இருள் திண்ணும் பறவை பாகம்- 5
சூரியன் அடிவானத்தில் மறைந்து கொண்டிருந்தது.நான் அதைப் பார்த்தேன்.நான் அதை நோக்கி நடக்க வேண்டுமா அல்லது திரும்பி காத்திருக்க வேண்டுமா என்று யோசித்தேன்.நான் அதனை நோக்கி பயணத்தை தொடர்ந்தேன்.மேற்கு வானில் செந்நிற கதிர்களுடன் சூரியன் விடியலை நோக்கி புறப்பட்டு கொண்டிருந்தது.அந்த செங்கதிரோன் மறைவை கண்டு தன் இடம் பெயரும் பறவைகளின் ஓசைகளை கேட்டேன்.அந்த பட்சிகளின் இனிய ஓசைகளை கேட்டு ரசித்தேன்.தன்னிலை மறந்தேன்.மாலை நேரப் பொழுது ஒரு தனி மயக்கம்.இதமான தென்றல் காற்றில் நனைந்தவாறு மணம் தரும் மலர்களின் வாசம் மணந்து ஹாஹா! அது ஒரு ரம்மியமான தருணம்.அது என்னை அழைப்பது போன்று உணர்ந்தேன்.அவ்வேளை மெல்லிய என் கால்கள் அதை நோக்கி நகர்ந்தது.அப்போது என் விழிகளை திறந்து பார்த்தேன்.அருவிகளின்...