நண்பனின் கதை
இந்த திருநேலி தமிழும்,மதுரதமிழிம் தான்..
எந்த ஒரு உணர்வையும் பதியும் போது ஒரு அழுத்தத்தோடயும், பேசும் போது அதே உணர்வை 3 டைமன்சன்ல காட்ற அற்புதம் கொண்டவை..
சேது .. சொல்லுவான் .. ங்கோ..த்தா
வத்தகொழம்பு அடிச்சான் பாரு ஸ்கொயர்ல ஒரு சிகஸு... அவன் சொன்ன வத்தகொழம்பு , ஶ்ரீகாந்து , அந்த 6 வாசீம் அக்ரத்த அடிச்சது..
செந்திலுக்கு எந்த ராஜா இசையும்ம Spbபாட்டும்..ங்கொம்மா..ங்கொத்தா.. தான்..
இந்த திருநேலி ஸலாங்கோட வர்ர.. தாயோலி.. செத்தமூதீ.. சவம் எல்லாம் அவங்க கூட பொறந்த வார்ததைக..
நல்ல பாராட்டுக்கு.. கெட்ட வார்த்தை..
சாபத்துக்கு “நசமத்து போவ...”
நாசமற்று போறதாம்.. என்ன ஒரு நேசம் பாருங்க எதிராளிட்ட..
இந்த ஆர்தர்ஹலிய சொல்லி கேள்வி பட்டு இருக்கேன்.. ஏர்போர்டுக்கு மொத.. மொத போற ஆளு ஆர்தரோட ஏர்போர்ட் நாவல படிச்சுட்டு போன போதும்பாங்க.. அந்த நாவலே எங்க செக்இன், போர்டிங் பாஸ், எல்லா விவரத்ததையும் சொல்லிரும்.. அது போல இந்த திருநேலி சைவபிள்ள மக்கா.. பாளயங்கோட்டை டையசிஸ்ஸ சேரந்த கிருத்துவ நண்பர்கள் கிடைச்சுட்டா..
கொக்கிரகுளம், முருகன்குறிச்சி மாலை உணவகம், லாலா கடை, சுத்த மல்லி, நெல்லையப்பர் கோயில்,டவுண், லயன் பஸ் ஸர்வீஸ், மாஞ்சோலை எஸ்டேட்டு, இன்னும் பல.. எல்லாத்தையும் நம்மளே ஆண்டு அனுபவிச்ச மாதிரி அனுபவத்தை கொடுத்துருவாங்கே..
இந்த பாட்ட பத்தின சுகாவோட பதிவு கூட அப்படித்தான்.. ஒரு ரவுண்டு அடிச்சுவுட்டாபுல..ல...
அது அப்படித்தான் போல.. சர்சு..காதல், மதம் கடந்த காதல் கதைனாலே.. தெக்கே தான்.. போன முறை அஸ்வின் கூட கொலசேகரம் திருழாக்கு போட்டோஷூட் போய்டடு திரும்பையில அந்த முட்டம் சர்சசை பாத்தேன்.. அந்த உசந்த படிக்கட்ட பாக்கையில.. கார்தியும், ராதாவும் வாராக்குல தான்.. தெரிஞ்சது..
சரி இங்க பாட்டுக்கு வருவோம்..
இப்ப வரைக்கும் அந்த பட நடிகை பல்லவிய பாக்கையில்லாம் கன்னியாஸ்திரி பல்லவி தான், ஞாவகத்துக்கு வருது..
இந்த பாட்ட கேட்டதல இருந்து படத்த பாத்திர கூடாதுங்கிறதுல கவனமா இருந்தேன்.. 16,17 வயசுல எந்த மெல்லிய இசையும் உள்ள ஏதோ செய்யர குரளி என்னனு விளங்காத காலம்.. சித்ரா யாருனே தெரியாது அப்பொல்லாம்.. மியூசிக், பாட்டு ,மேல நல்ல பிடிப்புக்கு காரணம் அப்பா தான்.. ஏதோ அவரோட மாச சம்பளத்திலயும் நானும் அவரும் பஜார்ல வர்ர சோனி, பானசோனிக் ஜப்பான் செட்டுகள, 6 மாதமொருமுறை மாத்திட்டே இருப்போம்.... என்ன பிரயோசனம் போன டிசம்பர்ல அவர் போற வரைக்கும்... நான் பாடுறேனு அவருக்கு தெரியாது..
அப்படி ஒரு சோனி செட்டுல தான் இந்த பாட்டு எங்க வீட்டுல பிரசவமாச்சு.. மேல பொன்னகரம் , கல்கோயிலுக்கு பின்னாடி உள்ள .. ஹெலன் ஆடியோ ரெக்கார்டிங் கடையில ரெக்கார்டு செஞ்சு வாங்கிவந்தது, அந்த ஒனர் பிரிட்டோ ஸ்கூல் வாத்தியாரு, ரொம்ப நாள் நானும் செந்தியும் தான்ன கடையில இருப்போம்.,அப்படி காஸட்டுல பதிஞ்ச பாட்டுதான் இது...
ஏன் இந்த பாட்ட படமா பாத்துற கூடாதுனு நெனச்சேன்னா..
மனசுக்குள்ள கொரளி காட்டுற இம்சையான இந்த பாட்டு டெபனட்டா ஏதோ சரச்சுகுள்ளயோ, வெளியிலயோ.. இல்ல உள்ள அந்த
பெரிய சிலுவைக்கு முன்னே உள்ள ஆல்டர்கிட்டயோ.. ஒரு நன் பாடுற மாதிரி ஒரு முறை ஒரு ஹாப் கற்பனையிலயே.. பாக்ககூடாது இந்த பாட்டனு முடிவு பன்னிட்டேன்..
எவ்வளவு ஏக்கமான, தேவைய இறஞ்சுற பாட்ட, ஏசாமிட்ட வேண்டுதல பாடுறமாதிறி பாக்கறத.. மனசு ஏத்துக்கல..
ஆனா...விதி...
அப்போ வீடியோ காஸட்ட வாடகைக்கு எடுக்குற கடையில வாங்குன ஒலியும்,ஒளியும் காஸட்டுல மொத பாட்டு இது தான்.. ராஜாவும் சித்ராவும் கடல் , கரை, வய வரப்புனு கூட்டிதான் போனாக.. காமரா என்ன ஏமாத்தல.. அகண்டு குறுகிய சர்ச்சு, உசராமான தூண்க, உள்ள பெரிய மரசிலுவ, முன்ன அல்டர் அது முன்னே கரக்டா கதாநாயகி பாடுறா.. இந்த பாட்ட.. நல்ல வேளயா ரொம்ப தடவ இந்த பாட்ட ஆடியோ காஸட்டுலயே கேட்டுட்டதாயே அந்த பாட்டு காட்சி, ஏதோ ஸ்கூல் ஆனுவல்டேல பன்ன ஆக்டு மாதிரி தான் இருந்துச்சு...அந்த படத்துல பாதிரிய வர்ர ராம்குமார் பாடுற மொத பாட்டுக்கு பதிலா.. டைட்டில் சாங்காஇருந்துருக்கலாமோ.. என இந்த பாட்டு அந்த படத்துல வர்ரதுக்கான காரணம் சொல்லிட்டே இருந்து.. ஒரு கட்டத்துல “மரத்தை மறைத்தது மாமரயானை”.
ரொம்ப பெரிய சாய்ஸல்லாம் இல்லில அப்பொல்லாம்.. பொழுது போக.. புத்தகம், திரைப்படம்.. தவிர.. முத்துகாமிக்ஸ், தாண்டி.. அம்புலிமாமா கடந்து, ஓரிரண்டு பாலகுமாரனயும், ஏழெட்டு ராஜே,ராஜ.. குமார்களயும் கடந்து கொண்டிருந்த காலம்.. பெண் காதலை சொல்லுறத.. கண்விரிச்சு கண்ட.. இல்ல கேட்ட காலம்.. பெண் காதலுக்கு ஏங்குறதை அதிசயிச்ச காலம்.. அப்படித்தான் படிச்சிருந்தேன்.ஆம்புள புள்ள பயந்து பயந்து காதல சொல்லுவான்... பொம்பள்புள்ள .. ரொம்ப நாள் கழிச்சு இரக்கப்பட்டு ஓகே.. சொல்லுவானு...
அந்த வரிகள்ள உள்ள சுய பச்சாதாபம், பாகுபாடற்ற காதல் உணர்வு.. காமமற்றஇணைதலுக்கான நியாயம் கோரும் வாதம்.. ஓடி போய் அந்த புள்ளய பிடிச்சு மார்ல போட்டு தலய கோதனும்னு தான் ஆதங்கம் இருந்துச்சு..அவ கேவல நிறுத்தி ..பர.. பர.. என அந்த மர உறிய மாத்தி.. முத்து கொண்டை போட்டு..பவளமும் பட்டுமுடுத்தி”மைத்துனன் நம்பி மதுசூதன்..” பாட்டுக்கு நாயகியாக்கனும்னு தோனுச்சு.. சட்டுனு.. வேணாம் ..நமக்கும் இருக்குற காரணமற்றஏக்கங்களுக்கு இப்ப இருக்கிற ஒரே சப்போர்ட்டு... இது தான்.. இருந்துட்டு போகட்டும்னு..
இது போல ஓரு நியர் எக்ஸ்பீரியன்ஸ்னா.. “ ஊரெல்லாம் சாமியாக பார்ககும் உன்னை.. ஒரு பெண் தான் என்று நீயும் எண்ணலாமே..”பாட்டுத்தான்..
அந்த பாட்டுலயும் அந்த புள்ள கேக்கா பாத்துகிடுங்க...
“ஊரில் உள்ள பேருக்கெல்லாம் வாக்குச்சொன்ன பாவை
உன்னிடத்தில் கேட்டு நின்றாள் வார்த்தை ஒன்று தேவை
என்னை தெய்வம் என்றால் எந்தன் வாக்கும் தெய்வ வாக்குதான்
தெய்வ வாக்கை ஏற்றுக் கொண்டு
வாழ்கை ஒன்றை நீ கொடு...”
பாயிண்டல்ல .. லே..பிடிக்கா.. !!!
ஆக நம்ம பயலுவலும் லேசுபட்ட பயலுவ இல்ல லே.. இல்ல..
ஒரு இரண்டு மணி நேரம் எந்த சலிப்புமில்லாம இந்த பதிவ போட காரணம்.. எங்கப்பா,சோமா, சுகா, ராஜா, சோனி ஆடியோ பிளயர், வி.பி. சதுக்கம் முதல் தெரு, செந்தி, ஐபோன் நோட்ஸ்..