...

8 views

மாமியார் -மருமகள்உறவு
இது படித்ததில் பிடித்தது என்று சொல்ல முடியாது...
ஆனால்...
படித்தது...

வார இதழ் ஒன்றில்...
வாசகர் ஒருவர் கேட்ட கேள்வியையும், அதற்கு ஆசிரியர் சொன்ன பதிலையும் தான் இப்போது உங்கள் பார்வைக்குத் தருகிறேன்....

கேள்வி: மாமியார் மருமகள் பிரச்சினை நம்ம ஊர்ல மட்டும் தானா... இல்ல...எல்லா ஊர்லயும் இருக்கா?

பதில்: அமெரிக்காவைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்து இளைஞன் ஒருவன்... தனக்கு மனைவியாக வரப் போகும் பெண்ணைத் தன் தாய்க்கு
திருமணத்திற்கு முன்பே அறிமுகம் செய்து வைக்க ஆசைப்பட்டு....தான் விரும்பும் பெண்ணையும்... அவளது தோழிகள் இருவரையும் முதன்முறையாக தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான்.... தன் தாய்க்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி தர எண்ணி அவன் இதைச் செய்கிறான்...

காரணம்....
அந்தப் பெண் பற்றியோ...
அவளை நேசிப்பது பற்றியோ
தன் தாயிடம் அவன் இது வரை சொல்லவில்லை ...

வீட்டுக்குள் வந்த
அவர்கள் மூவரையும் அமர வைத்து விட்டு...
தன் தாயைத் தனியே சந்தித்து விஷயத்தைச் சொல்கிறான்...

மேலும்...

தன் தாய்க்கு
ஒரு பரிட்சையும் வைக்கிறான்...

அதாவது...

"அந்த மூன்று பெண்களில்
ஒருத்தியைத்தான் நான் மணக்க விரும்புகிறேன்... அவள் யார் என்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்" என்கிறான்..

தாய் வருகிறாள்...
அந்த மூவரையும் பார்க்கிறாள்...
மகனைத் தனியே அழைக்கிறாள்... பதிலையும் சொல்லி விடுகிறாள்...

தாய் மிகச் சரியாக அவன் விரும்பிய பெண்ணைச் சுட்டிக் காட்ட...
தாயின் பதில் கேட்டு இவன் ஆச்சரியம் அடைந்தான்...

"எப்படி... எப்படி.. உங்களால்
அவளைச் சரியாகக் கணிக்க முடிந்தது "?
என்று ஆச்சரியமாக
கேட்டான்...

தாய் சொன்னது இதுதான்...

"அந்த மூணு பேர்ல... அவளை மட்டும் தான்.. பார்த்தவுடனே ஒரு வெறுப்பு வந்தது....அதனால தான் சொன்னேன் "