நமது வீட்டின் பல்கலைக்கழகங்கள்
தாத்தா!...பாட்டி!..
தாத்தா ஒருவரால் தான் குடும்பத்தில் எல்லோரையும் மன்னிக்க,
கண்டிக்க
ஏன்...
தண்டிக்கவும் முடியும். வானளாவிய குடும்ப அதிகாரம் படைத்திருந்த தாத்தா இப்போது எங்கே?.
வீட்டிற்கு
யாராவது புதிய ஆள் வந்தாலோ,
ஆண் குரல் கேட்டாலோ யாரு என சத்தமாக கர்ஜிக்கும் குரலில் எதிராளி சற்று ஆடித் தான் போய் விடுவார்.
தாத்தா வீட்டில் இருந்ததால் பெரும்பாலான குடும்பங்களில் ஆண்கள் மது அருந்துவதையும், புகை பிடித்தலையும் தவிர்த்தார்கள்.
லேட்டாக வீட்டிற்கு வந்தால்,
கதவை தட்டியவுடன் முதல் ஆளாய்
கதவை திறந்து
'ஏன்டா லேட்'
என மகனையும், பேரனையும் அதிகாரத்துடன்
கேட்கும் உரிமை தாத்தாவிற்கு மட்டும் தான் இருந்தது.
அந்த உரிமையை பறித்ததால் இன்று வீட்டிற்கு ஒன்றிரண்டு 'குடிமகன்கள்'முளைத்து விட்டனர்.
பாடம் சொல்லி கொடுப்பதாகட்டும், வாத்தியாரிடம் சென்று 'படிக்கலைனா நல்லா அடிங்க' என்று சொல்லிவிட்டு, ...