...

16 views

ஆசைக் கனவுக்குள் ஒரு காதல் கதை
இதுவரை நான்
அவனுக்கு அழைப்பு கொடுத்தது
இல்லை....


ஆனால் அவனின் அழைப்புக்காக
மட்டுமே காத்துக் கிடக்கும்
என் தொலைப் பேசியும்
அவனைத் தொல்லை செய்திடும்
என் விழிப் பேச்சும்....

பல முறை யோசித்துப் பார்த்தால்
அட இது என்னப் பைத்தியக்காரத்தனம்
என்று நினைத்து சிரிப்பேன்...
காரணம் அவன் என்னை
நீ எப்போது வேண்டும் என்றாலும்
அழைத்துப் பேசலாம்
குறுஞ்செய்தி அனுப்பலாம் என்று
அனுமதி கொடுத்து இருந்தும்
அதை நான் பயன் படுத்தியதில்லை...

காரணம் என்னிடம் அதிகமுண்டு
ஆனால் அதை அவனிடம் நான்
சொல்லிக் கொண்டதில்லை....

தனித்து என் நினைவுகளைத் தந்து
ச்சீ ஃபோன வை என்று சொல்லும்
அளவுக்கு இம்சை செய்து
கொன்றதுமில்லை.....

ஆனால் அதிகம் ஆசப்
பட்டுருக்கேன்...😂😂


காத்திருந்து வாங்கிக் கொள்ளும்
அணைத்தும் கொஞ்சம் வலிக்கச்
செய்தாலும் கூட கசந்து போகாது
என்பது எனது புரிதல்...

ஒரு நாள் திடீர் என்று அழைப்பு
சினேகிதனே சினேகிதனே
ரகசிய சினேகிதனே
சின்னச் சின்னதாய் கோரிக்கைகள்
செவி கொடு சினேகிதனே
இதே அழுத்தம் அழுத்தம்
இதே அணைப்பு அணைப்பு
வாழ்வின் எல்லை வரை
வேண்டும் வேண்டும் என்று

எடுத்துப் பார்த்த போது அவனின்
செல்லப் பெயர் என் கண்களின்
முன்னே.....
அவனின் அழைப்பு வரும் போதெல்லாம்
பதில் கொடுக்கும் ஆன்ஸ்வரிங் பொத்தானை
தள்ளி விடும் முன்னமே இதழ்கள்
பதில் சொல்லத் தொடங்கிவிடும்
ஹலோ என்று சொல்லாமல்
சொல்லுங்க இப்போ தான் என் நினைப்பு
வந்ததோ என்று.....

கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கும் போதே மிகவும்
அமைதியாகி விடுவேன்...எப்போதும்
இப்படித்தான் நான்....காரணம் தெரியவில்லை
ஒருவேளை அவனின் பேச்சுகள் எனதாக
இல்லாது போன கோபமாகக் கூட இருக்கலாம்
இருந்திருக்கலாம்...
இப்போதும் அதே மௌனம் என் இருப்பில்
அவன் ஹலோ ஹலோ இருக்கியா
லைன் ல... ஹலோ என்று சொல்ல
ம் ம் கேட்குது சொல்லுங்க என்றேன்...
உன்கிட்ட ஒன்னு சொல்லணும் நான் சொல்ல
மறந்துட்டேன் என்றான்.....
ஆஹா அப்டியா சொல்லும் என்றேன்...
நான் எங்க இப்போ இருக்கேன்னு தெரியுமா
என்றான்!?;
ஹ ஹ எனக்கு எப்படித் தெரியும்
இது வீடியோ கால் இல்லையே... பிறகு எப்படி
என்றேன்...
அப்பா சாமி முடியல நீ இருக்கியே என்று
சொல்லிக் கொண்டே இருக்கும் போது
சட்டென்று நான் சொன்னேன்
ஆமா நான் இங்க தான் இருக்கேன்
நீர் எங்கு இருக்கிறீர் என்று சொல்லும்
என்றேன்....
நான் ஒரு வேலை விசயமாக இங்கு
வந்துருக்கேன் என்றான் ...அட
எங்கு என்று சொல்லுங்க என்றேன்...
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆசையும் கூட...
அய்யோ போதும்
சஸ்பென்ஸ் முதல்ல சொல்லுங்க என்றேன்...
எனது இருப்பிடத்தில் இருந்து கொஞ்சத்
தொலைவில் இருந்த ஓர் ஊரில் தான்
அவனின் வருகை....
இதைக் கேட்ட நொடியில் அப்படி ஒரு
சந்தோசம்... சொல்ல முடியா இன்ப வலியும்
கூட... அது என்னவென்று
எனக்கும் என் குறும்பு இதய ஓசைக்கும்
மட்டுமே தெரியும்....
ஒன்றும் பதில் கொடுக்காது சரிந்து
நின்றது என் உயிர்.....
சரி சரி நீ என்ன செய்றன்னா உன் டூ வீலர்
எடுத்துட்டு வா!! உன்ன பார்துட்டு நான்
கிளம்புறேன் என்று சொல்லி விட்டு
தொலை பேசியை கட் பண்ணிட்டான்...
அவன் கட் பண்ணிய பிறகு திருப்பி அழைக்கும்
பழக்கமும் இல்லை என்னிடம்
எனவே நானும் ஒன்றும் சொல்லாமல்
அமைதியாகவே இருந்து விட்டேன்.....

நேரம் போதவில்லை என்று தான் சொல்லிக்
கொண்டிருந்தேன்....
என்னை அவனின் நினைவோடு
சேர்த்து ஊடல் செய்து கொண்டிருக்கும்
போதே மாலைக் கதிரவனின் வெயில்
வந்து விட்டதாக எனது தொலை ப் பேசியில்
சுட்டிக் காட்டும் பாடல் வந்து விட்டது....
ஆமாம் மாலை நான்கு மணி வந்தால்
நடைப் பயணம் செய்யும் வேளை அது...
ஆனால் அன்று மட்டும் அது நடைப்பயிற்சி
நாள் அல்ல...
அவனைக் காணும் போது நான் செய்திடப்
போகும் "மூச்சுப் பயிற்சி"
நேரம் கூடக் கூட கதிரவன் கழகம் செய்து
ஒளிந்து கொண்டு ஓடும் முன்
நான் தயாராக வேண்டும்...எப்போதும்
குளித்து முடித்து வர அரை மணி நேரம்
எடுத்துக் கொள்ளும் நான் அன்று
காக்கா குளியல் குளித்து விட்டு
எனக்குப் பிடித்த வெள்ளை நிற சல்வார்
கமீசை அணிந்து கொண்டு மிக
வேகமாகவே கிளம்பிக் கொண்டிருந்தேன்..
இம் ஓகே வா இம்ம் ஓகே ஃபைன் என்று
சொல்லி விட்டு ஃப்ரீ ஹேர் மற்றும்
நெற்றியில் சிறு பொட்டு கையில் வெள்ளி
பிரேஸ்லெட் மட்டும் அணிந்து
விட்டு சாமிக்கு ஒரு கும்பிடு நெற்றியில்
சிறு வெள்ளைக் கோடு ஒன்றையும்
பூசி விட்டு டூ வீலர் எடுக்க சாவியை
தேடுகின்றேன்...ஆனால் சாவியைக் காணவில்லை.... அய்யோ இது என்ன
என்று பட படப்பு என்னில் கூட
சட்டென்று தெரிந்தது சாவியில் மாட்டி வைத்த
பொம்மையின் முகம்...
அங்கே தான் இருந்தது சாவி ஆனால் எனக்குள் ஏற்பட்ட பதட்ட நிலையில்
கண்ணை மறைத்து விட்டது..
வீட்டின் கதவை அடைத்து சாவியை
ஹான் பேக்கில் போட்டு
செப்பலை விரல்களுக்கு கொடுத்து விட்டு
டூ வீலர் ஐ ஓன் செய்து விட்டு
கிளம்பி விட்டேன்... ஈரக் கூந்தல் அதில்
என்னை மோதிச் செல்லும் காற்று தரும்
சில்லென்ற சிலிர்ப்பு வியர்த்துக் கொட்டும்
என் முகம் இவை அனைத்தும் கொஞ்ச
நேரம் கடந்து செல்ல செல்ல இனிமை
தந்தது....பக்கம் வரப் போகின்றது அவன்
எனக்காக காத்திருந்த இடம் என்பதால்...
தொலைபேசி அழைப்பு மணி
சினேகிதனே என்று...அவன் பெயர்
வர வண்டியை நிறுத்தி விட்டு ஓன் செய்து
சொல்லுங்க என்றேன்...
எங்கு இருக்கின்றாய் !!!நீ வர வேண்டாம்
இன்னொரு முறை நான் வருவேன் அப்போது
பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லி
கட் செய்து விட்டான்...என்ன ஆச்சு உங்களுக்கு
என்று கேட்கத் துடித்த என் இதயம் கண்ணீர் சிந்த ஆரம்பித்து விட்டது....
மீண்டும் ஓர் அழைப்பு சினேகிதனே
என்று ஹ ஹ அழுது கொண்டே
நிற்காமல் சீக்கிரம் வா என்று சொல்லி
சிரித்து விட்டு கால் ஐ கட் பண்ணிவிட்டான்.
ஐயோ டேய் இரு டா உன்ன நேர்ல வந்து
பாத்துக்கிறேன் என்று சொல்லி
ஒரு வழியாக வந்து விட்டேன் அவன் சொன்ன
இடத்திற்கு... 10 நிமிடம் வரை காத்திருந்தேன்
நுனிப் பல்லால் சிரித்துக் கொண்டு
மதியினை நான் தொலைத்து நின்றிருந்தேன்..
சிறு சிறு விழியை கண்ணாடியில்
பார்த்து கண்ணடித்துக் கொண்டே.....
சட்டென்று காதோரத்தில் ஹலோ என்ற சத்தம் !!! ஐயோ அம்மா என்றுத் துள்ளிக்
கொண்டு பார்க்க உறைந்து போனது என்
மொத்தமும்...காரணம்
அவன் என் உயிர் தேடிய முதல் அன்புச்
சினேகிதான்....
இச் சீப் போடா !!! நீ எப்போதும் இப்படித்
தானா!! என்றேன்... அவன்
எப்போதும் என் விழிகளை பார்த்து
பேசிடத் துடிப்பான்....
அவனுக்கு என் விழிகளின் முறைப்புப் பேச்சு
மிகவும் பிடிக்கும்
அவனிடம் எனக்குப் பிடித்தது குறும்பு
செய்து பேசும் பேச்சும், என்னை
சட்டென்று மறக்கச் செய்யும் ஊடலும்
தான்...
வழக்கம் போல பேசினான் என்னை
இம்சை செய்யும் அதே அழகில்....
சிறிதும் முகப் பாவனையை மாற்றி விடக்
கூடாது என்று இம் கொட்டி கேட்டுக் கொண்டே
சாய்ந்து நின்றேன்...எனது வண்டியின் மீது...
எப்போதும் இருவருக்குள்ளும் காதல்
உண்டு ஆனால் அதை அவனிடம் நானும்
என்னிடம் அவனும்
சொல்லிக் கொண்டதில்லை
சுகமான இந்த வலியை சிறு நொடியும் கூட
ரசிக்காமல் ருசிக்காமல் கடந்ததுமில்லை...

சட்டென்று ஓகே டைம் ஆக்கிட்டு நீ கெளம்பி
வீட்டுக்குப் போ வென்று சொல்லிவிட்டு
சிரித்தான்... முழித்த என் முட்டைக் கண்ணுக்குள் அவனைக் கண்ட சந்தோசம்
மட்டுமே நிறைந்து உறைந்து கிடந்தது...
அவனின் குறும்பு தான் என்று தெரிந்தும்
என் விழிகளில் நீர் பெருக்கெடுத்து
வந்தது....ஹே என்ன ஆயிற்று என்று
கேட்டான் .... இச்ச ஒன்றும் இல்லை
வண்டியில் வந்ததால் எரிச்சல் ஆகி நீர்
வருது என்றேன்.....அட லூசு என்று
அவன் கை
குட்டை கொண்டு கண் துடைத்து விட்டான்..
எனக்கு சட்டென்று அவன் கை
குட்டையை வாங்கிக் கொள்ளத் துடித்தது
ஒன்றும் பேசாது நான் துடைத்துக்
கொள்வதைப் போன்று கைக்குள் அணைத்து
வைத்துக் கொண்டேன் அக் கைக்
குட்டையை.....சரி வா கொஞ்ச தூரம்
போயிட்டு வரலாம் என்று சொன்னான்...இந்தாங்க கீ என்று கொடுத்தேன்....எனக்கு கீ வேண்டாம் நீ ஓட்டு
வண்டிய என்றான்.... ஏன் என்று கேட்டு
நைமிடத்தை வீண் செய்திடப் பிடிக்கவில்லை...
ஆகையால் நானே வண்டியை ஓன் செய்தேன்..
லக்ஷ்மி இப்போ கூட நீ உன் வாயத் திறந்து
ஆசையைச் சொல்ல மாட்டாயா என்றான்...
என்ன ஆசை அதெல்லாம் ஒன்றுமே இல்லை
என்றேன்....
பொய் சொல்லாதே எனக்குத் தெரியும்
என்று சொல்லி நீ பின்னாடி அமர்ந்து கொள்
நான் வண்டியை ஓட்டுகின்றேன் என்றான்...
அப்போதும் ஏதும் பேசாமல் அமைதியாக
அவன் சொல்லுக்கு மட்டும் இம் கொட்டிக்
கொண்டே வந்தேன்....
இது சரிப் பட்டு வராது என்ன ஆயிற்று உனக்கு
என்று அவன் கேட்க ஆரம்பித்தான்
அட ஒன்னும் இல்லை என்று நான் சொல்லும்
முன்னே இதழ்கள் உதிர்தது!!!
எனைப் பார்க்க எப்போது வருவீங்க என்று...


கனவு காணும் விழிகள் நிஜத்தில் விழிக்கும்
போது கேள்விகள் மட்டும் தானே கேட்டுத்
தவிக்கும்////// தொலையும்//////


ஆசைக் கனவுக்குள் ஒரு காதல் கதை....


❤️

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 ❤️

#ச_லக்ஷ்மி
#எப்போ_வருவீங்க
#yqslaks



© All Rights Reserved