...

13 views

திக் திக் நொடிகள்
திக் திக் நொடிகள்

ஆசிரியர்
ப..நந்தினி M.A  


நான்கு நண்பர்கள் சுரேஷ் கணேஷ் ராஜா மற்றும் வேல். தங்களின் விடுமுறையை கழிக்க கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள விடுதியில் தங்க முடிவுசெய்து ஆயத்தமானர்.முதல் நாள்‌ சுரேஷ் வீட்டில் இருந்து கிளம்பி வேலுவுக்கு கால் செய்தான்.சுரேஷிற்கு அவசர வேலை உள்ளதாகவும் திட்டமிட்டப்படி அவனால் விடுதிக்கு வந்து சேரமுடியாது அதனால் முதலில் அவர்களை செல்லுமாறும் பின்னர் அவன் வருவதாக கூறினான்.சரி என்று வேலுவும் அவனது மற்ற நண்பர்களும் சுரேஷை விட்டு விடுதிக்கு சென்றனர்.சுரேஷ் போனை கட் செய்து வேர்த்து விருவிருக்க எதிரில் இருந்த வேலுவின் தங்கை நந்தினியிடம் தன்னை விட்டுவிடும் படி கெஞ்ச தொடங்கினான்.நந்தினியின் சிரிப்பில் அந்த இடமே அதிர தொடங்கியது.நந்தினியிடம் எதற்காக என்னை கொல்லப்போகிறாய் நான் உன் அண்ணனின் நண்பன் உனக்கும் அண்ணண் தான் என்று கெஞ்ச தொடங்கினான்.நந்தினியோ சிரிப்பை தவிர மறுவார்த்தை ஏதும் பேச வில்லை.சுரேஷ் நந்தினியிடமிருந்த தப்பிக்க முயன்று ஒட ஆரம்பித்தான்.அவனால் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியவில்லை. நந்தினி என்னை விட்டுவிடு என்று கெஞ்ச அவள் நான் நந்தினியா?? யாழினி! என்றதும் சுரேஷிற்கு அனைத்தும் நினைவிற்கு வந்தது. அவள் சிரிப்பின் ஓசை அதிகரிக்க அதிகரிக்க மரங்கள் சரிய தொடங்கியது.சுரேஷின் காதிலிருந்து இரத்தம் வடிய தன் கரங்களாலே அவனை அடித்துக்கொன்றாள் .சுரேஷை கொன்று அவன் உடலை மறைத்துவிட்டு ஒன்றும் அறியாததை போல் தன் வீட்டிற்குச் சென்று வழக்கமான சுட்டித்தனத்தோடு தன் அண்ணணிற்கு போன் செய்து பேசினால்.வேலுவும் தன் தங்கை மீது அதிக பாசம் கொண்டவன். இருவரும் சிறிது நேரம் பேசிவிட்டு வேலுவை ஒழுங்காக சாப்பிடும் படி சொல்லிவிட்டு போனை கட் செய்தாள் .தாங்கள் விடுதிக்கு வந்த விஷயத்தை சுரேஷிற்கு சொல்வதற்காக வேலு அவனுக்கு கால் செய்தான்.ஆனால் அவனுக்கு லைன் கிடைக்கவில்லை. வேலு மற்ற நண்பர்களுடன்‌சேர்ந்து குடிக்க தொடங்கினான்.நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டம் பாட்டம் என்று கொண்டாடி மகிழ்கின்றனர்.திடிரென்று ராஜாவிற்கு நந்தினியிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.அவசரமா உங்கள பாக்கனும் அண்ணாவுக்கு தெரியாமல் உங்க விடுதியில் உள்ள கார் பார்க்கிங்கில் தான் நான் இருக்கிறேன்.இருவரும் லாங் டிரைவ் போகலாம் என்று அனுப்பியிருந்தாள்.ராஜா பதிலுக்கு இப்போ எப்படி. வேலுக்கு தெரிஞ்ச என்ன ஆகும் வேண்டாம் என மறுத்தான்.ஆனால் அதெல்லாம் தெரியாது நீங்க வந்து தான் ஆகனும் வாழ்க்கைனா அதுல கொஞ்சம் ரிஸ்க் இருக்கனும் நான் கீழ தான் இருக்கேன் நீங்க வாங்க என் அண்ண குடிசிட்டு தூங்கிட்ட எழுந்துக்க மாட்டான் என்று அவனை வரவழைத்தாள். அப்போதும் ராஜா யோசிக்க சரி இந்த ராத்திரியில உங்களுக்கா வீட்டுல பொய் சொல்லிட்டு வந்தது என் தப்புதான் இனி எனக்கு கால் பண்ணாதிங்க ச்ச நாம் பிரேக் அப் பண்ணிக்கலாம் என்று மிரட்ட வேறு வழியின்றி ராஜா வர சம்மதித்தான்.யாருக்கும்...