...

8 views

விரட்டி வேட்டையாடாத புலிகள்
அவர்கள் மூன்றுபேரும் ஜகஜால கில்லாடிகள்..

முடிக்க நினைத்ததை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள்..

அந்த காரியம் அடுத்தவருக்கு சுமக்க முடியாததாய் இருந்தாலும் ,,
அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள்,
இயன்றவரை முயன்று,
முடித்துக்காட்டும் குணமுள்ளோரை உங்களுக்கும் பிடிக்கும் ..
இவர்களுக்கும்
பிடிக்கும்...

காபி ஷாப், தியேட்டர் ,,என்று எங்கு கூடினாலும், உலகத்தையே மறந்து
விடுவார்கள்...

அது ஒருபக்கம் இருந்தாலும் அதை விற்றே விடுவார்கள்...

அவர்களுள் ஒருவர், காசுக்கு நல்ல விசுவாசி,


ஏமாறுபவர்களை ,, ஏமாற்றவும் தயங்க மாட்டார்...


... அலட்டாமல் ஓடியோடி வேலை பார்க்கும் இந்த அலுவலகபுலிகள்...முழு பூசணிக்காயை பிடி சோற்றில் மறைக்க கூடியவர்கள்...

இன்று இவர்களை நம்பி ஒருவன் போன் செய்தான்...

அவர்கள் மூன்றுபேரும் ஒன்றாக இருக்கும் நேரத்தில் நேரிலும் , வந்து வசமாக மாட்டிக்கொண்டான்...
அவன் மனைவி, அவன் கூடவே வந்து ஏதும் பேசாமல் வெறுமனே அமர்ந்திருந்தாள்...

வழக்கம்போல்
மூன்றுபேரில் ஒருத்தி பேச்சை ஆரம்பித்து வைத்தாள்...

அவளின் நண்பன் ஓடும் பேருந்து படியில் ஏறுபவன் போல பேச்சின் இடையில் சேர்ந்து கொண்டான்....

மூன்றாமவள், மூன்று மணிநேரம் கூட பேசுவாள்..
பேசிவிட்டுப் போகட்டும்....

ஆனால்,
ஓரே விஷயத்தைப் பற்றியே பேசினாள்...

அது அல்ப விஷயம்..அதைப்போய் கதை கதையாய்
இஷ்டத்துக்கு அளந்து கொண்டிருந்தார்கள்...

ஏதேதோ சொல்லி அவன் மூளையை அப்போதைக்கு மழுங்கடித்து...

பற்பல உதாரணங்களால் , சில நன்மைகளை எடுத்துக் கூறியது எனக்கு தெளிவாக , தெரிந்தது...

அவன் வாயடைத்து நின்றான், அப்போது,
மொத்தமாக, அவனை
காலிபண்ணி , அவர்கள் திட்டத்தை இவன் மண்டையில் பத்திரமாக இறக்கி வைத்து விட்டார்கள்...

அவன் மனைவி,
நான் நன்கு புரிந்துகொண்டேனென்று சொன்னாள்...
உனக்கு புரிந்தால் எனக்குப் போதும் என்றான்,
அவள் கணவன்..

ஏதோ ஒரு கோப்பில் கையெழுத்திட்டு விட்டு,
காபி குடிக்கலாமென்று கணவன் மனைவி இருவரும் சந்தோஷமாக எழுந்து போனார்கள்...

அந்த மூன்று பேரும், தம்பதியரிடம் வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு, அவர்களுக்குத் தாங்கள் கொடுக்க வேண்டியதைக் கொடுத்தும் அனுப்பினார்கள்...


நம் கதையின் நாயகன்,
"கடனாளி "ஆன கதைதான் மிச்சக்கதையே...!!

முடிவில்,,
நம் நாயகி, தனக்குப் புரிந்ததை தன் நாயகனுக்குப் புரிய வைத்திருப்பாள் என்று நம்புவோம்.

செல்லும் முன் Likes Uம்" Comment Uம் செய்துவிடுங்கள்...











© s lucas