...

2 views

03) இமைக்கா நொடிகள்.
அத்தியாயம் 3

Oliver- இது மட்டும் வெளிய தெரிஞ்சுதுன்னா நம்ம businessஏ போயிடும்..

Jhon- தெரியாம பாத்துக்கலாம். நமக்கு வேற வழி இல்ல. தெரிஞ்சா நம்ம business போறது என்ன, நம்மலே மேல போயிருவோம்.

Oliver- அந்த சூரஜ் பையனால பெரிய ப்ரச்சனை வராது இல்ல??

Jhon- பாக்கலாம். நம்ம பக்கம் எதாவது திரும்புனா போட்டு தல்லிர வேண்டியது தான்.

Oliver- சரி.. ஆனா, எதுக்கும் அந்த பையன் மேல ஒரு கண் வச்சுக்க..

*
*

அந்த பென் அவனை பார்த்து முறைத்து விட்டு, கத்தியை எடுத்து தன் நெற்றியில் வெட்டிக் கொண்டாள்.

"உனக்கு என்னோட தோல் தான வேணும்.. இப்போ இந்த தோல் உனக்கு உபயோகமா இருக்காது இல்ல" என்று கேட்டாள் அவள்.

இதை பார்த்த இருவரும், சோகத்தில் அமர்ந்து இருந்தனர்.

"ஏன் டி அவ அப்டி பண்ணா?? அந்த கத்திய வச்சு அவன் கழுத்தையே அவ வெட்டிருக்கனும்.." என்று கோபத்தில் கூறினாள் நம் நாயகி மனிஷா.

"அவளுக்கு அவ friend முக்கியம் டி. பாரேன், ரெண்டு பேரும் எவ்ளோ thick friends இல்ல" என்று கேட்டாள் விதுன்யா.

நிஷா(மனிஷாவை சுருக்கி நிஷா)- நான் என்ன கேக்குறேன்.. நீ என்ன சொல்ற..

விது- அந்த doctorக்கு அவளோட தோல் தான முக்கியம். அதுனால தான் அவ நெத்தில வெட்டிட்டா...

நிஷா- சரி விடு.. இது எவ்ளோ பழைய படம் இல்ல?? என்று கேட்டாள்.

விது- ஆமா.. இது வந்து பதினஞ்சு வருஷத்துக்கு மேல இருக்கும்

மனிஷா, விதுன்யா இருவரும் இங்குள்ள reporterஆக வேலை செய்கிறார்கள்.

விதுவிற்கு ஏதோ ஃபோன் வர, அதை எடுத்து பேசியவளின் முகம் மாறியது..

நிஷா- என்ன ஆச்சு விது??

விது- நிஷா.. ஏதோ ஒரு கொலை நடந்துருக்காம். வா போலாம்.. என்று கூறி இழுத்து சென்று விட்டாள்.

சூரஜ் வருவதற்கு முன்னாலையே அங்கு வந்தனர் இருவரும்.

அவள் reporter என்றாலும், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. பல்வேறு channelஇல் இருந்தும் reporters வந்த பின்னர் தான் அனைவரையும் விட்டனர்.

விது பேசி கொண்டிருக்க, நிஷா அங்கிருந்தவர்களின் கண்களில் மன்னை தூவி விட்டு உள்ளே நுழைந்தாள்.

அங்கு படுத்திருந்தவனை பார்த்தவளின் முகம் அருவெறுப்பை கக்கியது.. அந்த கட்டிலுக்கு அருகில் உள்ள மேசையில், இருந்த காகிதத்தை எடுத்து விட்டு, வெள்ளை காகிதத்தை வைத்து விட்டு வெளியே வந்து விட்டாள்.

அப்போது தான், சூரஜ் வந்திருந்ததால், அனைவரும் பகத்து வீட்டில் இருந்த பினம் அருகே நின்றிருந்தனர். நிஷா வந்ததையும் சென்றதையும் யாரும் கவனிக்கவில்லை.

*
*

விது- இத எதுக்கு டி எடுத்துட்டு வந்த??

நிஷா Laptopஐ எடுத்து அவள் முன் வைத்தாள்.

நிஷா- விது.. நான் இப்போ research பண்ணிட்டு இருக்குறது இது தான். "Should not Blink" Game.. இது பல நாட்டுல தடை செய்யப்பட்ட game. ஆனா லன்டன்ல இன்னமும் இந்த gameஅ நடத்திட்டு வராங்க.. illegalஆ.. அடுத்த வருஷம் இது இந்தியாவுலையும் நடக்கும். அத தடுக்கனும்..

விது- இது என்ன மாதிரியான game..

நிஷா- கண் இமைக்காம பாக்கனும்..

விது- என்னது.. கண் இமைக்காம பாத்தா ப்ரச்சைனையா??

நிஷா- ஆமா விது. கண் இமைக்காம அஞ்சு நிமுஷம் பாக்கலாம். ஆனா, ஒரு மணி நேரத்துக்கு மேல கண் இமைக்காம பாக்கனும். அதுனால  கண்ணுல ப்ரச்சனை வரும். அதுனால தான் அத band பண்ணாங்க. ஆனா, இப்போ அத illegalஆ பண்றாங்க. எனக்கு என்னமோ, இத conduct பண்றவங்களே இந்த கொலைய பண்ணிருக்கனும்னு தோனுது..

விது- எப்டி சொல்ற??

நிஷா- அவங்கள தவிர பண்றதுக்கு யாருமே இல்ல.. என்று கூறியவளுக்கு அப்போது தான், அந்த துண்டுச்ட்டை பற்றிய ஞாபகம் வந்தது.

அதை எடுத்து பார்த்தாள்.. அதில் 'வேட்டை தொடரும்' என்று தமிழில் எழுதி இருந்தது.

நிஷா- விது... அது அந்த இடத்துல இருந்து எடுத்தது. இதுல 'வேட்டை தொடரும்'னு தமிழ்ல எழுதி இருக்கு. அப்போ கொலை பண்ணது தமிழ் காரணா??

விது- இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம்.. என்று கூறி தோளை குளுக்கினாள்.

*

இங்கு சூரஜ் Liam இறந்து போன இடத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அங்கு தான் எந்த தடையங்களும் இல்லையே.. அதையே சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருக்க, ஒரே ஒரு இடத்தில் மட்டும், ஒரு நகத்துண்டு கீழே விழுந்து இருந்தது. அதை கையில் எடுத்து பார்த்தான். அதில் கொஞ்சம் பிய்க்கபட்டு இருந்தது.

அப்படியென்றால், பக்கத்து அறையில் அவனை கொன்ற பிறகு தான் இவனை வந்து கொன்றிருக்க வேண்டும். இந்த நகத்தின் ஒரு பகுதி தான் இன்னொரு பினத்தின் கண்களில் இருந்தது.

அதை அவன் plastic coverஇல் போட்டுக் விட்டு பக்கத்து வீட்டிற்கு சென்றான்.

அங்குள்ள அனைத்தும் அவனிற்கு வேறு எதையோ ஞாபக படுத்தியது.. அதையே பார்த்துக் கொண்டே வந்தவன், சட்டென நின்றான்.. ஒரு painting அவனை வெகுவாக கவர்ந்தது. அதையே பார்த்துக் கொண்டு நின்றவனின் மனம் எதையோ சொல்ல துடிக்க, ஏதோ யோசித்துக் கொண்டே நின்றான்.

சிறிது நேரத்தில் ஒரு தெளிவு பெற்றவனாக அந்த paintingஐ எடுத்துக் கொண்டு வேகமாக ஒரு கடைக்கு சென்றான்.

*

விஷால் அமர்ந்து 'Should not Blink' எனும் gameஐ பற்றி தெரிந்து கொள்ள, கடை வீதிக்கு வந்தான். அங்கு ஒரு கடையில் மட்டும் கூட்டம் குவிந்து இருக்க, வேகமாக அவனும் வரிசையில் சென்று நின்றான். சிறிது நேரத்தில் அவனுக்கு டோக்கன் வழங்க பட்டது. அதை பார்த்த விஷாலுக்கு மயக்கமே வந்து விட்டது.. ஏனெனில், அவனது டோக்கன் எண்-1999..

கோபத்துடன் சூரஜிற்கு call செய்தான் விஷால்.

அவனோ எடுக்கவே இல்லை.

மீண்டும் மீண்டும் முயற்சித்து பார்த்தான். ஆனால், அவன் ஃபோனை மட்டும் எடுக்கவே இல்லை... கடுப்புடன் வரிசையில் நின்றிருந்தான். அவனுக்கு பின் ஒரு இரண்ணாயிரம் பேர் நின்றிருப்பார்கள் போலும். வரிசை நீண்டு கொண்டேஏஏஏ போனது..

'எப்டி இப்டிலாம் வந்து நிக்கிறாங்க. கால் வலிக்காதா??' என்று அவன் மனதினுள் கேட்டுக் கொண்டிருக்க, அனைவருக்கும் ஒரு wheeling chair கொடுக்கப்பட்டது. அனைவரும் அதில் அமர்ந்து உருட்டிக் கொண்டே செல்வார்கள் போலும்..

*


© Ashwini