...

3 views

இதயத்தின் ஓசைகேளாயோ
மோதலில் முளைத்திடும்
வெள்ளை தீயே இரு குளிர் நிலாக்கள் நீள் விழி பார்வையில் பாகாய் உறைந்திடும் ஊடல்மொழியழகே
உயிர்க்குள் சிறையாகிறேன்
உன் சுவாசமாய்
🌼அத்தியாயம் இரண்டு 🌼
"சிற்பி " நில்லு..., "காலை சாப்பாடை cut பண்ண கூடாதுன்னு சொல்றேன்..., கேட்கவே..! மாட்டியா..? நீ என்று கையில் டிபன் பாக்ஸ் உடன் வந்தவரின் கண்களுக்கு தூரத்தில் வண்டியில் செல்லும் மகளை எண்ணி அடங்கவே மாட்டேங்குறா.." அவங்க அப்பா வரட்டும்.,'இரண்டில்ஒன்று' பார்த்திட வேண்டியது தான்.என்று 'அடுகளைக்கு' சென்றார்..
"ஆராதனா வீட்டின் முன்பு.., இரு சக்கரத்தின் வாகனத்தை நிறுத்தி
'ஹார்ன்'கொடுத்தாள்"
சிற்பிகா. வீட்டின் உள்ளே இருந்து "வரேன் டி...இதோ வந்துட்டேன் என்று சத்தம் மட்டும் கேட்டது.."
ஆராதனாவும் "தலை குளித்து காயவைத்து விட்டு உச்சிமண்டையில் கிளிப்பில் கொஞ்சம் முடியை அடக்கி விட்டு..,அப்படியே free hair விட்டு விடுவாள் (அவளின் முடி சீக்கிரம் காயாது ஏன் என்றால்...!?curling ஹேர்) "இளஞ்சிவப்பு வண்ணத்தில்" சுடிதார் அணிந்து வெளியில் வந்தாள்..." வாடி.., சீக்கிரம் போகணும் இன்றைக்கும்.." அதே டைம்..,ஆகிடுச்சு பார்த்தியா...! என்று சிற்பிகா கையில் கட்டிருந்த 'வாட்ச்சை' பார்த்துக்கொண்டே கூறினாள்"
"மனுவை ....,நெனச்சாதான்... பீதி ஆகுது ... டி..., ஆராதனாவின் விழிமருட்சியோடு கூற...
ம்ம்ம்.. அம்மு. "நேற்று ஒரு ப்ராஜெக்ட் பன்னிட்டு அடிச்சு போட்ட மாறி தூங் கிட்டேன்... " நீ என்ன..? அதை பண்ணி முடிச்சிட்டியா..!? ஹிம்ம் அதனால் தான் இவ்வளவு லேட் சரி,சரி வா...கிளம்புவோம்.., என்று வண்டியில் ஏறி உட்கார நில்லுங்க,நில்லுங்க.... என்ற குரலில் இருவரும் திரும்ப "சாப்பிடாமல் கிளம்புறதே..! உங்க இருவருக்கும் வேலையா.. வெச்சிருக்கீங்க இந்தாங்க என்று சாப்பாட்டை கையில் திணித்து விட்டு.., இருவருக்கும் 'முல்லைசரத்தை' சமமாக பங்கிட்டு தலையில் வைத்துவிட்டு இப்போ கிளம்புங்க என்றார் மலர்" (ஆராதனாவின் அம்மா) சரி ம்மா..., 'மிச்சம் வைக்காமல் சாப்பிட்டுருக்கனும் என்று கூறிவிட்டு உள்ளே சென்றுவிட.., அவர்களும் வண்டியை கிளப்பிய வேகமே சொல்லியது இருவரும் பதட்டமாய் தங்களின் "மனுதர்மனை" நினைத்தப்படியே ., ஓட்டினாள் ஏண்டி இன்றைக்கும் மனு "பனிஷ்மென்ட்" பண்ணுவாங்களா..., அத நெனச்சா..! பயமா...! இருக்குது டி என்று புலம்பினாள் ஆராதனா.
விடு,விடு பார்த்துக்கலாம்.., என்று "அசால்டா பதில் சொல்லிக்கொண்டே traffic signal விழுந்ததை...,கவனிக்காமல் நேராக கொண்டு சென்று அவளுக்கு முன் சென்ற "காரின்" மீது" டமால்" என்று மோதிவிட்டார்கள் ஹையையோ....என்று வடிவேல் பாணியில் ஆராதனா டைம்க்கு ஏற்ற ரைமிங் பாட..., ஏற்கனவே அவளின் "படபடப்புடன் கையை பிசைய...,இப்போ என்ன செய்வது .. என்று குழம்பி நின்றவளை ஆராதனாவின் பேச்சு எரிச்சல் ஏற்படுத்த..., உன் வாயை மூடுடி பக்கி என்று அதட்டியவள் அவளும் அமைதியாய் என்ன நடக்கும் என்று காத்திருந்தாள்"
பட்டென்று காரின் கதவை திறக்கும் சத்தம் அதிலிருந்து இறங்கியவன் தன் "காரின் டிக்" லைட் உடைந்து நசுங்கி போய் இருந்ததை..,கவனித்தவன் முகத்தில் 'கூலிங் கிளாஸை' மீறி பார்வையின் 'உக்ரம்' வெளிப்பட்டது ..." அதில் உறைந்து போய் நின்றனர்..,
ஹேய்..., "அறிவில்லை... கண்ணை எங்கு வைத்து கொண்டு வண்டியை
ஓட்டுனீர்கள் chai.... bloody girls,nonsen திட்ட...,ஆரம்பித்தவனின் பேச்சு முக்கால்வாசி 'சுத்த ஆங்கிலத்தில் அதிகம் நிரம்பி இருந்தது'அவர்கள் கவனித்தும் கவனியாது போலவே நின்றனர்...
வணக்கம்🌼🙏
தொடரும் 🤍
அநபாயன் 🤍
© Ash(ஈசன் )