பைத்தியக்கார பிள்ளை
கிருஷ்ணன் மூக்கை உறிஞ்சி கொண்டே இருந்தான். என்னடா அம்பி ஜல்பா என கேட்டாள் பாக்கியம் பாட்டி. அவளுக்கு பதில் சொல்லாமல் விளையாட போய் விட்டான் கிச்சா. கிச்சா மூளை வளர்ச்சி குறைபாடு உள்ளவன். அவனை யாரும் விளையாட சேர்த்துக் கொள்வதில்லை. அவன் அம்மா டே அம்பி இவனையும் சும்மா விளையாட சேர்த்துக்கோடா. கிச்சா பாவம்ல என்பாள். அவளுக்காகவே அவனை சேர்த்து கொள்வார்கள். ஒரு மணி நேரம் உப்புக்கு சப்பாணியா விளையாடி விட்டு வீடு திரும்பினான். மீண்டும் பாக்கியம் பாட்டி என்ன கிருஷ்ணா ஜல்பா என கேட்டாள். திடீர் திடீர் என வைரமுத்துவாக மாறி பதில் சொல்வான் அந்நியன் அம்பி. சளிப்பிடிச்சிருக்கலாம்.. ஆவி பிடிக்க ஆசைப் படலாம்...
பட் ஒன் திங்...ஹார்ட் காப்பி குடிக்கிறச்சே ஹார்ட்ல உள்ள ஜல்பு போய்விடும் என்பான். ஏதோ தத்துபித்துன்னு உளறுறான். வீட்டுக்குள்ள போட்டு கதவ சாத்து என சொல்லி விட்டு நடையை கட்டினாள் பாக்கியம் பாட்டி.
பட் ஒன் திங்...ஹார்ட் காப்பி குடிக்கிறச்சே ஹார்ட்ல உள்ள ஜல்பு போய்விடும் என்பான். ஏதோ தத்துபித்துன்னு உளறுறான். வீட்டுக்குள்ள போட்டு கதவ சாத்து என சொல்லி விட்டு நடையை கட்டினாள் பாக்கியம் பாட்டி.