விடியல் சற்று தாமதம் (முடிவின் தொடக்கப்புள்ளி)
காலை விடியல் பொழுது, என்னடா இது விடிய காலையில அஞ்சரை மணிக்கு வெச்சிட்டுப்போன பால் பாத்திரம் நம்ம திரும்பி வரும்போது ஏழு மணி ஆகியும் எடுக்காம இருக்காங்களே? எப்பவும் இப்படி பண்ண மாட்டாங்களே... அப்படி என்று பால்காரன் யோசித்துக்கொண்டே அந்த வீட்டின் கதவை தட்டுகிறான்!! லட்சுமி அம்மா லட்சுமி அம்மா என்று கூப்பிட்டும் ஒரு சத்தமும் அசைவும் அங்கே இல்லை, சந்தேகமடைந்த பால்காரன் அக்கம்பக்கத்தினரை அழைத்து சொல்ல அவர்களும் அழைத்துப்பார்த்தனர், பின்பு காவல் நிலையத்துக்கு தகவல் சொல்ல அவர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது? ஒரு சிறுமி ரத்த வெள்ளத்தில் கீழே கிடக்க உள்ளே சென்று பார்த்தால் அந்த சிறுமியின் அப்பா, அம்மா, தாத்தா மற்றும் டியூஷன் டீச்சர் அமுதா அனைவரும் இறந்து கிடப்பதை பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்க!! சட்டென்று உடம்புக்குள் அந்த பயம் பரவி உடல் வியர்க்க சட்டென்று உறக்கம் கலைந்து கண் விழிக்கையிலே???...
விடியல் சற்று தாமதம்
இன்று :
தூரத்துல ஒரு மஞ்சள் சுடிதார் லிப்ட் கேக்கறது தெரியுது, பக்கத்துல போய் நின்னு எங்க போகணும்னு கேட்கும்போது? அவ அவளோட அந்த க்யூட் வாய்ஸ்ல எக்மோர்னு சொல்லும்போதே பிளாட் ஆகிட்டேன்... ஐயோ கொல்றாளே இவ்ளோ அழகா ஏன் பொறந்தனே தெரியலையே அப்படியே நினைச்சுட்டு வாங்கன்னு சொல்லி கூட்டிட்டு போகும்போது!! சாரி இந்த ஏரியால ஆட்டோ இல்ல அதான் லிப்ட் கேட்டேனு அவ சொல்ல, இது என்னோட லக்னு நான் நினைச்சுட்டே பரவாயில்லைங்க அப்படின்னு ஒரு சீன் போட்டுட்டு அவள ட்ராப் பண்ண, தேங்க்ஸ் சொல்லிட்டு அவ போக வச்ச கண்ணு வாங்காம அவ ரோடு கிராஸ் பண்றவரைக்கும் அவளைப் பார்த்துவிட்டு!! அங்க இருந்து கிளம்பிட்டேன்...
நான் திரும்பி போயிட்டு இருக்கும்போது தான் ஒன்னு தோணுச்சு? பேக் மாட்டியிருந்த ஒருவேளை வேலை முடிச்சுட்டு திரும்பி வருவாளே, அப்போ நாம அங்க இருக்க வேண்டாமான்னு தோணுச்சு... உடனே அவளை இறக்கி விட்ட இடத்துக்கு...