...

6 views

பாம்பே டூ அமெரிக்கா


கேரள தமிழக எல்லையில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தின் தமிழும் மலையாளமும் கலந்த பாஷையில் ஒரு கதை. 


எனக்க மொவ பாம்பேல ஒரு காளேஜில படிக்கியா கேட்டியளா.   மொவளுக்க பேரு என்னா?   பள்ளிகொடத்துக்க பேரு என்னா?    எண்ணு ஒண்ணும்   கேக்காதுங்கா.   சொல்ல மாட்டைன்.   வெறுத்தி கெட்ட பயலுவளுக்க ஏதூல நமக்கு  கெடக்க பொறுதி இல்ல.


              எனக்க கதைய செல்லியங் கேக்கிதியளா?

நான் இப்பம்  இந்த ஜெர்மனி  இருக்கில்லா.  அங்க தான் இருக்கியன்.   இஞ்ச தணுப்பெண்ணு சென்னா அப்பிடி ஒரு தணுப்பு.   நான் இஞ்ச இருக்கிய எடத்துக்க பேரு ஹம்பர்க்கெண்ணு செல்லுவினும்.

             நான் இஞ்ச ஒரு டிரைவர் பயல வேலக்கி வெச்சிருக்கயங் கேட்டியளா?     ஓ.. பயலுக்க தலக்கனமெண்ணு சொன்னா அப்பிடி ஒரு தலக்கனம்.    அவரு ஏரோ பிளைன் ஓட்டியாரில்லா ... அந்த தலக்கனம்.   இவுனுக்கு ஒண்ணாந்தேதியான ரூவா எண்ணிகுடிக்கியது நானாக்கும்.   ரெண்டு நாளு சம்பளம் பிந்தினா,  பயன் இந்த பேப்பட்டி போல தான் நிப்பாய்ன்.             நான் அப்பளே சொன்னைன்.  பயலுக்கு இந்த கன்கார்ட் ஏரோபிளேன் ஓட்டியாண்ணு ஒள்ள தலக்கனம்.   எண்ணும் காலத்த எட்டே முக்காலுக்கு வாற பயல இத்தற சமயமான பெறவும் காணேல.   காலத்த ஒம்பதரைச்சு பெறப்பட்டா தான் பாம்பேல சமயத்துக்கு பெய் சேர முடியும் எனக்க மொவளுக்கு.   பயல வண்டிய தொடச்சி பறக்கி வெச்ச சென்னாலும் கேக்க மாட்டான்.

                       எனக்க ஒரு மருமொவன் வாங்கி தந்த சாதனத்தில மணி அடிச்சிது .   அது டிஜிட்டெல்  வாச்செண்ணோ என்ன எளவெண்ணோ சென்னாய்ன்.      

இண்ணு எனக்க பெண்டாடிக்க பெறந்த நாளு கேட்டியளா? 

    செரி இந்த டிரைவறு பயன் வரட்டு. மொவள பாம்பேயில விட்டிட்டு அமேரிகாயில பெய் ஒரு  கெலிகாப்டர் வாங்கி குடுக்கணும்.  பெறந்த நாளுக்கு இத கூட வாங்கி குடுக்கல்லேண்ணா பின்ன ஒரு மாசம் தள்ளக்க வீட்டுக்கு போறண்ணு சொல்லி பெயிருவா...   பாம்பேயிலந்து அமேரிக்கச்சி அர மணிக்கூர்ல பெயிர்லாமாம். ஆளுவ செல்லியாவ.    
       அடுத்த ஆள்ச்ச  எனக்கு மெக்ஸிகோயில ஒரு கூட்டம் இருக்கு. இண்ணச்சி தேதி 4.4.3070 ஆயாச்சி.

                     இத சென்னா நம்மள கிறுக்கனெண்ணு செல்லுவினும்.   நான் இஞ்ச டைம் டிராவல் பண்ணி தான் 3070 ல வந்திருக்கியண்ணு சொன்னாலும் நீங்க நம்ப மாட்டியா.

- அப்துல் ஹலீம்


© Dr. Abdul Halim