...

19 views

அவள் எடுத்த முடிவு
அத்தியாயம் -07

இனியெல்லாம் சுகமே

ஆஸ்பத்திரியிலும் வீட்டிலும் ரெண்டு வாரங்களாக தன் கணவனை விழுந்து விழுந்து கவனித்தாள் செல்வி. குமாரும் அவளது கவனிப்பில் வெகு விரைவில் தேறிவிட்டான். வழக்கம் போல் வேலைக்குச் சென்று வரத் தொடங்கினான். இப்போதுதான் நிம்மதியாக இருந்தது செல்விக்கு.
குமார் வேலைக்குக் கிளம்பியதும் வழக்கம் போல வீட்டு வேலைகளில் மும்முரமாகயிருந்த செல்வியைச் செல்போன் மணி அழைத்தது.
செல்போனை எடுத்து காதில் வைத்து,"சொல்லு கலா... என்ன விஷயம்"என்றாள்.
"எப்படி இருக்காரு உன் ஹப்பி... உன் கூட திரும்ப சண்டை போடுற அளவுக்கு நல்லா தேத்தி விட்டுட்ட போல...."என்ற கலாவை இடைமறித்த செல்வி,
"என்னடி... நீ.. நக்கல் பண்ணுரே...இல்லடி... அது... வந்து....இப்போதான் எனக்கு ஒரு விஷயம் புரியுது. என்னால அவரெல்லாம் விட்டுட்டுப் போக முடியாதுன்னு . என்னதான் அடிச்சாலும் பிடிச்சாலும் அவரு தான் எனக்கு எல்லாம். அவரு என்னைய என்ன வேணும்னாலும் சொல்லிக்கட்டும்டி... ஆனா.. நான் இனிமே அவரவிட்டு எங்கயும் போக மாட்டேன். டிவோர்ஸும் பண்ண மாட்டேன். அவர் தான் என் உலகம். அவரில்லாம நானில்லைன்னு அவருக்கு அச்சிடென்ட் நடந்தப்போவே நான் புரிஞ்சிக்கிட்டேன். இத்தனை வருஷம் பொறுத்தது போல இன்னமும் நான் பொறுத்துக்குறேன். அவரு என்னைக்காவது திருந்துவாருங்கற நம்பிக்கைலயே காலத்த ஓட்டிடுவேன்டி"என்று நீளமாக உணர்ச்சி பொங்க பேசினாள். அப்போது.....குமார் செல் போனில் இன்னொரு லைனில் அழைக்கவே "சரிடி கலா... என் வீட்டுக்காரர் கூப்பிடுறாரு. நான் அப்புறமா உனக்கு கால் பண்றேன்" என்று சொல்லிவிட்டு குமாரின் call ஐ அட்டென்ட் பண்ணி
"சொல்லுங்கங்க..."என்றதும்
"I Love You so much Selvi. இப்போதான் உன்னை முழுசா புரிஞ்சிக்கிட்டேன்"என்றான் குமார். தன் காதுகளையே தன்னால் நம்ப முடியாமல்
"என்ன.... என்னங்க சொன்னீங்க... திரும்ப சொல்லுங்களேன் "என்றாள் செல்வி.
அவனும், "செல்வி... ஐ லவ் யூ" என்றான் மறுபடியும் இனிமையான குரலில்.
அது செல்வியின் காதில் தேனையும் பாலையும் ஒரு சேர சேர்த்து ஊற்றியது போல இருந்தது. இத்தனை நாளும் எதுக்காக ஏங்கினாளோ அதை தன் கணவன் வாயிலிருந்து கேட்டதும் அவளுக்கு... சந்தோசத்தில் தலை கால் புரியவில்லை. மெல்லிய குரலில்,"ரொம்ப தேங்க்ஸ்ங்க... நானும்... லவ் யூ...ங்க "என்று குழையத் தொடங்கினாள்.
அவர்கள் வாழ்வில் இனியெல்லாம் சுகமே.

!! சுபம் !!


@tamilthoorika
#tamilththoorikaa
#தமிழ்த்தூரிகா2023
#அவள்எடுத்தமுடிவு
#இனியெல்லாம்சுகமே
#07jan154


© தமிழ்த்தூரிகா