்வியை தான் கேட்க நினைக்கிறோம். கவி - நீயும் புருஷன் பொண்டாட்டிய வாழவே இல்லையா? " கவின் கோவத்துடன் கேட்க,

“ இல்லைடா, ரெண்டு பேருமே தள்ளி போட்டு இருக்கோம், நாங்க சேர்ந்து வாழ இன்னும் நேரம் வரல.." அஜய் சொல்ல,

" முறைப்படி வீட்டில் செய்து வைச்சு இருந்தா வாழ்ந்து இருப்ப தானே? இப்ப மட்டும் என்ன? நீங்க இப்படி இருக்கிறது என்னால தான? மன்னிச்சிடு அஜய்..” உதீப் கூற,

" அடேய் எங்களுக்கு என்ன நடந்தாலும் நீ தான் காரணமா? அவ சின்னப்பொண்ணு, கவிக்கு Msc படிக்கனும், பிடிச்ச வேலைக்கு போகனும், அவ காலில் சுயமா நிக்கனும் இப்படி இன்னும் நிறைய ஆசை இருக்கு. அவ படிக்கட்டும். அவளுக்கும் இதில் இப்ப உடன்பாடு இல்ல."

“ உடம்பு சேர்ந்து மனுசு சேராத எத்தனையோ பேர் இருக்காங்க, நாங்க ரெண்டு பேரும் மனசு சேர்ந்து வாழ்றோம். தாலி ஒன்னும் படுக்க லைசன்ஸ் இல்லை. இன்னும் ரெண்டு மூணு வருஷதுக்கு இப்படி தான். எனக்கு இதில் எந்த வருத்தமும் கவலையும் இல்ல. முறைப்படி நடந்து இருந்தாலும் காவ்யா படிக்கனும் சொல்லி இருந்தா, இதே தான் நடந்து இருக்கும். அதுனால ஃபீலிங் விட்டு தூங்குங்க" அஜய் விளக்கம் கொடுக்க, அமைதியாய் ஐவரும் தூங்கினர்.

அடுத்த நாள் அனைவரும் அதிரபள்ளி பால்ஸ் சென்றனர். உதீப் காரில் உதீப், ஷ்யாம், கவி, அஜு. மனோ காரில் மனோ, சாரு, கவின், யாது என்று அருவியை நோக்கி பயணம் செய்தனர்.

" ஷ்யாம் உன் வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வை. ரிஷி பார்க்கனும் முக்கியமா அஜுவை உங்களோடு நெருக்கமா சரியா?" கவி கூற,

இனி சொல்லவா வேண்டும் அருவியில் நண்பர்கள் ஆடிய ஆட்டம் அத்தனையும் ஃபோட்டோ எடுத்து ரகம் ரகமாய் செல்ஃபி வைத்து கொண்டனர். சரியாக அது ரிஷியின் கண்களுக்கும் சென்றது.

கோவையில் சசி இல்லத்தில்,

ரிஷி ஷ்யாமின் ஸ்டேட்டஸ் பார்த்து கோவத்தில் இருந்தான். வீடு வந்து சேர்ந்தவன் சாப்பிட கூட அறை விட்டு வெளியில் வரவில்லை. சசி அவனை சாப்பிட அழைக்க, அவன் கோவத்தில் கத்த ஆரம்பித்து இருந்தான்.

" உன் மருமகன் செய்றது எதும் சரி இல்ல, எனக்கு சுத்தமா பிடிக்கவும் இல்ல, அவனை நான் சும்மா விட்டு இருக்கேன்னு ரொம்பவும் தான் ஆடுறான்.” ரிஷி கோவத்தில் கத்த,

" டேய், அஜய் கூட இப்போ உனக்கு என்ன சண்டை, இன்னிக்கி உன் முறையா? எதும் கூப்பிட்டு பேசினான்னா?" சசி கேட்க,

" அவன் ஏன் பேச போறான்? அவன் பேசினாலும் கூட நான் ஏன் பேச போறேன்.?"

" ஏன் ரிஷி விளக்கமா பேசவே தெரியாத உனக்கு? பெயரை சொல்லி தான் சொல்றது, நண்பன், நண்பன் சொல்லி கதை ஒரு முறை மாறி போனது போதாது போல உனக்கு.." நித்யா அதட்டி சொல்ல,

" அண்ணி உங்க தம்பியை தான் மருமகனு சொன்னேன். அவன் எதுக்கு அவன் கூட போய் ஆடிட்டு இருக்கான்? வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வேற இதில்.."

" இப்ப தானா சொன்னேன் விளக்கமா பேர் சொல்லுன்னு? யார் அந்த அவன்? அவன் கூட ஆடின அவன் யாரு?" நித்யா மீண்டும் கேட்க,

" ஐயோ அண்ணி, இந்த ஷ்யாம் அந்த அஜு கூட போய் அருவியில் ஆடிட்டு இருக்கான். அருவியில் நின்னு போஸ் கொடுத்துகிட்டு இருக்கான். என்கிட்ட வேலை இருக்குன்னு சொல்லிட்டு.. இப்ப அருவியில் ஆட மட்டும் வேலை இல்லாம போய்டுச்சு போல.."

" எங்க போட்டோவை காட்டு பார்ப்போம்.." நித்யா கேட்க, ரிஷி ஸ்டேட்டஸ் காட்ட, சசியும் நித்யாவும் பார்த்தனர்.


அனைவரும் குழுவாக நின்ற புகைப்படம் வர சசியின் கண்கள் மகளை பார்த்து கண்ணீர் சிந்தியது. அவள் முகத்தில் இருந்த சிரிப்பு, அஜுவின் கைக்குள் அவள் நின்று இருந்த அழகு, இருவரின் ஜோடி பொருத்தம் என்று எல்லாம் அவர் மனதை நிறைத்தது.

" இந்த ஷ்யாமுக்கு அங்க என்ன வேலைனு சொல்லுங்க?" ரிஷி கேட்க,

" உதீப்பும் தான் இருக்கான் அவனை கேட்டியா? ஷ்யாம் மட்டும் போன மாதிரி கத்துற?" நித்யா கேட்க,

" அவன் அஜுக்கும் தான் ப்ரெண்ட், அவனை நான் எப்படி கேக்குறது?"

" அஜு எங்களுக்கு தம்பி மாதிரி, ஷ்யாம் போவான் அவனையும் நீ கேக்க முடியாது. ஒன்னு பண்ணு அஜுக்கு கூப்பிட்டு உதீப் என் ப்ரெண்ட் நீ பேசாத சொல்லு.." நித்யா சொல்ல,

" அப்படி எப்படி சொல்ல முடியும்? அது அவன் தனிப்பட்ட உரிமை." ரிஷி கூற,

" அப்ப உன் தங்கச்சியை காதலிச்சா அப்ப மட்டும் துரோகி இல்லையா?" நித்யா கேட்க,

" அண்ணி" என ரிஷி மறுப்பாக கத்தி இருந்தான்.

" நான் எதும் தப்பா சொல்லல, யோசி உனக்கே புரியும்.."

இவை அனைத்தும் நித்யா - காவ்யா இருவரின் திட்டம். நித்யாவை அவளுக்காக பேச வைக்க காலையில் எழுந்ததும், அண்ணியை அழைத்து இரவு சரண் பட்டபாடு, பின் சரண் கவி பற்றி பேசியது, அவனின் மனநிலை எல்லாம் கூற, ரிஷியை சரி செய்ய இன்று போட்டு உள்ள திட்டம் இது. அதை சரியாய் நித்யா செய்ய, ரிஷி தெளிய முதல் அடி கொடுத்து விட்டாள் நித்யா. அவன் மனதில் முதல் முறை அஜு பக்கம் உள்ள நியாயம் விளங்க ஆரம்பித்து இருந்தது. கவி போட்ட திட்டம் ரிஷிக்கு தான். ஆனால், அது வேலை செய்தது சசிக்கும் சேர்த்து,

" நித்யா எனக்கு அந்த ஃபோட்டோ வேணும், கவியும் அஜுவும் நிக்கறது, ஜோடி பொருத்தம் அருமை இருக்கு. பார்க்கவே சந்தோசமா இருக்கு, ஷ்யாம் கிட்ட சொல்லி அனுப்ப சொல்லு.." சசி குழந்தை போல கேட்க,

நித்யா ஷ்யாமிடம் கூற, ஷ்யாம் கேமரா இருவரையும் தனியாக பல புகைப்படத்தை அவர்களுக்கே தெரியாமல் எடுத்து கொட்டியது. அனைத்தும் சசியின் மொபைலுக்கு செல்ல, இருவரின் புகைப்படம் பார்த்து மனம் நிறைந்த போனார். கடைசி புகைப்படம் அவரின் தாய்மையை தூண்டி விட, கவியின் அழைப்பு சசியின் அலைபேசியில், அவள் செய்த எதுவும் அப்போது நினைவில் இல்லை.

காதல் வளரும்.


அத்தியாயம் - 41

ஆற்றில் ஆட்டம் போட்டு விட்டு, அருகில் உள்ள டேம் எல்லாம் சுற்றி பார்த்து விட்டு மாலையில் தான் வீடு திரும்பினர். அனைவரும் களைத்து போய் இருக்க, கவி உறங்கி அஜு மடியில் உறங்கி இருந்தாள்.

" ரொம்ப மாறி இருக்காடா அஜு, நம்ம கவி. ரொம்ப பக்குவம், பொறுமை எல்லாம் வந்துருச்சு." உதீப் சொல்ல,

" அவ்ளோ கஷ்டம் என்னால, நான் ரிஷிக்கிட்ட இதை ஏன் சொல்லாம இருந்தேன் தெரியல டா, சொல்லி இருந்தா இந்நேரம் கவியும் சந்தோசமா இருந்து இருப்பா.. என்னவோ அவன் கோவம் மட்டும் எனக்கு தப்புன்னு தோணவே இல்ல.."

" அவன் கோவம் மட்டும் தான் அஜு சரி, அவனை இதில் தப்பு சொல்ல எதுமே இல்லை, அவன் ஒடினது எல்லாம் கவிக்காக மட்டும் தான், இப்பவும் உன்னை அவன் வெறுக்கல, கோவம் ரொம்ப உரிமையான கோவம் உன் மேல, என்கிட்ட சொல்லி இருந்தா நானே பண்ணி வெச்சு இருப்பேன். அவன் நல்லவன் தான் எல்லாம் சொன்னான். இதுக்கு மேல அவன் எப்படி கோவத்தை காட்டுவான்?" ஷ்யாம் கேட்க,

" அவன் வலி ரொம்ப பெருசு அஜு, இங்க நடந்தது எல்லாம் தப்பு அதில் பாதிக்கப்பட்டது எல்லாம் கவியும், நீயும், ரிஷியும் தான். என்னால நடந்த பிரச்சனையை நானே சரி செய்ய முயற்சி பண்றேன் அஜு.." உதீப் கூறினான்.

" கவி இப்ப தெளிவா இருக்காடா, அம்மாவையே என்னோட பேச வைச்சு இருக்கா.. இப்போதைக்கு இது போதும் திட்டிக்கிட்டே பேசினா கூட போதும்."

" வீட்டில் உள்ள பொண்ணுங்க எல்லாரும் ஒன்னா சேர்ந்தா போதும் அஜு, வீட்டை சேர்த்து வெச்சுருவாங்க. நித்யா அக்காவும், கவியும் இப்ப சேர்ந்து இருக்காங்க. இப்போ தானே விஜி அத்தையை பேச வெச்சு இருக்கோம், சசி அத்தையையும் பேச வைப்போம். அப்புறம் பாரு எல்லாம் சரியா போய்டும்." ஷ்யாம் நம்பிக்கை கொடுத்தான்.

அஜுவிடம் இருந்து பதில் இல்லை என்று ஷ்யாம் திரும்பி பார்க்க, அஜு கவியின் வாயில் வரும் அருவியை துடைத்து கொண்டு இருந்தான். ஷ்யாம் சிரித்து விட்டு,

" இன்னுமா இந்த பழக்கம் போகல? " ஷ்யாம் கேட்க,

"அப்ப சின்னதில் இருந்தே இப்படி தானா? " அஜய் சிரிப்புடன் கேட்க,

" ஆமாடா, மாமா வேட்டி, சரண் அண்ணா பண்ட் எல்லாம் நினைச்சு விட்டுருவா, நானும் ரிஷியும் இவளுக்கு காரில் தூங்க மடி கொடுக்க மாட்டோம். தூங்க ஆரம்பிச்சா அவளை மறந்து அசதியில் இப்படி தான். இன்னிக்கி அருவியில் ஆட்டம் அதிகம். சோ கவி வாயுலையும் அருவி அதிகமா தான் இருக்கும். நீ அவ வாயுக்கு கீழ கர்சீப்பை வைக்காம, உன் சட்டைய கழுட்டி வை, இல்லன்னா உதீப் காரை கழுவி விட்டுரு.." ஷ்யாம் சொல்லிவிட்டு சிரிக்க,

" அதுவும் சரி தான் அருவி நிக்காம வருதுடா.." அஜய் சொல்ல,

ஒரு வழியாய் வீடு வந்து சேர்ந்தனர். வீட்டின் உள் வந்தவள் படுக்கையில் விழுந்து தூங்கி இருந்தாள். அவளின் அலைபேசி அவள் கைப்பையில் ஹாலில் இருந்தது. அனைவரும் அசதியில் உறங்கி விட, கவியின் அலைபேசி அலறியது.

பகலில் ஒரு வெண்ணிலா
வந்தால் பாவமா?

இரவில் ஒரு வானவில்
வந்தால் குற்றமா ?

விடை சொல்.. சொல் சொல்..
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்

விடை சொல்.. சொல் சொல்..
மனசுக்குள் ஜல் ஜல் ஜல்

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு
இவை இல்லாமல் வாழ்க்கையா?

நூறு கனவுகள் கண்டாலே
ஆறு கனவுகள் பலிக்காதா ?
கனவே கைசேர வா...

மீண்டும்.. மீண்டும் அலறியது அவளின் அலைபேசி எடுக்க தான் அங்கு ஆள் இல்லை.

யாது மெல்ல கண் திறந்து பார்க்க, அலைபேசியின் சத்தம் கேட்டு, அது எங்கு இருந்து வருகிறது என்று பார்த்து, அஜுவை உலுக்கி எழுப்பி விஷயம் சொல்ல, அஜய் பாதி தூக்கத்திலேயே அலைபேசியை பார்க்க எண்கள் வந்து இருந்தது. அவன் அழைப்பை ஏற்க, மறுமுனையில் சசி அழுகையோடு,

" அம்மா மேல அவ்ளோ கோவமா? பேச மாட்டியா? நான் என்ன பண்ணேன்? எனக்கு உன்மேல கோவம் இல்ல கவிம்மா.." சசி அழுகையோடு பேச, அஜு முகத்தில் வெளிச்சம்,

" அத்தை நான் அஜு பேசறேன், கவி தூங்கிட்டு இருக்கா, அவ போன் வெளிய இருந்துச்சு. எல்லாரும் தூங்கிட்டோம். அதான் ஃபோன் எடுக்கல, உங்க மேல என்ன கோவம் அவளுக்கு? “

" உன்மேல கோவமா இருக்கேன் நான், நீ ஏன் கவி அப்பாகிட்ட இதை சொல்லவே இல்லை? சொல்லி இருந்தா இந்நேரம் எப்படி இருந்து இருக்கும் வீடு? சரி விடு. இப்ப இதை பேசி என்னாக போகுது, எல்லாம் கை மீறி போய்டுச்சு. எனக்கு சந்தோஷம் அஜு, நீ கவியை நல்லா பார்த்துப்பன்னு தெரியும். முன்ன மாதிரி அவ கூட வம்பு பண்ணி சண்டை எல்லாம் போடாதே.." சசி கூற,

" நான் சின்ன பையான அத்தை அவ கூட சண்டை எல்லாம் போட? அதும் வம்பு இழுத்து? கவி என் பொறுப்பு கவலை இல்லாம இருங்க, அந்த வாலு தான் வாய் அதிகமா பேசுறா.." அஜய் சொல்ல,

" அட சொல்ல வந்ததை விட்டு வேற எதோ பேசுறேன் பாரு, அஜு அவளுக்கு ஐஸ் கிரீம் எதுக்கு வாங்கி கொடுத்த நீ? தண்ணியில் ஆடிட்டு ஐஸ் கிரீம் வேறயா? அவளுக்கு சேரவே சேராது அஜு, தூங்கி எழுந்தா சளி புடிச்சு இருக்கும் பாரு, விட்டா காய்ச்சலாகிடும். ரெண்டு நாளைக்கு தூதுவளை ரசம் வைச்சு கொடு, மிளகு சாதம் செஞ்சு தரணும் இல்ல சளி, இரும்பல், காய்ச்சல் எல்லாம் வந்துரும். என் கைகுள்ளயே இருந்தா இவளோ நாளும் எதாவதுன்னா நானே பார்த்துப்பேன், இப்ப எங்கையோ தனியா இருக்கீங்க நான் என்ன செய்ய? பெத்த மனசு பதறுது.." சசி பேச பேச அஜு கண்களில் கண்ணீர்,

"கண்டிப்பா அத்தை, செய்து கொடுக்கறேன், இன்னிக்கி ஒன்னு இல்ல மூணு ஐஸ் கிரீம் முழுங்கிட்டு தான் தூங்குறா, எழுந்ததும் பேச சொல்றேன் அத்த.."

" நீயும் பத்திரமா இரு அஜு.."

" என்னை மன்னிச்சுடுங்க அத்த, நான் செய்தது தப்பு தான். இவளோ பாசமான குடும்பத்தை விட்டு அவளை பிரிச்சுட்டேன். கவி தான் அத்தை என் உயிர். அவளை சந்தோசமா, பத்திரமா பார்த்துப்பேன்."

" நீயும் என் பையன் தான். இனி இப்படி எல்லாம் பேசாதே, விஜியை சமாதானம் பண்ணு அஜு, அவளுக்கு உன் மேல கோவம் இல்ல, அண்ணா மேல அன்பு. அவர் தலை குனிய காரணமா நீ இருந்துட்ட அதான் அவளுக்கு கோபம். அவளுக்கும் அவ காதல் பெருசு தான்." சசி கூற,

" அத்தை செம்ம.. கவி எப்படி இவளோ அறிவுன்னு இப்போ தான் புரியுது, கண்டிப்பா அம்மாவே கவியை ஆரத்தி எடுத்து கூப்பிடுவாங்க பாருங்க.." அஜய் சொல்ல,

" அது போதும் என் பொண்ணு சந்தோசமா இருந்தாலே எனக்கு போதும், ரெண்டு பேரும் நூறு வருஷம் சந்தோசமா, நிறைவா இருக்கனும்.” சசி நிறைவான மனத்துடன் சொல்ல,

" எனக்கு பேச வார்த்தையே வரல அத்த.." அஜய் கூற,

பின் அஜு விசு பற்றி பேசி விட்டு அலைபேசியை வைத்து விட்டு மணி பார்த்தான் மணி ஆறு முப்பது. ஒரு முடிவோடு வெளியில் சென்றவன் சிக்கன் எடுத்து வந்து அவன் கையால் கவிக்கு மிளகு கறி செய்து, தக்காளி ரசம் வைத்து முடிவில் தூதுவளை போட்டு இருக்க மூடி, சாதம் செய்து அனைவரையும் உண்ண அழைத்தான்.

கவி எழும் போதே தும்பல் போட்டு கொண்டே எழுந்தாள். உணவை பார்த்து வாய் அடைத்து போனவள், சசியின் உரையாடல் கேட்டு இன்பமாய் அதிர்ந்து போனாள். பின் சசியுடன் பேசி, அழுது, உண்டு உறங்கினர். கவி வீட்டில் அத்தனை பேரும் அவளின் நினைவில், ரிஷி மட்டும் அஜுவின் நினைவில் அவனை அடித்து உடைந்த அந்த பேட் தொட்டு பார்த்து கொண்டு இருந்தான்.

காதல் வளரும்.

© GMK NOVELS