...

8 views

இது ஒரு திகில் கதை
இது ஒரு திகில் கதை




அமேசான் நதிக் கரையில் பழங்குடி மக்கள் வாழும் இடத்தில் ஒரு சுடுகாடு.  அந்த சுடுகாட்டின் மிக அருகில் ஒரு குடிசையில் உமொஜோ மற்றும் உளிஸஸ் என பெயர் கொண்ட  இரு பழங்குடியினர் வாழ்ந்து வந்தனர்.
அங்கு ஓடும் அந்த அமேசான் நதியை சுற்றிலும் மிகப்பெரிய அனகோண்டா பாம்புகள் வாழும் அடர்ந்த இருண்ட அமேசான் காடு.

             அன்று அமாவாசை தினம். பகலில் கூட இருண்டு கிடக்கும் அந்த காட்டில் அமாவாசை இரவு எப்படி இருக்கும்? அதுவும் அந்த சுடுகாட்டின் அருகில்.  ஆம். மிக திகில் நிறைந்த இரவாகவே இருக்கும்.

               ஆனால் நான் சொல்லப் போவது அதை விட திகில் நிறைந்த கதை.

குமரி மாவட்டத்தின் பசுமை  சூழ்ந்த ஒரு கிராமத்தில்  நாங்கள் ஒரு வீட்டை விலைக்கு வாங்கினோம்.

      அன்று கிரகபிரவேசம்.  முதன்முறையாக நான் அன்று தான்  அந்த வீட்டை பார்க்கிறேன். மிகப் பெரிய வீடு. வீட்டை சுற்றி அழகிய பூந்தோட்டம். வீட்டு வாசலில் மூன்று பேர் உட்காரும் அளவுக்கு ஒரு சிமென்டால் செய்யப்பட்ட ஒரு இருக்கை. அதில் ஒரு ஆள் படுக்கவும் செய்யலாம். அவ்வளவு வசதியான வீடு.

         வீட்டினுள் சென்று பார்த்தேன். சகல வசதிகளையும் கொண்ட அரண்மனை போலவே இருந்தது. அருமையான ராஜ வாழ்க்கை ஆரம்பித்தது.

       தற்செயலாக வெளியில் பார்த்த போது அந்த சிமென்டால் செய்யப்பட்ட அந்த இருக்கையில் ஒரு மரணமடைந்த முதியவரை இறுதி மரியாதை செய்து பிணத்தை எரிக்க தயாரானார்கள். நான் சென்று கேட்ட போது, இந்த இருக்கை மட்டும் அரசாங்கத்திற்கு சொந்தமானது. இங்கு தான் அடக்கம் செய்வோம் என அவர்கள் கோபத்துடன் கூறினர்.

        என்ன செய்வது என கோபம் தலைக்கு ஏறி நின்ற நேரத்தில்  "ஏங்க டீ குடிங்க"  என என் மனைவி அழைத்தபோது தான் புரிந்தது இது கனவு என்று. எப்படியெல்லாம் திகில் கனவு வருது பாத்தீங்களா?

- அப்துல் ஹலீம்
© Dr. Abdul Halim