...

6 views

வள்ளலார்
வள்ளலார் பற்றி அறிந்த நாள் முதல் அவர் ஏற்றி வைத்த அந்த அணையா அடுப்பை
பார்த்து விட வேண்டும் என்று ஆவல் கொண்டேன்...

ஓவியப் பணிக்காக
கடலூர் மாவட்டம் சென்ற போது அந்த ஆசை நிறைவேறியது

காலை வேளை

அந்த திருவிடத்தில்
காலடி எடுத்து வைத்த கணம் முதல் ஓர் இனம் புரியா உணர்வு

அது நிச்சயம் கவலை தான்

எவ்வளவு பெரிய மகான் அவர்

அவருக்கான முழு மரியாதை இந்த மண்ணில் வழங்கப்படவில்லை என்பதே என் பெருங்கவலை

வள்ளலார் நிறுவிய அவ்விடத்தை வணங்கி கல்கண்டு பிரசாதம் பெற்று
அந்த அடுப்பைக்காண விழைந்தேன்

கோலமிட்டு ஓர் சிறு கோயில் போல வைக்கப்பட்டிருந்த அடுப்பை பக்தியோடு பார்த்துக் கொண்டு இருக்கும் போதே ஓர் கனிவான குரல் கவனத்தை ஈர்த்தது

"முதல்ல கஞ்சி குடிங்க"

சட்டென திரும்பிப் பார்க்க அங்கே மதிய உணவு தயாரிப்புப் பணியில் ஈடுபட்டு வரும் ஒருவர்.... மீண்டும் அன்போடு சொன்னார்...

"கஞ்சி குடிங்க"
கையை நீட்டி அந்த கஞ்சி அண்டாவைக் காட்டினார்

இரண்டு டம்ளர் சுடுகஞ்சி குடிக்க முடிந்தது...

"மதியம் இருந்து சாப்பிட்டுப் போங்க"
என்று கனிவோடு வேண்டினார்...

கிளம்ப வேண்டும் என்று சொன்னதும்
பிரியமே இல்லாமல் விடை கொடுத்து அனுப்பினார்

வெளியே வந்து
வள்ளலார் தொடர்பான புத்தகங்கள் வாங்கி விட்டு
ஊருக்குத் திரும்பினேன்

பசிப்பிணி போக்கும் ஞானத்திருவிடம்...

முடிந்தால் சென்று வாருங்கள்

ஞான அனுபவம் பெற்றிடுங்கள்
© வேல்முருகன் கவிதைகள்