...

3 views

ஆ சைக்குள்ளே கோபம்
மனோ ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்து பல்லாவரம் இல்லத்திலிருந்து தாம்பரம் தெற்கு பகுதியில் உள்ள ஏரோநாட்டிகல் தனியார் கம்பெனியில் தற்காலிக வேலை செய்து வருகிறான், மனோ இன்ஜினியரிங் மட்டும் அல்ல புதிய நவீன ஆராய்ச்சி (ரிசாட்ச்னிங் சையன்டிஸ்ட்) விஞ்ஞானி கூட இதற்காக உலக அறிவியல் முன்னோட்டங்களில் நாட்டம் உடையவன், மனோ வின் தாய் தந்தையர் நிரந்தர வேலை அதிக ஊதியம் என்று பொய் சொல்லி திருமண ஏற்பாட்டு க்கு பெண் பார்க்க நிர்ணயம் செய்தனர்.
சாரோ என்னும் சாரோஜினி சீனியர் மேனஜராக இந்தியன் பாங்க் தலைமை அலுவலகத்தில் (சென்னை பீச் ஸ்ஷேசன் அருகில்) லட்சம் ரூபாய் மேல் ஊதியம், இவர்களுக்கு திருமண சந்திப்பு நிகழ யுள்ளது. மாப்பிள்ளை மனோ வீட்டார், மணப்பெண் சாரோஜினி வீட்டில் பெண் பார்க்கும் நிகழ்வு முடிந்த வுடன், மனோ சாரோ சிறிதளவு நேரிடை சந்திப்பு பிறகு விடை பெற்றனர், இரண்டு நாட்கள் கழித்து சாரோ மனோ வின் போன் நம்பர்யை கண்டறிந்து மனோ க்கு போன் செய்தாள். மனோகர் க்கு சந்தோஷமாக இருந்தாலும் பொய் சொல்லி இருக்கிறார்கள் என்று தர்மசங்கடமாய் பேச துவங்கினான் மனோ ஏதோ காற்றில் மிதந்து சென்றதது போல் ஏசி குளுமை விட அதிக மண குளிர்ச்சி யில் ஆழ்ந்து இருந்தான் பிறகு நேரம் போவது தெரிய வில்லை மனோ சாரோ பேச்சுக்கள் முடித்து கொண்டனர்.
மனோ முன்னெச்சரிக்கை யாக உண்மை நிலமையை நேரில் சந்தித்து சொல்லி விடவேண்டும் என்று எண்ணினான். அதற்காக எம் ஜி ஆர் நினைவகம் சமாதி அருகாமையில் மெரினா கடற்கரையில் சந்தித்து மனோ தனது தற்காலிக வேலை மற்றும் குறைந்த ஊதியம் பற்றியும் நேரிடையாக சாரோ யிடம் கூறிவிட்டான், சில நிமிடங்கள் மௌனம் நிலவியது, அச்சமயத்தில் மனோ மனசுக்குள் உண்மை கூறி விட்டோம் என்று நிம்மதி யுடன் இருந்தான், சாரோ வெரி குட் ட்டாங்ஸ் ப் ஃபார் யூவர் ரீயல் சின்ஸியார்ட்டி என்று சொல்லி சாரோ வின் முகம் சற்று சுளித்து இருந்தது மனோ மேற்கொண்டு பேச பயமாய் இருந்தது இருந்தாலும் பேச துவங்கினான்,
என்னுடைய சம்பளம் குறைவாக இருந்தாலும் நீங்கள் குறைந்த பட்சம் ஐந்து ஆண்டுகள் வரை நீங்கள் .... நான் உங்களிடம் வாழ முடியும் என்ற நம்பிக்கையில் இதனை சொன்னேன் என்று சொல்லுகையில் சாரோ ஏதோ காதில் வாங்காத வாறு புறப்பட்டு காரில் ஏறி சென்று விட்டாள். மனோ க்கு தர்மசங்கடமாய் இருந்தது,
மனோ சாரோ க்கு போன் செய்தான், அதில் நான் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் லே ப்ராஜெக்ட் செய்து வாரேன் அதிலே என்னலே ஜெயிக்க முடியும், அது கோடி கணக்கான முதலீடுகள் சம்பந்தப்பட்டது, மினிமம் ப்ஃவ் யுயர்ஸ் ஆகும் என்று சொல்ல சாரோ சற்றென்று அப்போ ஜாப் செய்ய மாட்டாடிங்க ப்ராஜெக்ட் தான் செய்யவீங்க என்று கேட்க, மனோ ஆமாம் சொல்ல சாரோ போன் கட் செய்து விட்டாள், பல முறை போன் செய்து பார்த்தான் சாரோ அட்டன்ட் பன்ன வில்லை, வாட்ஸ்அப் மூலம் சில விவரங்களை விவரித்தான், சாரோ கண்டுகொள்ள வில்லை, ரிப்பேல கூட இல்லை, மனோ என்னவோ அவள் மீது ஆதீக காதல் கொண்டு இருந்தான் ஆனால் அவளோ ப்ரெஸ்டீஜ் மையமாக கொண்டு இருந்தாள், அதாவது தனக்கு நிகராக ஆண் மணமகன் வரவேண்டும் என்று சாரோயின் எதிர்பார்ப்பு தவறு இல்லை, இந்த சமூகம் அப்படி தான் பயணிக்கிறது.
மனோ சில நாட்கள் கழித்து சாரோ க்கு மேஸேஜ்ஸ் வாட்ஸ்அப் அனுப்பிய வண்ணம் இருந்தான், சாரோ முதலில் பிடித்து இருந்தாலும் பிறகு மாதங்கள் கழித்து போலிஸ் யில் புகார் செய்தாள், போலிஸார் மனோ வை வர வைத்து எச்சரிக்கை செய்து மன்னிப்பு கடிதம் கை யெழுத்து பெற்றுக்கொண்டு மற்றும் ஜெயிலுக்கு செல்ல நேரிடும் என்று சொல்லி அனுப்பி வைத்தனர், மனோ க்கு சில வாரங்களுக்கு சரிவர உணவு சாப்பிட மறந்துயிருந்தான் சாப்பாடு பிடிப்பதே இல்லை, தின தோறும் யூ டியூப் யில் செய்திகளில் காமன்ஸ் குட் மார்னிங் யேன வைத்து திருந்தான் அதற்கு லைக் வந்துயிருந்தது சாரோ தான் லைக் செய்து இருப்பாள் என்று நம்பினான், உண்மையில் சாரோ தான் செய்து இருந்தாள்.
அவளின் நினைவில் தனது ப்ராட்ஜெக்ட் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றான் பூவிருந்தவல்லி அருகே குன் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்தில் தன் ப்ராட்ஜெக்ட் ரெக்கார்ட்ஸ் அளித்து அந்த நிறுவனத்தின் சார்பில் குட்டி குட்டி ட்ரோன்ஸ் தயாரித்து மார்கெட்டிங் வருகிறது, சிறிய கேமரா சூட்டிங் உபயோக்கிப்படுகிறது, அதனை அடுத்து சில கூடுதல் டெக்னாலஜி உபயோகித்து பெரிய ட்ரோன்ஸ் தயாரிக்கின்றனர் விற்பனையும் நன்றாக இருக்கிறது,
இந்திய அரசின் டி ஆர் டி ஒ கழகம் சார்பில் ஹிந்துதான் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் தனியார் நிறுவனம் மனோ யை வர வைத்து பல தரப்பட்ட ட்ரோன்ஸ் வரையறைகள் கேட்க, மனோ எனும் மனோகர் தனது ப்ராஜெக்ட் ரெக்கார்ட்ஸ் களை நிறுவனம் யிடம் சமர்ப்பிக்கிறேன், மனோ வின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அந்த நிறுவனம் துணை நிற்கிறது, உலக அரங்கில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு பேர்டன் ரைட்ஸ் உரிமம் பெற்று தருகிறது,
இந்திய ராணுவத்திற் க்கு தேவையான ட்ரோன்ஸ், புதிய நவீன ஹெலிகாப்டர் தயாரிக்க மனோ உலக அளவில் புத்தகங்கள், தொழிற் நுட்பங்கள் ஆர்டிபிஷல் இன்டிலிஜன்ட் மற்றும் ஆல்கௌரிஜம் கற்று தேர்ச்சி அடைகிறான், பிறகு உலக தர வாய்ந்த ட்ரோன்ஸ் அனைத்தும் ரிவாஸ் ஸ்டேடி தீவிரமாய் ஈடுபட்டு புதிய வகை ட்ரோன்ஸ் யை தயாரித்து ராணுவத்துக்கு அளிக்கின்றார், மனோ வை ஹிந்துதான் நிறுவனம் மேன்மேலும் ஊக்குவிக்கிறது, அதனை அடுத்து நவீன வகை ஹெலிகாப்டர் தயாரிக்க மனோ திட்டம் இடுகிறார், உலகிலுள்ள யுஎஸ் ரஷ்யா ப்ஃரான்ஸ் சீனா நாடுகளின் போட்டியாக புதிய டெக்னாலஜி யை உள் புகுத்தி புதிய வடிவமைப்பு ஹெலிகாப்டர் வரையறைகளுடன் நிருப்பிக்கிறான்.
மனோ புகழ்ந்து பாராட்டி பாதுகாப்பு அமைச்சகம் விருதுகள் வழங்கப்படுகின்றன, இந்த செய்திகள், டிவி பேப்பர் மற்றும் யூ டியூப் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஹிந்து தான் நிறுவனம் கோடி ரூபாய் செக், தனி வீடு, கார் வழங்கப்பட்டது.
யூடியூப் செய்தி துணுக்கு செய்திகளுக்கு காமன்ஸ் தின தோறும் தொடர் கதையாக மனோ காமன்ஸ் வைப்பதும் சாரோ அதற்கு லைக் வைப்பதும் தொடர்ந்து கொண்டு இருந்தது.
மனோ தனது பல்லாவரம் இல்லத்திலிருந்து சாரோ க்கு போன் செய்கின்றான், மறுமுனையில் சாரோ படு குஷியாக ஏதும் அறியாத பூனை போல் அப்படி யா வாருங்கள் சார், சந்தித்து பேசுவோம் சார், சார் சார் பணிவோடு இதமாக வாருங்கள் சார் என்றால், சந்திக்கும் நாள் அதே அண்ணா சதுக்கம் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வின் நினைவகத்தின் அருகில் மெரினா கடற்கரையில் சந்தித்தனர்,
இயல்பாக இருவரும் தம் தம் நிலை பாடுகள் பகிர்ந்த பிறகு சிரித்து கொண்டனர், மனோ சற்றுயென்று ஏன் என்னை ஏற்க மாறுத்தாய் என்றும் போலிஸ் புகார் செய்தய்யே நியாயமா என்று கேட்க, சாரோ மன்னித்து விடுங்கள் நான் கொஞ்சம் அவசர காரி, புகழ் யும் பெருமை எதிர்பார்த்தேன் சாரோ கண்ணீர் துளிகளோடு சொல்ல முடியாமல் சொல்லி கொண்டு இருந்தாள், மனோ ஏற்றுக் கொண்டு இருந்தால் இருவருக்கும் பெருமை அல்லவா என்று கேட்க, சாரோ க்கு கோபம் வந்தது சற்று கோபத்துடன் நீ இப்படி முன்னேற்றம் அடைவாய் எனக்கு எப்படி தெரியும் எப்படி நம்புவது, ஒருவர்க்கு ஒருவர் சிறு கோபங்களுடன் காரசாரமாக பேசவே சாரோ க்கு பயம் வந்தது எங்கே மறுப்பு சொல்லுவானோ என்று கண்ணீர் விட்டு இருந்தாள், மனோ கண்ணீர் தோடைங்க நாளை சந்திப்போம் என்று புறப்படும் சமயத்தில் சாரோ க்கு வந்தது கோபம் வலது கை நீட்டி ஆட்டிக் கொண்டு எதுக்காட வர சொன்னே நாளைக்கு வாரேன் சொல்லறே மரியாதை இல்லை உனக்கு இன்னிக்கு இப்பாவே சொல்லு என்று சட்டையை காலரை பிடித்து கொண்டாள், நாலு பக்கம் ஜனங்கள் பார்க்க மானோ பயந்து விட்டான், சாரோ சாரோ விடு என்று கேட்க, விடுவதுதாக இல்லை, மனோ மேடம் மேடம் கேட்க ஜனங்கள் பார்த்து கொண்டு செல்லக் கின்றனர், மனோ சாரோ விடம் எனக்கு எவ்வளவு மனவலி இருந்து யிருக்கும் என்று சொல்லி சாரோ நான் உன்னை யை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றவுடன் சாரோ வின் அழுத முகம் தாமரை பூ போல மலர்ந்து பூ சிரிப்பு சிரித்தது அது மட்டும் அல்லாமல் சட்டையை காலரை பிடித்த கை, கைகள் ஒன்று சேர்த்து வணங்கி வாறு மனோ வின் மார்பில் சாய்ந்தது அவளின் முகமும் கை மேல் சாய்ந்தது மனோ இலகுவாக அணைத்து கொண்டான், அவ்வயமே விலகி கொண்டு இருவரும் ஒன்று சேர்ந்து அண்ணா சதுக்கத்தில் எம்ஜிஆர் சமாதி யில் நடக்க துவங்கினர், எதிரேயுள்ள சென்னை பல்கலைக்கழகம் போல் அவர்களின் வாழ்வும் பல்கலைக்கழகம்...
-முற்றும்-





© G.V.KALASRIYANAND