...

9 views

நான் எம தர்மராஜை பார்த்த கதை


இது நான் எம தர்மராஜை பார்த்த கதை

அன்று விடியற்காலை நாங்கு மணி இருக்கும்.  லேசாக நெஞ்சு வலிப்பது போல் இருந்தது. தூக்கம் வராமல் வலியையும் தாங்கிக் கொண்டு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தேன். 

திடீரென்று அம்மா அழைத்தார். வெளியில் யாரோ உன் பெயர்  சொல்லி அழைப்பது போல் தெரிகிறது. சென்று பார் என கூறினார். 

   போய் பார்த்தால் எனது நண்பன் கோபால். இருட்டில் அவன் உருவம் தெரியவில்லை. குரலை வைத்து தான் கண்டுப் பிடித்தேன்.

 "போக வேண்டிய நேரம் வந்தாச்சு இன்னும் நீ கிளம்பலயா"? என கேட்டான்.

             இவன் ஆவியை விட பெரிய பாவியா இருப்பான் போல இருக்கே? இந்த நேரத்துல எங்க டா போணும் என நான் கேட்டேன். 

"எமன் வேற அங்க வெயிட் பண்றான் டா. போற வழியில நாலு பேர கூட்டிட்டு போணும். டைம் ஆச்சு வாடா" என விஷயத்தை சொல்லாமல் அவன் என்னை அவசரப் படுத்தினான்.

              சரி அம்மா கிட்ட சொல்லிட்டு வாரேன் டா என சொன்னேன். அதற்கு அவன் விடவில்லை. என்னை நம்பி வந்த மனைவி கிட்டயாவது சொல்லிட்டு வாரேன் டா என்று சொன்ன போதும் அவன் கேட்கவில்லை. 

டிரஸ் மாத்திட்டு வாரேன் என்று சொன்னேன். புது டிரஸ் போட்டாலும் மண் ஆவ தான் டா போகுது. சீக்கிரம் வாடா என அவசரப் படுத்தி கொண்டே இருந்தான். 

பெத்த அம்மாவும் நம்பி வந்த மனைவியும், சொல்லாமல் போனா தேடுவார்களே, அழுவார்களே என புலம்பிக் கொண்டு அவனோடு சென்றேன். 

                  அடுத்த தெரு தாண்டிய போது "அண்டர் டேக்கர்" மாதிரி பெரிய உருவம் இருட்டில்  வருவது தெரிகிறது.

ஆம் அவனே தான். 

எம தர்மராஜ்.

           என் நண்பன் தர்மராஜின் தந்தை பெயர் மாடசாமி. இனிஷியலோடு எழுதும் போது எம். தர்மராஜ் என எழுதுவான்.  நாங்கள் அவனை எம தர்மராஜ் என்று கிண்டலாக அழைப்போம்.

இப்ப தான் புரியுது இன்று காலையில் கன்னியாகுமரி கடலில் நண்பர்களோடு சென்று குளிக்க, நேற்று முடிவெடுத்தது. நான் தான் மறந்து விட்டேன்.

கடலில் குளிப்பதற்கு புது துணி எதுக்கு? மண் ஆகத் தானே  போகுது.

- அப்துல் ஹலீம் 



© Dr. Abdul Halim