...

19 views

மனிதி - அத்தியாயம்: 01
செவ்விதழ்கள் எனக்கு, சிவந்த கண்ணங்கள் எனக்கு. உதிரத்தால் நனைந்திருப்பதாலோ என்னவோ!

நான் நினைத்தும் பார்த்திராத வலியொன்றில் நிறைந்திருக்கிறேன்.உயிர்போகும் முன்னமே இதோ பிணந்தின்னி கழுகுகளுக்குள்ளும் சண்டை
என் உடலை பங்குபோட.

வாழவேண்டுமா என தீர்மானிப்பதற்குள் அடுத்த இறையாக்கப்பட காத்திருந்த குழந்தை தென்பட்டாள்.
காப்பாற்ற அசயமுடியவில்லை. அந்த நொடி முடிவெடுத்தேன்.

மறுமுறை பிறக்க வேண்டும். பழிதீர்க்க அல்ல, பொறுப்பேற்க்க.
நான் ஒரு பெண். என்னை சிதைத்த இவர்களது தாயாக, மகளாக, தங்கையாக, தோழியாக நான் என் வீட்டில் விதைக்கும் சிந்தனைகளால் இவர்களை இந்த சமூகமாக நானும் உருவாக்குகிறேன். மிக ஆழமாய் விதைப்பேன்:

பெண்ணை உயிராய் பார்க்க, தோலைத்தாண்டிய அவளது மனதை மதிக்க! என் வயிற்றில் எனக்கு முன் இறந்திருக்கும் பிறக்காத என் மகனுக்காற்றும் கடனை இவர்களுக்காகவும்
நானே ஏற்கிறேன்.

அவர்கள் வந்தனர், புன்னகைத்தேன்.
என் கடைசி கண்ணீர் கீழே விழும் முன்,
என் தலை தனியே விழுந்தது.
மறுமுறை நாங்கள் மூவரும் பிறப்போம், பலரின் சிந்தைகளில்.
...........

ஆயிரம் சட்டங்களுக்கு முன் அவள் வீட்டில் விதைக்கும் சிந்தைகளில் உருவெடுக்கிறது இச்சமூக விதியின் மாற்றம்!

#மனிதி

© Atchaya Jayabal