...

9 views

காதல் கல்யாணம்
பாண்டிய நாட்டு அரசவை கூடி நாட்டின் மேன்மை பற்றி விவாதித்து கொண்டு இருந்தது. மன்னா!! சோழ நாட்டு இளவேல் வந்து இருக்கிறார்.
  
        அரசவைக்கு வர சொல்.

         உத்தரவு மன்னா.

         பாண்டிய நாட்டு மன்னர்க்கு என் வணக்கங்கள். சோழ நாட்டு இளவரசே வருக. உங்கள் வருகையை முன்னரே அறிவித்து இருத்தால் பாண்டிய நாட்டு உங்களை மேள தாளத்துடன் வரவேற்க்கும்மே..
     
         அதற்கு எல்லாம் எனக்கு அவகாசம் இல்ல.

      சரி தாங்கள் வந்த நோக்கம் இளவரசே.

      உங்களுக்கு தெரியாத மன்னா.

      தெரியாது இளவரசே! என்று கேலி பதில் கொடுத்த மன்னர். தாங்கள் தங்கள் திருவாய் மொழிந்து உரைக்க வேண்டிக்கொள்கிறேன்.

       ஓஓ இப்படியா மன்னா. சரி சொல்கிறேன். சோழ நாட்டு இளவரசராகிய நான் பாண்டிய நாட்டு இளவரசி பொற்கொடியை மணக்க விரும்புகிறேன்.

      அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் இளவரசரே.

      இது தான் பாண்டிய நாட்டு முறையா என்று முஷ்டி முறுக்க இளவரசர் கேட்க.

      இது தான் பெண் கேட்க்கும் முறையா சோழ நாட்டில்??

         பெண் கொடுக்க முடியுமா? முடியாத?

         முடியாது என்றால் என்ன செய்வீர்கள் இளவரசரே

         போர் தொடுப்பேன்!!!

          பெரும் குரல் எடுத்து சிரித்த மன்னர்
போட்டிக்கு தயாரா??

           அப்பா என்ன இது. அவர் தான் போர் தொடுப்பேன் என்கிறார் என்றால் நீங்களும் போட்டிக்கு தயாரா என்று கேட்குறீர்கள்.

       பொற்கோடி அமைதியாக இரு. இது மாமன்னுக்கும், மாப்பிள்ளைக்கும் நடக்கும் யுத்தம் என்று மன்னரின் அரியாசனத்தை நோக்கி வாள் எறித்தான் சோழ நாட்டு இளவேல். அக்கணம் அரசவையே உறைந்து நின்றது.

         யுத்த களத்தில் சந்திப்போம் மாமா என்று புறப்பட்ட இளவரசரை சபாஷ் மாப்பிள்ளை சபாஷ் சஅருமையான வாட் தந்திரம். அருமை. உனக்கு பெண் தர எனக்கு என்னய்யா. என் தங்கை மகனுக்கு என் மகளை தர எனக்கு மனபூர்வ சம்மதம்.
       
        ஏன் மாமா இதை இப்போது சொல்கிறீர்கள். போர் பற்றி பயமா. முன்னே சொல்ல வேண்டியது தானே.

     நீ என்ன செய்கிறாய் என்று பார்த்தேன். நீயோ என் கழுத்தில் வாள் வைக்க துணிந்து விட்டாய். இன்னும் விட்டால் பாண்டிய தேசத்தை அழித்து விட்டு. என் பெண்ணை மணந்து கொள்வாய் போல. அதனால் என் விளையாட்டை நிருத்தி விட்டேன்.

   போங்கள் அப்பா. நான் பயந்தே விட்டேன். இந்த புருஷர்களுக்கு பெண்களை பற்றி கவலையே இல்லை.

   அடுத்த திங்கள் திருமணத்தை வைத்து விடலாம்...

        இளவரசே என்ன திடீர் வருகை.

       ஏன் நான் என் அந்தபுரத்திற்கு வர அனுமதி இல்லையா?

       அதற்கு இல்லை. திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்கள் தான் உள்ளது என்று சேடி பெண் உரைக்க அதை சற்றும் செவிசாய்க்காத இளவரசர்.

       சற்று நேரம் யாரையும் உள்ளே அனுமதிகாதீர்.

       பொற்கோடி, பொற்கோடி எங்கே இருக்கிறாய். அன்ன நடையில் நடை பயின்றவளை பார்த்து பெயருக்கு ஏற்ற கோடி தான் இவள்.

      இளவரசே வருக வருக. என்ன இந்த நேரத்தில் திடீர் விஜயம்.

       ஏன் வந்தேன் என்று கேட்கிறாய்யா அல்ல ஏன் உன்னை காண வர இவ்வளவு தாமதம் என்று கோபமாக கேட்கிறாயா?

         அய்யோ இளவரசே தங்கள் மீது நான் கோபம் கொள்வேன் னா? என்று பதறியவளை இமைக்காது தன் காந்தர்வ கண்களால் கவர முயன்றான்.

              ஏன், என்னை என்று தட்டுதடுமாறி வார்த்தைகளை உதிர்த்தவளை கண்டு நகைத்து ஒன்றுமில்லை சும்மா தான் வந்தேன். சரி வருகிறேன் என்று கூறியவனை என்ன அதற்குள் கிளம்புகிறீர்கள்.

       பின்ன திருமணத்தை இன்னும் இரண்டு நாட்களில் வைத்து கொண்டு என்ன செய்ய சொல்கிராய் . வருகிறேன்

        ஒரு கேள்வி கேட்க வேண்டும்.

       கேள்வியாய். நீ இந்த பாண்டிய நாட்டு இளவரசி, சோழ நாட்டின் பட்டத்துமகரிஷி தயங்காமல் கேள் என்று தோட்டத்து நந்தவனத்தின் மைய பகுதி நின்றனர். முல்லையின் திரவ மணமும், மல்லிகையின் நறுமணமும் அவளை வெட்கி நாணமுற செய்தது.

        பாண்டிய தேசமும், சோழ தேசமும் எதிர் எதிர் போட்டி நாடுகள் அப்படி இருக்க இத்திருமணம் அரசியல் லாபமா? அல்ல இக்காதல் மன்னனின் கள்ள நாடகமா??

         அரசியல் லாபமாய் இருந்தால் என்ன செய்வாய். காதல் மன்னனின் கள்ள நாடகமாய் இருத்தால் என்ன செய்வாய் என்று புருவம் உயர்த்தி கேலிக்கையுடன் உரைத்த மன்னரை கோபமாய் பார்த்த பொற்கோடி
    
       இப்படி என்றால் என் மீது காதல் இல்லையா என்று கோப்பித்து கொண்டவளை

    ஏய் என்ன இது .காதல் இல்லாவிட்டால் மாமாவிடம் இவ்வளவு சண்டை பிடித்து திருமண செய்ய சம்மதம் கேட்டு இருப்பேன் னா??  ஏன் என்னிடம் இக்கேள்வியை கேட்டாய்..

     நீங்கள் என்ன பதில் சொல்கிறிர்கள் என்று பார்த்தேன்.

      அவள் கண்களை பார்த்துக் கொண்டே கையை பிடித்தவனை கண்டு பதறியவள்.. என்ன இது பொதுவெளியில்.

     பொதுவெளி என்பதால் தான் கையை பிடித்தேன்.

      பொதுவெளி இல்லாவிட்டால் என்ன செய்து இருப்பீர்கள்.

      காலை பிடித்து இருப்பேன் அவ்வளவு தான் என்று சிரித்த இளவரசரை பார்த்து வெட்கி தலை குனிந்து கொண்டாள் பொற்கோடி..

     அரசராய் இருந்தாலும், சாதாரண குடிமக்களாய் இருந்தாலும் காதல் என்பது அனைவருக்கும் பொது எம் இளவரசியே. காம்மற்ற காதல், காதல் அற்ற காம்ம என்பதும் அனைவருக்கும் உரித்தான ஒன்று தான். ஒரு பெண்ணை பார்த்து ரசித்து அகமகிழ்ந்து, நாணி, கோணி, ஒரு தலை காதலை ஈர்ருயிர் காதலாய் மாற்றி, இதயத்தை பறி கொடுத்தவளிடமே திருமணத்தை முடித்து பொண்டு, பிள்ளைகளோடு வாழ குடுத்து வைத்திற்க வேண்டும் பொற்கோடி. அந்த ஒரு வாழ்க்கை வாழ தான் எந்த ஒரு ஆண்மகனும் விரும்புவான்.

        மூக்கோடி தேவர்கள் அட்சதை தூவ, காலாட்படை, யானைபடை, குதிரை படை அணிவகுக்க, அக்னி சாட்சியாய், ராஜராஜ குலதேன்றல் பாண்டிய நாட்டு இளவரசியை மீனாட்சி அம்மனின் அருளால் இக்காதல் மன்னனின் திருமணம் இனிய மங்கள நாளில் நடைப்பெற்றது.