...

0 views

மூட்டுக்காலிகள் ( விஞ்ஞானக் குட்டிக் கதை)
"மாலினி! இந்த இலைகளில் உள்ள பூச்சியைப் பாரேன்." வீட்டுத் தோட்டத்தில் உலாவச் சென்ற வதனா குழப்பத்துடன் அழைத்தாள்.

"எங்கே காட்டு." ஓடி வந்தாள் ராதை.

"இதோ! இதற்கு எட்டு கால்கள் உள்ளன." 

"ஐயோ! இது பூச்சியே அல்ல. இது மரச்சிலந்தி. "
விபரித்தாள் ராதை.

"ஆமாம். இது பூச்சி இனமல்ல. ஆனால் மூட்டுக்காலிகள் தான்." என்று ஆமோதித்தாள் மாலினி .

"பூச்சிகளுக்கு ஆறு மூட்டுக்களைக் கொண்ட தூக்கங்கள் இருக்கும். " என்றாள் ராதை.

" பூச்சிகளும் மூட்டுக்காலிகள் தான் " என்றாள் மாலினி.

" மூட்டுக்காலிகள் எல்லாம் பூச்சிகள் என்று இது நாள் வரை நான் பிழையாக எண்ணிக் கொண்டிருந்தேன்"
வருத்தப்பட்டாள் வதனா.

"ஐயோ! அன்று டீச்சர் விலங்குகளின் பல்வகைமைப் பாடம் சொல்லித் தரும் போது மூட்டுக்காலிகள் பற்றி விபரமாகச் சொன்னார். நீ எங்கே பார்த்துக் கொண்டிருந்தாய்? "  அதட்டினாள் ராதை.

"மூட்டுக்காலிகள் என்பது முள்ளந்தண்டற்ற விலங்குகளில் உள்ள கணங்களில் ( phyllum) ஒன்றாகும்."  மாலினி விளக்கினாள்.

" ஆம். அந்தக் கணத்தில் உள்ள வகுப்புகள் (class) பல உள்ளன. அதில் அரக்னிடா ஒரு வகுப்பு.  இன்செக்டா (பூச்சிகள்) என்பது இன்னும் ஒரு வகுப்பு " ராதை இன்னும் தெளிவுபடுத்த ஆரம்பித்தாள்.

" எறும்புகள், வண்டுகள், வண்ணத்திப் பூச்சிகள், தேனீ, குளவி, தும்பி, ஈ, மற்றும் நுளம்புகள் என்பன இன்செக்டா என்ற வகுப்பைச் சேர்ந்தவை." மாலினி உதாரணம் கூறினாள்.

" பூச்சிகள் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கை நடைபெற பெரிதும் உதவுகின்றன." வதனா தனக்குத் தெரிந்ததை கூறினாள்.

"மருத்துவ குணமுள்ள தேன் கூட 'இன்செக்டா' வகுப்பைச் சேர்ந்த தேனீக்களின் உற்பத்தி தான் "
மாலினி பூச்சிகளின் பயன்பாடு பற்றி விபரித்தாள்.

" ஆனால் சிலந்தி அரக்னிடா என்ற வகுப்பைச் சேர்ந்தவை. அவற்றிற்கு எட்டுக் கால்கள் (தூக்கங்கள்) உள்ளன." ராதையும் தனக்கு தெரிந்ததை எடுத்துரைத்தாள்.

" அப்படியானால் இது காட்டுச் சிலந்தியா? நான் வீட்டில் தான் சிலந்தியைப் பார்த்திருக்கிறேன் " வதனா அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்டு வினவினாள்.

"ஆமாம். இது மரங்களில் வாழும் சிலந்தி வகை. இவற்றில் சில கொடிய விஷமுடையவை. கொஞ்சம் தள்ளி நில்! என்று எச்சரித்தாள் ராதை.

"சிலந்தி கடித்தால் என்ன மருந்து செய்வார்கள்?" பயத்துடன் வினவினாள் வதனா.

"ஓரளவு விஷமுள்ள சிலந்திகள் கடித்தால் கைவைத்தியம் செய்வார்கள். பாட்டியிடம் தான் கேட்க வேண்டும் "  மாலினி.

"கொடிய மரச்சிலந்திகள் தீண்டினால் மரணம் சம்பவிக்கும் என ' அனாக்கொண்டா' ஆங்கில திரைப்படம் பார்த்த போது தெரிந்து கொண்டேன்.
ராதை திகிலுடன் குறிப்பிட்டாள்.

" அப்போ இந்த மரச்சிலந்தி கொடிய விஷமுள்ளதா?
வாங்கடி இங்கிருந்து போய் விடலாம்." வதனா பயத்தில் அவசரப்படுத்தினாள்.

" ஆம். எனக்கும் தாகமாக இருக்கிறது." மாலினி

" இன்று எமது வீட்டுத்தோட்டத்தில்  களப்பயணம் 
பிரயோசனமாக இருந்தது." வதனா மகிழ்ச்சியுடன் கூறினாள்.

" ஆனாலும் இன்றே போய் சிலந்திக் கடிக்கான கைவைத்தியம் என்ன என்று பாட்டியிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் " ராதை ஒரு முடிவுடன் புறப்பட்டாள்.

குறிப்பு : சிலந்திக் கடிக்கு கடித்த இடத்தை,
* சவர்க்காரம் இட்டு நன்கு கழுவித் துடைத்த பின் *கரித்தூள் தடவலாம். அல்லது *கற்றாழைச் சாறு தடவ வேண்டும். *தும்பை இலைச்சாறு சிறிதளவு பருக வேண்டும்.

தும்பை இலைச்சாறு விஷத்தை முறிக்கும்.
கரித்தூளும் விஷத்தை குறைக்கும்.
கற்றாழை அவ்விடத்தில் தோன்றும் அரிப்பை குறைக்கும்.

Husniya Farook .
Sri Lanka.
© siriuspoetry