...

15 views

பயிற்சி ஆசிரியை
அன்பு முகநூல் நண்பர்களுக்கு வணக்கம் 🙏🏾☺️

எண்பது நாள் ஆசிரிய மாணவியாக பயணித்ததில்
ஏராளம் அனுபவம் பெற்றறிந்தேன்....😍

அதில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்கிறேன்.....

முதல் பதிவு..... முதல் நாள் அனுபவம்.....😍🤩🥰

ஒரு 18,19 வருடம் மாணவியாகவே பயணித்த
மனம் திடீரென ஆசிரியராய்
பரிணமிக்க வேண்டியதாக இருந்தது..... சொல்லிக் கொடுப்பது நன்கு தெரிந்திருந்தாலும் பாடத்தை படித்து பயிற்சி பெற்றிருந்தாலும் அதை மாணவர்களுக்கு முழு வகுப்பறைக்கும் ஒரு 35 மாணவர்களுக்கும் எப்படி உரைப்பதென தடுமாற்றமும் பயமும் இருக்கவே செய்தது .....

முதல் நாள் வகுப்பறைக்குச் சென்றதும் ஒன்பதாம் வகுப்பு (அ,ஆ பிரிவு ) ஓ ! என் சமகாலத் தோழர்களே! வைரமுத்துவின் செய்யுள் புதுக்கவிதை எளிமையாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்பதால் என்னை எடுக்கச் சொன்னார்கள் ...... ஆசிரியர் சொன்னாலும் கூட எளிமையாக இருக்கும் என்றாலும் ஒரு தயக்கம் எனக்குள் எனவே நான் நீங்க எடுங்க நான் கவனிக்கிறேன் என்று சொல்லி விட்டேன்..... முதல் வகுப்பு செய்யுள் ..... 😍 ஆசிரியர் எடுக்க நான் கவனித்தேன்......

செய்யுள் அறிமுகம் தொடக்கம்.....சொற்களின் உச்சரிப்பு.....
புதிய புதிய கருத்துகள்,இடையிடையே மாணவர் கவனத்தைக் குவிக்க நகைச்சுவை,சிந்தனைத் துணுக்குகள்,எளிமையான கேள்விகள், பாராட்டுகள்
என ஒவ்வொன்றையும் கவனிக்க கவனிக்க
ஆம் பாடம் என்றால் இப்படி இப்படி இருக்க வேண்டும் என மனம் ஆச்சர்யமும் பரவசமும் அடைந்தது!

பள்ளிக் காலத்திலும் இவர்களிடமே கற்றேன் தமிழ் என்றாலும் அன்று கவனிக்கத் தவறியவை எல்லாம் பயிற்சி ஆசிரியராகி ஒரு வகுப்பின் முன் நிற்கும் போது தான் கவனம் பெறுகிறது!!!!

ஆனால் நான் பாடம் எடுக்கும் போது எப்படித் தயாராகிப் போனாலும் கடைசி வரை ஆசிரியர் போல எடுக்க வரவே இல்லை ஏதோ ஒன்று குறைவு பட்டுக் கொண்டே இருந்தது....😕

அதாவது எவ்வளவு தெளிவாகப் பயின்றிருந்தாலும் அதை வகுப்பறையில் முறையாக எடுத்தாளத் தெரிய வேண்டும்
முறையாக எடுத்தாளத் தெரிந்தால் தான் அது மாணவர்களுக்கு சரியாக சென்று சேரும் அந்த எடுத்தாளும் முறையில் உள்ள நுட்பங்கள் மிக முக்கிய சொற்களை,கடினச் சொற்களை அவ்வப்போது அடிக்கோடிடச் சொல்லுதல்....
மனப்பாடச் செய்யுள் என்றால் அதை பாடலாகப் பாடி மனதில் பதிய வைத்தல் இப்படி ஒரு வகுப்பறையில் அப்பாடத்திற்குத் தேவையான அத்தனை திறன்களையும் கையாள வேண்டும் ஒரு 45 நிமிடத்தில்...... என்று அறிந்தேன் அது எனக்கு ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாகவே இருந்தது !

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிறுத்தி நிதானமாக அழுத்தம் திருத்தமாக
திரும்பத் திரும்ப பொறுமையாக
மாணவர் உளம்கொள்ளும் வகையில் எடுத்துரைக்க வேண்டும்
இதுவே ஓர் ஒப்பற்ற ஆசிரியரின் பணி!

என உணர்ந்திருந்தாலும்

அதை எப்படிச் செயல்படுத்த வேண்டும் அதற்கான நுட்பங்கள் என்ன என்பதை எனது ஆசிரியர் வழியாக....😍 ஆசிரியராகவே பார்த்து உணர்ந்து அறிந்து கொண்டேன் .....

கற்றல் என்பது புத்தகத்தோடு நின்று போகாமல்
செய்து பார்த்து உணரும் போதுதான்
அதன் பயன் முழுமையாகக் கிடைக்கிறது....

மீண்டும் நாளை தொடர்வோம்......

நன்றி 🙏🏾

#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை #தமிழ்க்கவிதைகள் #தமிழ்நிழல் #mythoughts #tamil