...

0 views

உன்னோடு நான் இருப்பேன்
அத்தியாயம்-6

பெண் கேட்க சென்றார் விஷ்வா

ப்ரியாவின் வீட்டை அடைந்த விஷ்வா... கதவில் நின்றபடியே அழைப்பு மணியை அழுத்த கதவை திறந்தார் மோகன்....

விஷ்வாவை கண்டதும் கட்டி அணைத்து கொண்டவர்... ஏய் விஷ்வா எப்படிப்பா இருக்க?

அவரும் கட்டி தழுவியபடி... நல்லா இருக்க மோகா என்றார்...

கரம் பற்றி உள்ளே அழைத்து சென்றபடி, உட்காரு விஷ்வா என்று அறையை பார்த்தவர்... ஜானு யார் வந்துருக்காங்கனு பாரு என்று மனைவியை அழைத்து விட்டு அவரும் அமர்ந்தபடி...

உடம்புக்கு எப்படி இருக்கு எப்படி இருக்கு விஷ்வா?

ம்ம்... ஏதோ இருக்கு மோகா... உயிரோட இருக்க...

என்னப்பா இப்படி சொல்ற....

என்னங்க கூப்டிங்களா? என்றபடி ஜானகி அறையில் இருந்து வந்தவர் விஷ்வாவை பார்த்ததும்...

அண்ணா வணக்கம் எப்ப வந்தீங்க?என்றார் மலர்ந்த முகத்துடன்....

இப்பதான்ம்மா வந்த என்று வாங்கி வந்த இனிப்பு பழங்களை நீட்ட...

என்ன அண்ணா இதெல்லாம் எதுக்கு?

அட வாங்கிக்கம்மா என்று விஷ்வா சொல்ல... ஜானகியும் மறுக்க முடியாமல் வாங்கி கொண்டார்...

ஜானு விஷ்வாக்கு குடிக்க எதாச்சு கொண்டு வாயே...

சரிங்க என்று ஜானகி கூற...

ஐயோ அதெல்லாம் வேணாம்மா... நான் இப்பதான் சாப்டுட்டு வந்த என்று மறுத்தார் விஷ்வா...

என்ன அண்ணா நீங்க வீட்டுக்கு வந்துட்டு எதும் சாப்டலனா எப்படி? இருங்க நான் வர என்று கிச்சனில் புகுந்து விட... இங்கு இருவரும் பேசி கொண்டு இருந்தனர்...

சில நிமிடங்களில் ஜானகி ஜூஸ் எடுத்து வந்தவர் இருவருக்கும் கொடுத்து விட்டு நிற்க...

தங்கச்சி உக்காரும்மா உங்க இரண்டுபேர் கிட்டையும் கொஞ்சம் பேசனும் என்று விஷ்வா கூற....

இருவரும் ஒருவர் ஒருவரை பார்த்து கொண்டனர்... பின்பு ஜானகியும் மோகன் அருகில் அமர... என்ன விஷ்வா என்ன விஷயம் என்றார் மோகன்...

அது வந்து மோகா... எனக்கு ஒரு பய்யன் இருக்கானு சொல்லி இருந்தேனா...

ஆமா...

அவனுக்கு நம்ம ப்ரியாவ பொண்ணு கேட்டு வந்துறுக்க...

அங்கு சில நிமிடம் மௌனமே நிகழ்ந்தது...

விஷ்வாவே பேச தொடங்கினார்...

எனக்கு ஒரே பய்யன்... சொந்தமா Business பண்றான்... ப்ரியாவுக்கும் கல்யாண வயசு ஆகிறுச்சு... வேற யாருக்கோ கொடுக்குறத விட உன் பொண்ண என் பய்யனுக்கு கொடேன்... விஷ்வா பட்டென கேட்டு விட

மோகனும் ஜானகியும் ஒருவர் ஒருவரை பார்த்தபடி இருந்தனர்... இருவருக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை....

இப்போதும் விஷ்வாவே தொடர்ந்தபடி... ப்ரியா வேற யாராயாச்சு...எனும்போதே இடையிட்ட ஜானகி...

தெரியல அண்ணா... நாங்களாவும் கேட்டது இல்ல அவளாவும் சொன்னது இல்ல....

இதுல என்ன இருக்கு... கேட்டுட்டு சொல்லுங்க என்று விஷ்வா கூலாக சொல்ல... மோகன் மட்டும் ஏதோ சிந்தனையில் இருந்தார் அதை கண்ட விஷ்வா...

என்ன மோகா... என்ன யோசிக்கிற? எதுவா இருந்தாலும் வெளிபடையா சொல்லு நான் தப்பா எடுத்துக்க மாட்ட....

அது வந்து விஷ்வா....

என்னப்பா சொல்லு...

நான் உன்க்கிட்ட பணம் வாங்குன கடனாளி... எப்படி ப்ரியாவ?

டேய் என்னடா கடனாளி அது இதுனுட்டு... நான் ஒன்னும் அந்த பணத்த உனக்கு கடனா கொடுக்கலயே மோக... இன்னிக்கு நான் உயிரோட இருக்கன்னா அதுக்கு நீதான்ப்பா காரணம்... டெல்லில எனக்கு ஹார்ட் அட்டாக் வந்தப்ப நீ என்னை சரியான சமயத்துல ஹாஸ்ப்பிடல் சேக்காம போயிருந்தா இன்னிக்கி நான் உன் முன்னாடி உக்காந்து என் பய்யனோட கல்யாணத்தை பத்தி பேசிட்டு இருந்துறுக்க மாட்ட.... நீ பண்ணுன உதவிக்கு முன்னாடி இந்த பணமெல்லாம் ஒரு பொருட்டே இல்லடா...

அப்போ நான் பண்ணுன உதவிய பணத்தோட கூட்டி கழிக்கிறியா விஷ்வா? மோகன் உடைந்த குரலில் கேட்க...

ஐயோ நான் அப்படி சொல்லல மோகா...இந்த வாழ்க்கை நீ எனக்கு கொடுத்தது... உனக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாதுப்பா.. ஆனால் பாரேன் இப்ப கூட நான் கேக்குற இடத்துலதான் இருக்க நீதான் ப்ரியாவ கொடுக்க தயங்குற...

மோகன் இப்போது அமைதி காக்க...

பொறுமையை இழந்த விஷ்வா... சரி இப்ப என்னதான்டா சொல்ல வர...

பணத்தை கொடுக்காம பொண்ண கொடுக்க என்னமோ சரினு படல விஷ்வா...

சரி அப்ப பணத்தை திருப்பி கொடு...

ஒரு ரூபாயா? இரெண்டு ரூபாயா? 25 லட்சம் இப்ப என்கிட்ட இல்ல விஷ்வா...

உஷ்.... என்னடா உன்னோட ரோதனையா போச்சு... இங்க பார் மோகா எனக்கு அந்த பணம் வேண்டவே வேண்டா... ஏதோ நீ சங்கட படுறியேனு கொடுக்க சொன்ன... நான் பணம் கொடுத்தது உன் ஃப்ரெண்டா... இப்ப பொண்ணு கேக்குறது என் மகனோட அப்பாவா... இதுக்கும் அதுக்கும் எந்த சம்மதந்தமும் இல்ல... உனக்கு எப்ப முடியுமோ அப்ப திருப்பி கொடு போதுமா...

மோகன் ஜானகியை கேள்வி குறியாய் பார்க்க... கண்களை இமைத்து சம்மதத்தை அளித்தார் ஜானகி...

மோகனும் சிறு புன்னகையுடன் விஷ்வாவை பார்த்தபடி சரி என்று தலை அசைத்தார்...

இந்த பணம்தான் மகளின் திருமண வாழ்வில் மணகசப்பை ஏற்படுத்தும் என்று அறியாதவர் சம்மதித்து விட்டார் பாவம்...

நம்ம மட்டும் பேசுனா போதுமா விஷ்வா?

நீயே சொல்லு எப்ப வரனும்னு பய்யன கூட்டிட்டு வர...

அது அண்ணா ப்ரியாவ ஒரு தடவ கேட்டுட்டு என்று ஜானகி சங்கடமாக கூற...

தாராளமா கேளுமா... நீங்க எப்ப சொல்றீங்களோ அப்பவே வரோம் ம்... சரிம்மா அப்ப நான் கிளம்புற விஷ்வா புறபட நிற்க...

என்ன அண்ணா அதுக்குள்ள கிளம்பிட்டிங்க? கேசரி பண்ணிருக்க சாப்டுட்டுதான் போகனும் என்று சொல்லி விட்டு ஜானகி சமையல் அறைக்குள் நுழைந்து விட...

விஷ்வாவை பார்த்த மோகன்... பய்யனோட ஃபோடோ எதாச்சு கொண்டு வரலயா விஷ்வா? என்று கேட்க...

டேய் அவன் என் பய்யன் நல்லாதான் இருப்பான்... என்று நக்கலாக கூற

நீ மட்டும் எங்க பொண்ண பாத்தா போதுமா? நாங்களும் உன் பய்யன பாக்க வேணாமா?...

அதெல்லாம் நீ பாத்துறுக்க என்று மனதிலே சொல்லி கொண்டவர்... சீக்கிரமா கூப்டு... கூட்டிட்டு வர... அப்பறம் எவ்வளவு வேணும்னாலும் பாத்துக்க என்று சொல்ல...

ம்க்கூம் என்று முகத்தை திருப்பி கொண்டார் மோகன்...

ஜானகியும் கேசரி எடுத்து வர
கொஞ்சம் சாப்பிட்டு விட்டு தன் வீடு திரும்பினார் விஷ்வா...

💕💕💕💕💕

இரவு உணவிற்காக ஆதி மேஜையில் வந்து அமர... விஜயா உணவை பறிமாறி கொண்டிருந்தார்...

இவன்கிட்ட எப்படி பொண்ணு கேட்டு போண விஷயத்தை சொல்றது என்று விஜயா யோசித்து கொண்டிருக்க அதற்கு எடுத்து கொடுப்பது போலவே...

அம்மா கேசரி ரொம்ப சூப்பரா இருக்கு.... இன்னும் கொஞ்சம் வைங்களே ஆதி கூற...

இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்தவர் அது நான் பண்ணல ஆதி அப்பாவோட ஃப்ரேண்ட் வீட்ல இருந்து அனுப்பிருந்தாங்க...

ஃப்ரெண்ட் வீட்ல இருந்தா?

ம்ம்... உன் கல்யாணத்தை பத்திதான் பேச போயிருந்தாறு அந்த பொண்ணோட அம்மாதான் அனுப்பி வெச்சாங்க என்று சொன்னதும்... ஆதியின் முகமே மாறி விட்டது...

அதை கண்ட விஜயா... அவன் தோழில் கை வைத்தபடி... ஆதி அப்பா ரொம்ப பிடிவாதமா இருக்காறுனுதன இந்த கல்யாணத்துக்கு சம்திச்ச?

ஆதி ஒன்றும் பேசவில்லை...

அம்மா மேல கோபமா ஆதி? விஜயா கண்கள் கலங்க கேட்க...

எனக்கு யார் மேலையும் கோபம் இல்லம்மா... என் வாழ்க்கையே கேள்வி குறியா நிக்குது நான் யாருக்கு என்னனு பதில் சொல்றது? விடுங்கம்மா என்று எழுந்து செல்ல பார்க்க...

அவன் கரத்தை பற்றிய விஜயா... ஆதி என்னடா பேசுற? எங்க ஆசையெல்லாம் நீ சந்தோஷமா இருக்கனும்றது தான்டா..

என் சந்தோஷத்த பத்தி மட்டும் யோசிக்கிறீங்களே என்னனு தெரியாமலே வற்ற போற பொண்ணு அவள பத்தி ஏன்ம்மா யோசிக்க மாட்டின்றீங்க? ஆதி கேட்க

விஜயாவிடம் எந்த பதிலும் இல்லை... அவரிம் இருந்து தன் கரத்தை பிரித்தவன் தன் அறையை நோக்கி சென்றுவிட... செல்லும் அவனையே கண் இமைக்காது பார்த்தார் விஜயா...

என்ன இவன் இப்படி சொல்லிட்டு போறான்... இப்ப இவன் வாழ்க்கை என்ன கேள்வி கூறியா மாறிடுச்சு... கல்யாணம் ஆனதுக்கு அப்பறமும் ப்ரியாவ ஏத்துக்கலனா அந்த பொண்ணோட வாழ்க்கையே வீணா போயிருமே...

முதல்ல ப்ரியாவோட மனசுல இவன் இருக்கானா இல்லையானு தெரிஞ்சுக்கனும் என்று உறுதி படுத்தி கொண்டார்...

💕💕💕💕💕

இங்கு அதே நேரம் ப்ரியாவின் வீட்டில்... அனைவரும் உணவை முடித்து விட்டு ஹாலில் அமர்ந்திருக்க... ப்ரியாவிடம் பேச சொல்லி கண்களாலே ஜாடை காட்டினார் ஜானகி...

இரு பேசுற என்று அவரும் ஜாடையிலே சொல்லியபடி ப்ரியா என்று அழைத்தார்...

மொபைலில் கவனம் செலுத்தியபடியே சொல்லுங்கப்பா என்றாள் ப்ரியாவும்...

அவர் மௌனம் காக்க...

புரியாமல் பார்த்தவள்... என்னப்பா கூப்டுட்டு ஒன்னுமே சொல்லாம இருக்கீங்க?

அது வந்தும்மா... இன்னிக்கு விஷ்வா வீட்டுக்கு வந்துறுந்தா...

ஓ... அதுக்கு ஏன் அப்படி இழுக்குறீங்க?

அதுல்ல ப்ரியா... அவனோட பய்யனுக்கு உன்னை என்று நிறுத்த...

அவர் பய்யனுக்கு என்னப்பா?

ஜானகி இடையிட்டபடி அதுதான் பாதிய சொல்லிட்டிங்கல்ல அப்பறம் என்ன மீதியையும் சொல்லுங்க என்க...

அம்மா என்ன விஷயம் நேரடியா சொல்லுங்க...

அவர் பய்யனுக்கு உன்னை பொண்ணு கேட்டு வந்துறுக்காறு ப்ரியா என்றதும் மோகனை பார்த்தாள் ப்ரியா...

அவர் பேசாமல் அமர்ந்திருக்க...

அப்பா நீங்க என்ன சொன்னீங்க? என்று கேட்க

அவர் என்னடி சொல்லுவாறு? உன்கிட்ட பேசிட்டு கூப்டலாம்னு சொல்லி அனுப்பிருக்கோம்...

சரி அப்ப வர வேண்டானு சொல்லிருங்க...

ஏன் வேணானு சொல்லனும்? விஷ்வா அண்ணாவும் நல்ல பழக்கம்,வசதியான குடும்பம்,பய்யனுக்கும் சொந்த தொழில் இருக்கு இதுக்கு மேல என்னடி வேணும்? ஜானகி அதட்டலாக கேட்க...

அம்மா நீ சொல்றதெல்லாம் இருக்குனு என்னால சரினு சொல்ல முடியாது ... என்று மோகனை பார்த்தவள்... அப்பா எனக்கு இப்ப கல்யாணத்துக்கு என்ன அவசரம்? எனும்போதே இடையிட்டார் ஜானகி...

24 வயசாகுது இப்ப கல்யாணம் பண்ணிக்காம எப்படி பண்ணிக்குவ?

அம்மா நான் உங்கிட்ட பேசல... நீ உன் வேலைய மட்டும் பாரு.. என்று கூற...

அதில் கோபமான ஜானகி அடிங்கு யார பாத்துடி வேலைய பாருனு சொன்ன.. என்று அதட்ட

ஜானகி நீ உள்ள போ என்று மோகன் சொல்ல...

இல்லங்க என்று ஏதோ சொல்ல வந்தவரை முறைத்த மோகன்... உன்னை நான் உள்ள போனு சொன்ன ஜானகி என்று அழுத்தமா கூற... ஜானகியும் அமைதியாக சென்று விட்டார்...

ப்ரியா இங்கவா என்று அழைக்க அவளும் எழுந்து மோகனின் அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்...

புன்னகையோடு தலையை வருடி கொடுத்தவர்... இப்ப எதுக்கு இவ்வளவு கோவம்? ம்.... உனக்கு அப்பாவ பத்தி தெரியாதாம்மா... இந்த வீட்ல சின்ன பொருளா இருந்தா கூட உன்ன கேட்காம வாங்க மாட்டோம் இது உன் கல்யாண விஷயம் உன் இஷ்டம் இல்லாம நடக்குமா ப்ரியா?

விஷ்வா என்னோட ஃப்ரெண்டுன்ற உரிமையில வந்து பொண்ணு கேட்டான் அவ்வளவுதான்... உன் சம்மதம் இல்லாம நான் அவன பொண்ணு பாக்க கூட கூப்ட மாட்ட... அதனால நீ என்கிட்ட சொல்லும்மா.. உனக்கு யாரயாச்சு பிடிச்சுருக்கா ப்ரியா? மோகன் பட்டென கேட்டு விட... ப்ரியதான் என்ன சொல்வது என்று புரியாமல் இருந்தாள்....

அவளும் என்ன என்று சொல்வாள் பாவம்... ஆம் என்று சொன்னால் யார் என்று கேட்பார்... என்ன சொல்வது அவனுக்கே தெரியாது என்று சொல்வதா? இல்லை என்று சொன்னால் பிறகு ஏன் திருமணம் வேண்டாம் என்று சொல்கிறாய் ? என்று கேட்பார்... ஐயோ கடவுளே என்னதான் சொல்வது மனதில் கதறி கொண்டிருக்க...

அவளின் இத்தகைய மௌனத்தை கண்ட விஷ்வா... என்னம்மா ஒன்னும் சொல்ல மாட்டின்ற... எதுவா இருந்தாலும் சொல்லுடா... உன் இஷ்டம்தான் எங்க இஷ்டம்... என்று கூற

என்ன சொல்வது என்று புரியாமல் முழித்தவள்... அப்பா எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ் என்றாள்...இப்போதைக்கு தப்பிக்க வழி தேடியபடி

தாராளமா எடுத்துக்கோ ப்ரியா... உன் இஷ்டம்டா என்றதும்...

அப்பாடா என்று இருந்தது ப்ரியாவுக்கு... தேங்க்யூப்பா என்று கூற

சரிடா இப்ப போய் தூங்கு நாளைக்கு ஆஃபிஸ்க்கு போகனுமில்ல என்க...

ம்ப்பா...குட்நைட் என்று சொல்லி விட்டு அறைக்குள் நுழைந்தாள்....

கட்டிலில் படுத்தவளுக்கு தூக்கம்தான் வருமா என்ன? கடவுளே என்ன கொடுமை இது காதலிக்கிறவகிட்ட காதலையும் சொல்ல முடியல... காதலிக்கிறனு வீட்லயும் சொல்ல முடியல... ச்சே என்னதான் பண்றதோ... வாய்விட்டே புலம்பினாள் ப்ரியா...

ஏய் ப்ரியா ஒழுங்க ஆதிகிட்ட லவ்வ சொல்ற வழிய பாருடி இல்ல வேற எவனயாச்சு கட்டிகிட்டு வாழ்க்கை பூர அழதான் போற அவள் மனம் எச்சரிக்க...

அப்படி எதுவும் நடக்காது... நாளைக்கு எப்படியாச்சு ஆதிகிட்ட பேசியே ஆகனும்... ம் வேற வழியே இல்ல... என்ன நடந்தாலும் சரி ஆதிய ப்ரபோஸ் பண்ணியே தீருவ என்று உறுதி செய்து கொண்டவள்... மறுநாள் ஆதியின் கேபினில் நின்றிருந்தாள்....

💕💕💕💕💕

அத்தியாயம்-7

ப்ரியாவின் தீர்கமான முடிவு

ஆதி ஃபைலை பார்த்தபடி கேபினில் அமர்ந்திருக்க... எக்ஸ் கியூஸ் மி சார் என்ற விஜயாவின் குரல் கேட்டு நிமிர்ந்தான்...

லன்ச் கேரியரோடு உள்ளே வந்தவரை பார்த்து புன்னகைத்தவன்... உங்களுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை? கதிர் கிட்ட கொடுத்து அனுப்பிருக்கலாமே என்று கேட்க

என் பய்யனுக்கு நான் சாப்பாடு எடுத்து வர உனக்கு என்னடா வந்தது? ஒழுங்கா கை கழுவிட்டு சாப்ட வா என்று அதட்டி விட்டு அங்கிருந்த சின்ன உணவு அறைக்குள் நுழைந்தார் விஜயா...

அவன் இன்னும் எழாமல் இருக்க... ஆதி சீக்கிரம் வாடா என்று கத்த... கம்மிங்ம்மா என்றவன் ஃபைலை மூடிவிட்டு உள்ளே சென்றான்...

விஜயாவும் உணவை பரிமாற... அம்மா மட்டன் பிரியாணியா? வாசம் தூக்குதே என்று கண்கள் மின்ன சொல்ல...

சாப்டுடா உனக்கு பிடிக்கும்னுதான் கொண்டு வந்த என்று கூற...

உணவை சாப்பிட தொடங்கினான் ஆதி... மகன் உணவு உண்ணும் அழகை ரசித்தபடியே அமர்ந்த விஜயா...

ஆதி ப்ரியா எங்க? என்று கேட்க...

எங்கன்னா? அவங்க வர்க் ஸ்டேஷன்ல இருப்பாங்கம்மா...

அவளுக்கும் சாப்பாடு எடுத்துட்ட வந்துருக்க... கூப்டே சாப்டட்டும்...என்க

கடிகாரத்தை பார்த்தவன்... இன்னும் பத்து நிமிஷம் இருக்கும்மா... அப்ப கூப்டுற எல்லாரும் வேலை செய்யும்போது அவங்கள மட்டும் கூப்டா நல்லா இருக்காது என்றவன் மொபைலை எடுத்து லன்ச் ப்ரேக்கில் உள்ளே வருமாறு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு உணவில் கவனம் செலுத்தினான்...

மொபைலை எடுத்து பார்த்தவளுக்குதான் பயம்,வெட்கம்,கவலை என எல்லாம் போட்டி போட்டு கொண்டிருந்தது...

நானே போகனும்னு இருந்த அவரே கூப்டுறாரே... ப்ரியா இந்த சான்ஸ மிஸ் பண்ணிடாதடி பட்டுனு மனசுல இருக்குறத போட்டு உடைச்சுறு என்று லன்ச் பிரேகிற்காக காத்திருந்தாள்... சில நிமிடங்களில் உள்ளே வந்தவள் சார் கூப்டீங்களா? என்க

ம்ம் சாப்டிங்களா ப்ரியா? என்று கேட்க...

இல்ல சார் இனிமேல்தான் என்றவளின் குரலும் உடலும் நடுங்க... பெரும் மூச்சை இழுத்து விட்டபடி தன்னை நிலை படுத்தி கொண்டிர்ந்தாள்...

உங்களுக்காக லன்ச் அங்க இருக்கு ப்ரியா போய் சாப்டுங்க என்று ஆதி சொல்ல அதெல்லாம் அவள் காதில் விழுந்தாள்தானே... ஏதோ யோசனையில் இருந்தாள்...

அதை பாரத்தவன்... ப்ரியா என்ற அதட்டல் குரலில் அழைக்க... திடுக்கிட்டு பாரத்தவள் எஸ் சார் என்றாள்...

என்ன நீங்க எப்ப பாத்தாலும் எதோ யோசனையில இருக்கீங்க? எதாச்சு ப்ராப்ளமா ப்ரியா?

சார் அது வந்து... என்று இழுத்தவளுக்கு வாயில் இருந்து வாரத்தைதகன் வருவேனா என்றது... எப்படியும் சொல்லி விடு என்று மனம் எச்சரிக்கை கொடுத்து கொண்டே இருக்க...

கடைசியாக தயிரியத்தை வர வைத்தவள்... சார் உங்ககூட கொஞ்சம் பேசனும் என்றாள்...

இது உள்ளே இருக்கும் விஜயாவின் காதிலும் விழ... அப்படி என்ன பேச போறா என்றபடி கேட்டுபடி அமர்ந்திருந்தார்...

ம் சொல்லுங்க ப்ரியா என்று ஆதி கூற... எப்படி ஆரம்பிப்பது என்று விழித்தவள்... அது அது என்று வார்த்தைகளை எண்ண ஆரம்பிக்க...

அவளை புருவம் சுருக்கி பார்த்தவன்... என்ன ப்ரியா சொல்லூங்க என்றான்...

இதயம் படபடக்க உடல் நடுங்க வறண்ட தொண்டையில் எச்சிலை விழுங்கியவள்... அது வந்து சார் நான் என்று நிறுத்த...

இங்கே அறையில் உள்ள விஜயாவுக்குதான் இதய துடிப்பே நின்றுவிடும் போல இருந்தது... இவள் தயங்குவதை பார்த்தால் காதலிக்கும் விஷயத்தை சொல்ல போகிறாளா?... இருக்கலாம் காலையில் இவள் வீட்டில் பேசியபோது ப்ரியா கொஞ்சம் டைம் கேட்டிருக்கிறாள் என்று மோகன் அண்ணன் சொன்னார்... அது ஆதியிடம் பேசுவதாற்காக கூட இருக்கலாமே... ஐயோ இவனே இப்போதுதான் ஏதோ சம்மதம் சொல்லி இருக்கிறான்... அதற்குள் இவள் கெடுத்து விடுவாள் போலவே என்று நினைத்தவர்... என்ன செய்யலாம் என்று யோசித்தபடி அமர்ந்திருக்க...

இங்கே ப்ரியா தயிரியத்தை வரவைத்து சொல்ல போனாள்...

சார் நான் உங்கள என்று சொல்லும்போதே... ஹேய் ப்ரியா என்று அழைத்தபடி வந்தார் விஜயா... ஒரு நிமிடம் அவள் பேச்சே நின்றுவிட்டது... இவங்க இவ்வளவு நேரம் இங்கதான் இருக்காங்களா? நல்ல வேளை எதும் சொல்லல என்று பெரும்மூச்சை இழுத்து விட்டவள்...

ஹலோ ஆன்டி என்றாள் வரவழைக்க பட்ட புன்னகையோடு...

ஹலோ ப்ரியா என்று அவள் கரத்தை பற்றிய விஜயா... சாப்ட்ற நேரத்துல இவன்கிட்ட என்ன பேச்சு வா உள்ளே போலம் என்று அழைத்து சென்றுவிட்டார்...

உணவை பரிமாறி கொடுத்தவர் சாப்டு ப்ரியா என்று கூற...

ம் என்றவள் அமைதியாக சாப்பிட ஆரம்பித்தாள்... உணவை ஏனோ தானோ என்று அவள் உண்ண... இவள் மனதில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ள நினைத்த விஜயா மெதுவாக பேச ஆரம்பித்தார்...

என்ன ப்ரியா சாப்பாடு நல்லா இல்லையா?

அதெல்லாம் இல்ல ஆன்டி நல்லா இருக்கு என்று புன்னகைக்க...

இல்லனாலும் அட்ஜஸ் பண்ணிக்க... இன்னும் கொஞ்ச நாள்லயே உனக்கு கல்யாண சாப்பாடு போடுற என்றார்...

அவரை புரியாமல் பார்த்தவள் யாரோட கல்யாணம் ஆன்டி?

வேற யாரு உன் எம்.டியோட கல்யாணம்தான்... என்று சொல்ல ப்ரியாவுக்கு உலகமே நின்று விட்டது போல இருந்தது...

அவள் முக மாற்றத்தை உணர்ந்த விஜயா அதோடு நிறுத்தாமல் மேலும் பேச தொடங்கினார்...

ஆஃபிஸ்லயே உனக்குதான் முதல்ல சொல்ற... அப்பா அம்மாவ கூட்டிட்டு கண்டிப்பா வரனும் சரியா என்று சொன்னபடி அவளை பார்த்து கொண்டே இருக்க...

அவள் கண்களில் நீர் இப்பவோ அப்பவோ என விழ தயாராக இருந்தது... குனிந்த தலை நிமிராமல் அமர்ந்திருக்க எங்கு தன்னை மீறி அழுது விடுவமோ என்று நினைத்தவள் " எனக்கு போதும் ஆன்டி" என்று கூறி விட்டு அங்கிருந்து எழுந்து வாஷ் ரூமிற்கு சென்று விட்டாள்...

அவளது உடைந்த குரலே சொன்னதே அவள் ஆதியை எந்த அளவு நேசிக்கிறாள் என்று... ப்ரியாவை அழ வைக்க வேண்டும் என்பது என்னவோ விஜயாவின் எண்ணம் இல்லைதான் ஆனால் பெண் பார்க்க செல்லும் வரை ஆதியிடம் இருந்து ப்ரியாவை விலகி வைக்க வேண்டும் என்றே அவர் அப்படி செய்தார்...

ப்ரியாவும் ஆதியை விரும்புகிறாள் என்று தெரிந்ததும் அவருக்கு அளவில்லா சந்தோஷமும் இருந்தது அதே நேரம் அவளை அழ வைத்தும் கஷ்டமாகவும் இருந்தது...

வாஷ்ரூமுக்குள் நுழைந்தவள் தன் கண்ணீரை கட்டு படுத்த முடியாமல் வாயை பொத்தி அழ தொடங்கி இருந்தாள்... பின்பு தன்னை ஒருவிதமாக நிலை படுத்தியவள்... முகத்தை கழுவி விட்டு இயல்பாக வெளியேற

அவளை பார்த்த விஜயாவிற்கு தெரிந்து விட்டது இவள் அழுதிருக்கிறாள் என்று... எல்லாம் நல்லதிற்கே என்று நினைத்தவர் ஒன்றும் தெரியாதவர் போல ஆதியோடு பேசியபடி அமர்ந்திருக்க....

ஆதியின் முன்னே சென்று நின்றவள் தலை கவிழ்ந்தபடியே... சார் எனக்கு ஹாஃப்டே லீவ் வேணும்... டாக்டர்கிட்ட அபாய்ட்மென்ட் இருக்கு என்று கேட்க...

ஓகே ப்ரியா போங்க என்றான்...

அவளும் அங்கிருந்து நகர... ப்ரியா என்று அழைத்தான் ஆதி...

அவள் தன் நடையை மட்டும் நிறுத்திவள் திரும்பியும் பாராமல் நிற்க...

என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னிங்க என்ன விஷயம்? என்று கேட்டதும்

விஜயாவின் மனமோ அடித்து கொள்ள ஆரம்பித்து... ஐயோ அவளே பேசாம போனாலும் இவன் விட மாட்டிங்கிறானே... என்று மனதில் புலிம்பியபடி இருக்க...

ப்ரியாவோ... Nothing important sir என்று சொன்னவள் வேகமாக அங்கிருந்து வெளியேறினாள்...

அப்பாடா என்று இருந்தது விஜயாவிற்கு... ஆதியை பார்க்க அவன் ப்ரியா சென்றதை பார்த்து கொண்டு இருப்பதை கண்டதும்... ம்க்கூம் என்று செருமியவர்...

நான் வந்த வேலை முடிஞ்சுது...இனி சார் உங்க வேலைய பாருங்க என்று நக்கலாக சொல்லி விட்டு வெளியேறினார் விஜயா...

💕💕💕💕💕

டாக்டரை பார்க்க செல்ல வேண்டும் என்று பொய் சொல்லி விட்டு நேராக வீட்டிற்கு வந்திருந்தாள் ப்ரியா...

மோகனும் ஜானகியும் ஹாலில் அமர்ந்திருக்க அவர்களையும் பாராமல் வேகமாக அறைக்குள் நுழைந்து கதவை தாழிட....

இவளுக்கு என்ன ஆச்சு என்று ஜானகி சொல்ல...

தெரியல ஜானு முகமே ஒரு மாதிரி இருக்கு... என்று பதறினார் மோகன்...

ஜானகி எழுந்து கதவை தட்ட போக அவர் கரம் பற்றிய மோகன் இரு அவளே திறக்கட்டும் என்று தடுக்க ஜானகியும் அமைதியாக அமர்நது விட்டார்...

உள்ளே நுழைந்தவள் ஓடி வந்து கட்டிலில் படுத்து கொண்டு கதற ஆரம்பித்திருந்தாள்... ஏன் ஆதி ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்றீங்க? என் காதல சொல்ல வரும் ஒவ்வொரு தடவையும் என் மனச சுக்கு நூற உடைச்சுரீங்களே...நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்ட ஆதி... உங்கள காதலிச்சு காத்திருந்தது அவ்வளவு பெரிய தப்பா என்று விம்பி விம்பி அழுது கொண்டிருந்தாள்...

அந்த தனி அறையில் யார் அவளுக்கு பதில் சொல்வார்கள்?

பாவம் பெண் முடிந்தவரை அழுதவள் அப்படியே உறங்கியும் போனாள்...

மதியம் வந்து அறைக்குள் நுழைந்தவள் மாலை ஆகியும் வெளியே வரவில்லை... மோகன் ஹாலில் அமர்ந்தபடி அறை கதவையே பார்த்து கொண்டிருக்க மாலை விளக்கை ஏற்றி விட்டு வந்த ஜானகி"இப்படியே இங்க உக்காந்து பாக்குறத விட கதவை தட்டி என்னனு கேட்கலாமில்ல ...

ம்ச் அவள பத்தி உனக்கு தெரியாதா ஜானு? கட்டாய படுத்தி கேட்டா எதுவுமே சொல்ல மாட்டா அவளா வரட்டும் இரு என்று மோகன் கூற அமைதியாக அமர்ந்து விட்டார் ஜானகியும்

சில நிமிடங்களில் கதவு திறக்கும் சத்தம் கேட்க...

ம்ம் மேடம் வராங்க என்று ஜானகி கூற... அவரை ஏகத்திற்கும் முறைத்த மோகன்..."நீ கொஞ்சம் பேசாம இருக்கியா... வந்ததும் ஆரம்பிக்காத போய் காஃபி எடுத்துட்ட வா போ என்று அதட்டலாக சொல்ல...

ம்க்கூம் என்று உதட்டை சுழித்தவர் எழுந்து கிச்சனுக்குள் சென்று விட்டார்..

ப்ரியாவும் அமைதியாக வந்து அமர...

என்ன ப்ரியாம்மா ஆஃபிஸ்ல இருந்து சீக்கிரம் வந்துட்ட? முகமே ஒருமாதிரி இருக்கு மோகன் கேட்க

ம்ம்ப்பா கொஞ்சம் தலைவலி அதுதான் என்று சொல்ல...

இப்ப எப்படி இருக்கு?

பரவால்லப்பா என்றாள்...

சொன்ன பதிலுக்கும் அவள் முகத்திற்கும் சம்மந்தமே இல்லாமல் இருந்தது... அதை மோகனும் உணர்ந்திருந்தார்... இருந்து அவளாக ஏதேனும் சொல்வாள் என்று அமைதியாக இருக்க... ஜானகியும் காஃபியை ப்ரியாவிடம் நீட்ட அவளும் அதை வாங்கி குடித்தாள்...

பின்பு அங்கு அமைதியே நிகழ்ந்தது... கொஞ்ச நேரத்தில் உணவு உண்ண அப்போதும் ப்ரியா ஒரு வார்த்தை கூட பேசவில்லை... ஜானகியும் மோகனும் ஒருவர் ஒருவரை பார்த்து கண்களாலே பேசி கொண்டு இருந்தனர்... எப்போதும் கலகலவென பேசுபவள் இன்று இப்படி மௌனம் காக்க ஏனோ இருவருக்கும் பயமாக இருந்தது...

உணவை முடித்துவிட்டு ப்ரியா மீண்டும் அறைக்குள் நுழைந்து விட..ஜானகி கிச்சனில் இருந்தார்... அவர் அருகே வந்த மோகன் " ஜானு நீ இன்னிக்கு ப்ரியா கூடவே படுத்துக்கோ... அவ முகமே சரி இல்லை... என்கிட்டையும் எதும் சொல்லல உன்கிட்ட எதாச்சு சொல்றாளா பாரு... என்க...

சரிங்க நான் பாத்துக்குற என்று ஜானகி சொல்ல...

ம்ம்... ஆனா கொஞ்சம் பொறுமையா பேசு சரியா

ம் சரிங்க... என்று வேலைகளை முடித்து விட்டு ப்ரியாவின் அறைக்குள் நுழைந்தார்...

கட்டிலில் சென்று அமர்ந்தபடி "ப்ரியா நான் இன்னிக்கு உன் கூடவே படுத்துக்கவா? என்று கேட்க...

படுத்திருந்தபடியே திரும்பி பார்த்தவள் "ஏன் உன் புருஷன்கூட சண்டை போட்டுட்டு வந்துட்டியா?

இல்லயே...

அப்பறம் என்ன புதுசா பொண்ணுமேல அவ்வளவு அக்கரை வந்துறுச்சு? ப்ரியா முறைத்து கொண்டே கேட்க...

லேசாக புன்னகைத்தவர்... அவள் தலையை வருடியபடி"புதுசா இல்லடி எனக்கு எப்பவும் என் பொண்ணுமேல அக்கரை இருக்கு ஜானகி இளகிய குரலில் கூற...

ஜானகியின் மடியில் படுத்து கொண்டாள் ப்ரியா... மென்மையாக தலை வருடி கொடுத்தபடி இருக்க... சில நிமிடம் கடந்ததும் ப்ரியாவின் கண்ணத்தில் ஜானகியின் கண்ணீர் துளி விழுந்தது.

ஜானகியை நிமிர்ந்து பார்த்தவள் அவர் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்ததும் அடித்து பிடித்து எழுந்தபடி "அம்மா ஏன் அழற என்று கேட்க...

ஒன்னும் இல்ல என்று கண்களை துடைத்து கொண்டார் ஜானகி...

ம்ச்... இப்ப சொல்ல போறீங்களா இல்லையா? ப்ரியா அதட்டலுடன் கேட்க...

ஆஃபிஸ் போயிட்டு வந்ததுல இருந்து என் கூடையும் அப்பா கூடையும் ஏன் பேசல? அதுதான் என்று மீண்டும் கண்கள் கலங்க...

அப்போதூதான் அவளுக்கு தான் கவலையில் பேசாமல் இருந்ததே உறைத்தது... தன்னையே நொந்து கொண்டவள்... ஜானகியின் கண்ணகளை துடைத்து விட்டபடி... "ஐயோ அம்மா தலைவலியா இருந்தது அதனாலதான் வந்ததும் தூங்கிட்ட...

பொய் சொல்லாத ப்ரியா... வந்ததுல இருந்து ஒரு வார்த்தைகூட பேசல... என்கூட சண்டை போடல...என்னை ஜானு னு கூப்டல.... அப்பாகிட்டயாச்சு பேசிறுக்கலாமில்ல அவர் எவ்வளவு ஃபீல் பண்றாரு தெரியமா?

என்னாச்சு ப்ரியா? எதாச்சு பிரச்சனையா? என்கிட்ட சொல்ல கூடாதா? ஜானகி பாவமாக கேட்க

லேசாக புன்னகைத்தவள்... ஜானகியின் கண்ணத்தை கிள்ளியபடி "எனக்கு ஒன்னும் இல்ல ஜானு... ஆஃபீஸ்ல தலை வலி தாங்க முடியல... அதுதான் நீயாச்சு உன் வேலையாச்சுனு ஹாஃப்டே லீவ் போட்டுட்டு வந்துட்ட... எனக்கு என்ன பிரச்சனை இருக்க போகுது அப்படி இருந்தாலும் நீயும் அப்பாவும் இருக்கீங்களே அப்பறம் என்ன என்று ஜானகியை கட்டி அணைத்து கொள்ள...

தலைவலி இப்ப எப்படி இருக்கு ப்ரியா? என்றார்

இப்ப பரவால்லம்மா... தூங்கி எழுந்ததும் சரி ஆகிடுச்சு... ப்ரியா தன் கவலையை மறைத்து பொய்யாய் கூற

அவளை தன்னிடம் இருந்து பிரித்து அவளை கூர்ந்து பார்த்த ஜானகி... நிஜமாதன? பிரச்சனை எதும் இல்லயே?

நிஜமாம்மா எந்த பிரச்சனையும் இல்ல என்று புன்னகைக்க

அவரும் புன்னகைத்தபடி... இப்படி பேசாமல்லாம் இருக்காத ப்ரியா... நானும் அப்பாவும் எவ்வளவு பயந்துட்டோம் தெரியுமா? முஞ்சையும் இஞ்சு திண்ண குரங்கு மாதிரி வெச்சுகிட்டு நல்லாவே இல்ல ஜானகி கடுப்பாக கூற...

என்ன பண்றது ஜானு என் மூஞ்சே அப்படிதான்... என்னை எல்லாரும் அம்மா மாதிரனு சொல்லுவாங்க... ப்ரியா குறும்பாக சொல்ல...

அடிப்பாவி என்னையே குரங்குன்றியா? உன்னை என்று அடிக்க போக...

சாரி சாரி என்று ஜானகியின் கரத்தை பற்றி சிரித்தாள் ப்ரியா... அவள் சிரிக்கும் அழகை பார்த்த ஜானகி அவள் முகத்தை வாரி திருஷ்டி கழித்தபடி"என் கண்ணு எப்பவும் இப்படியே சிரிச்சுட்டே இருக்கனும் என்று கூற

அமைதியாக அவர் மடியிலே முகம் முதைத்து கொண்டாள் ப்ரியா"மனசுல இருக்குறத உங்ககிட்ட மறச்சதுக்காக சாரிம்மா...நானே அதை மறக்கனும்னு நினைக்கிற... இத்தனை வருஷமா காத்து இருந்தும் அவர் எனக்கு கிடைக்கலனா அவர் எனக்கானவர் கிடையாது... இனி நான் என் மனச ஒருபோதும் தளர விடமாட்ட இனி உங்க இஷ்டம்தான் என் இஷ்டம்...

அவளின் முடிவு மிகவும் தீர்கமாகவே இருந்தது....

உன்னோடு நான் இருப்பேன்❤️

© All Rights Reserved