...

13 views

ஓர் ஏழை விவசாயியின் கடைசி நெடி..
வழக்கம் போல அன்று ஆப்பிஸ் பரபரப்பாக இயங்கிகொண்டு இருந்தது
தினமும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஓர் முதியவர் அலுவலகம் வருவதும் ஒன்றுமே செய்யாமல் திரும்பிச்செல்வதுமாய் இருந்தார் .
அந்த ஆப்பீஸின் சிற்றூளியன் ஒருவன் தினமும் அவரின் நடத்தையை அவதானித்துக் கொண்டே இருந்தான்.
அவர் வழமையாக வருகை தருவது கம்பேனியின் மேனேஜர் சமூகம் தரும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தான்...
இவ்வாறே அவர் தினமும் வருவதும் மேனேஜர் வரும் போது ஒளிந்திருந்து பார்ப்பதும் பின்னர் புறப்படுவதுமாய் இருந்தார் ..
ஓர் நாள் அவன் அவரின் அருகில் சென்றான் சென்று அவரை மேலும் கீழும் ஏற்றம் பார்த்தான் வியர்வை அப்பிய நெற்றியை துண்டால் ஒத்திக்கொண்டு இருந்தார் அந்த முதியவர்.
அவர் சுருங்கிய நெற்றியும் வியர்வை பூத்த துண்டும் கரடு முரடான அவர் கால்களும் அவர் கருமை நிறமும் எனக்கு உணர்த்தியது அவர் ஓர் ஏழை விவசாயி என்று..
மேனேஜர் வரும் வரை காத்திருந்தார் அன்று மேனேஜர் வண்டி பஞ்சர் ஆகி இருப்பதாக தகவல் தந்திருந்தார்...