...

11 views

"காதல்" முன்னோக்கி நகர்ந்து செல்லும் -1
காவ்யா சூர்யா வை நெடுகாலமாய் கடலுக்கு சென்று காசிமேடு கடற்கரை யில் மீன்கள் மொத்த சந்தையில் அவ்வப்போது ஒரை கண் பார்வையில் சந்தித்து வண்ணம் இருந்தனர்..
அப்படி சில நாட்கள் கடந்து இருக்க, சூர்யா போலிஸ் எஸ் ஐ வேலை வாய்ப்பு தேர்வு விலும் தேர்வு நேர்முகப் பயிற்சிலும் முதன்மை நிலை பெற்று இருந்தாலும் வேண்டுமென்றே நிகாரித்து வெளியேற்றப் படுகிறார். இந்த சூழலில் ஒரு போலிஸ் அதிகாரி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சூர்யா அணுகி போலிஸ் டிபார்ட்மென்ட் க்கு இன்பார்மாக வேலை செய், கடல் மார்க்கத்தில் கடத்தல்காரர்கள் பற்றி வேவு பார்த்து இன்பார்ம் செய், போலிஸ் ஜாப் தன்னலே உன்னை தேடி வரும், எனவே சரி யென்று சூர்யா கடலுக்கு செல்லும் மீனவர்களுடன் சேர்ந்தது சென்று வருகிறார்..
தற்போதைய சென்னை மாநகரம் தோன்றியதற்கு முன்பு இருந்து எண்ணூர் முதல் பெசண்ட் நகர் வரை அதற்கும் மேலும் கடற்கரை பகுதிகளில் பல்வேறு இடங்களில் பல மீனவ குடும்பங்கள் (கிராமங்கள்) இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர், சென்னைக்கு மிகவும் பழமையானவர்கள்,
அத்தய ஒரு பகுதி வட சென்னை காசிமேடு மார்கெட்டில் ஒரு நாள் சூர்யா வின் படகு லிருந்து தனது சக தொழிலாளர்கள் மீன்களை கொண்டு வந்து எடை போட ஒப்படைத்து, பில்லை (எடை விவரம் சீட்டு) முதலாளி யிடம் சேர்க்க மாறு சூர்யா விட்டு கூறி விட்டு சக தொழிலாளர்கள் புறப்பட்டு செல்ல, மீன்கள் எடை போடும் நேரத்தில் காவ்யா அந்த வழியில் சூர்யா வை ஒரை கண் பார்வை பார்த்து கொண்டு வர, சூர்யா இஇஇ யென்று பார்த்து கொண்டு இருக்க மீன் எடை போடுவோர் 250 கிலோ என்கிறார், உடனே காவ்யா அங்கே பார் யா மறமண்டே 280 கிலோ வை 250 அனு சொல்லறங்கா தலை ஆட்டு கிட்டு இருக்கே,
உடனே சூர்யா அதுனே சரியா எடை போடுயா,
காவ்யா சூர்யா பார்த்து ஏமாந்து போயிருப்பே, அது ஒன்னுமில்லே எட்டு அஞ்சி மாதிரி தெரிந்தது அவ்வளவு தான், சூர்யா காவ்யா பார்த்து டேங்ஸ் சொன்னான், காவ்யா இதே பாரு ஏமாந்து நின்னே யென்னா மெட்ராஸ் காரர் புத்தி யை காட்டுவாங்கா, ஏமாத்தி நெத்தில மொலகாய் அரைப்பாங்க, யென கூறி கொண்டே காவ்யா சூர்யா வை பார்த்து கொண்டே அருகில் இருக்கும் மீன்கள் வாங்க சென்றுவிட்டாள், சூர்யா ஆமாம் கரெக்டா எடை போடுங்க என்கிறான்.
அன்று இரவு முழுவதும் சூர்யா காவ்யா வின் பார்வையில் கருவிழி என்ன மொழி பேசி இருக்கும் எனும் ஆராய்ச்சி யில் நினைத்து கொண்டு இருந்தான்,
இரவு முழுவதும் காவ்யா நினைவில் இருந்த சூர்யா விடிந்ததும் தனது விடிவெள்ளி நட்சத்திரம் காண பைக் யில் வீதி வீதியாக தேடி ரவுண்டுங் தேடி கொண்டு இருந்தான், விடிவெள்ளி காவ்யா தென்பட வில்லை யென மனவருத்தம் ஆனாலும் தேடுதல் தொடர்ந்தான், பல்வேறு வீதிகளில் சூர்யா வின் பைக் சப்தம்.
- தொடரும்
© G.V.KALASRIYANAND