...

8 views

இதென்ன புதுசா இல்ல இருக்கு
எனது மகள் படிப்பது மும்பையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில். சில காரணங்களுக்காக மகள் படிக்கும் கல்லூரியின் பெயரை சொல்லவில்லை.

மன்னிக்கவும்.

நான் தற்போது வசிப்பது ஜெர்மனியின் ஹம்பர்க் நகரத்தில். இங்கு ஒரு நிறுவனத்தில் மேலாளராக உள்ளேன். இந்த விஷயத்தை நான் இதுவரை யாருக்கும்சொன்னதில்லை.

ஜெர்மனியின் இரண்டாவது பெரிய நகரம் ஹம்பர்க். இந்த மாதம் பயங்கர குளிர். கடுமையான பனிப்பொழிவு வேறு.



என்னோட டிரைவர் வழக்கமாக தினமும் காலை 8: 55 க்கு எல்லாம் வந்து விடுவார். இன்று மணி 9: 15 ஆன பிறகும் ஆள் வரவில்லை. கேட்டால் திமிராக பேசுவான். ஏரோபிளேன் டிரைவர் என்ற திமிர். கன்கார்ட் பிளேன் ஓட்டினாலே திமிர் வந்துரும் போல. கன்கார்ட் பிளைன் தான் இப்போதைக்கு வேகமாக போகும் ஏரோபிளேன் என்று பெருமை வேறு. அதுவும் அவரை பைலட் என்று தான் கூப்பிட வேண்டுமாம்.

வண்டியை துடைத்து சுத்தபடுத்தி, பெட்ரோல் போட்டு 9: 30 மணிக்கு கிளம்பினால் தான் 20 நிமிடத்தில் ஹம்பர்க் நகரத்தில் இருந்து மும்பை சென்றடைய முடியும். அப்ப தான் எனது மகளுக்கு 10 மணிக்கு வகுப்பில் இருக்க முடியும்.

வடிவேல் சார் சொன்ன மாதிரி, "இத சொன்னா நம்மள பைத்தியக்காரன்" என்று தான் சொல்லுவாங்க.

திடீர்னு டிஜிட்டல் வாட்ச் அலாரம் அடித்தது. இன்று எனது மனைவியின் பிறந்தநாள் என்று கூறியது. காலண்டர்ல தேதியை பார்த்தால் 04.04.3070 னு காட்டுது. பயந்திட்டேன். பிறந்தநாள் பரிசு வேற வாங்க போணும்.

இப்ப நான் டைம் டிராவல் பண்ணி 3070 ல இருக்கேன்னு சொன்னா நம்பவா போறீங்க?

- அப்துல் ஹலீம்
© Dr. Abdul Halim