...

12 views

பரோட்டாவின் வரலாறு..!
தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறதா?
இன்று தமிழகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது பரோட்டா கடை. அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை ,அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு. விருதுநகர் பரோட்டா ,தூத்துக்குடி பரோட்டா ,கொத்து பரோட்டா ,சில்லி பரோட்டா ,சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே .

பரோட்டாவின் கதை என்ன தெரியுமா?
பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். மைதா போதுவாக கோதுமையால் தயாரிக்கப்படும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மரவள்ளிக்கிழங்கிலிருந்து மைதா தயாரிக்க தொடங்கினார்கள். மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது.

பரோட்டா பொதுவாக எப்படி செய்வார்கள்?...