...

1 views

புத்தகத் திருவிழா என்னும் பெருங்கனவு 📖😍
புத்தகத் திருவிழா என்னும் பெருங்கனவு...📖😍

புத்தகத் திருவிழா செல்ல வேண்டும் என்பது ஏறக்குறைய எனது ஏழெட்டு வருடக் கனவு அது நேற்று தான் சாத்தியப்பட்டது...
முதலில் வலியிலிருந்து தப்பிப்பதற்கு வழியாகவே இருந்தது எனக்கு ஆரம்பகால கல்வி...... அதன்பிறகு வெளி உலகத்தைப் பார்ப்பதற்கு எனக்கு இருக்கும் ஒரே வழி இந்தப் படிப்புதான் என்று தெரிந்த பின்னர் கல்வியை உறுதியாகப் பற்றிக் கொண்டேன்....
பள்ளியில் இப்படியான என் படிப்பு..... கல்லூரியில் படிப்பது தமிழ் என்றான பின்னர் எனது விடுதி வாழ்க்கையின் அசௌகரியங்களை எல்லாம் மறக்க வாசிக்கலானேன்..... எனக்கு வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இல்லை இல்லை உதவி கிடைத்த போதெல்லாம் நூலகம் சென்று வாசிப்பேன் இளங்கலை யில்... கல்லூரியில் தான் எனக்குத் தெரியும் ஈரோடு புத்தகத் திருவிழா.... ஒவ்வொரு ஆகஸ்ட் மாதமும் அழைத்துக் கொண்டு செல்வார்கள்...... கல்லூரியில் இருந்து....... எனது தோழிகள் புத்தகத் திருவிழா செல்லும் போதெல்லாம் இந்த இந்த புத்தகம் வாங்கி வாருங்கள் என எழுதித் தந்துவிடுவேன்.....☺️

அப்பொழுது கூட நானும் வருகிறேன் என்று சொல்ல முடிந்ததில்லை என்னால்..... அது மட்டுமின்றி கூட்ட நெரிசலில் சென்று வர முடியாது என்பதால் நான் போனதே இல்லை....
நான் இளங்கலை முதுகலை கல்லூரி முடித்ததும் ஈரோடு புத்தகத் திருவிழா வந்தால் என் அம்மாவும் தங்கையும் போய்வருவார்கள்.... ஆனாலும் என் கனவு சாத்தியப்படவில்லை...
என்னதான் இணையவழியில் புத்தகத்தைப் பெறும் வாய்ப்புகள் இருந்தாலும் புத்தகச் சங்கமத்தில்.... பல வாசிப்பு மனிதர்களை‌ சந்திப்பது போல் இருக்குமா.... கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் புத்தகத் திருவிழா போக வேண்டும் என்று ஆசைப்படுவதெல்லாம் புத்தகம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுவதும் தேவையற்றதாகவே கருதப்படுகிறது இன்னமும்....

இதையெல்லாம் தாண்டி கொஞ்சம் பெற்றோர் விழிப்புணர்வு பெற்றிருந்து சரியென்று சொன்னாலும் ஒரு மாற்றுத் திறனாளி எனும் போது அதனினும் சிரமம்.....
இது ஏதோ என் மீது எனக்கு இருக்கும் சுய பட்சாதாபத்தில் சொல்லவில்லை..... உண்மை நிலை இது தான்..... உதவிக்கு ஒரு நபர் வேண்டும் அப்படி உதவி கிடைத்தாலும் அங்கே சரியான வசதி வேண்டும்.... "அண்ணாவுக்கு மாபெரும் தமிழ்க் கனவு போல, மாற்றுத் திறனாளிகளுக்கு மாபெரும் சுதந்திரக் கனவு " ஆனால் இது எளிதில் சாத்தியமில்லை..... ஆனால் எதுவும் சாத்தியம்..... அதற்கு மக்களிடம் போதிய விழிப்புணர்வு வேண்டும்‌. இந்த உலகம், இந்த வாழ்க்கை இருக்கும் வரைக்கும் அனைவருக்கும் உரியது.....
கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டும்..... "அனைவரையும் உள்ளடக்கிய கல்வி என்பது போல் அனைவரையும் உள்ளடக்கிய உலகம்" என்று ....

இம்முறை கூட புத்தகத் திருவிழா என்றதும் நான் போகப் போவதில்லை இம்முறையும் என்றெண்ணி தோழியிடம் தான் புத்தகம் வாங்கி வரச் சொல்லிக் கொண்டு இருந்தேன்...

ஆனால் எதிர்பாராத விதமாக நூலகத்துறையில் பணிபுரியும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது எனது #மின்மினிவெளிச்சத்திலே புத்தகத்தின் வாயிலாக....😍🤩
அங்கு இருந்த சக்கர நாற்காலி சரியாக வேலை செய்யவில்லை என்றாலும் கூட வந்த ஓட்டுநர் அண்ணாவும், சித்தப்பாவும் கூடவே இருந்து உதவினார்கள்....😊 அவர்களின் அன்புக்கும் அக்கறைக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்..... எப்போதும்.....

புத்தகச் சங்கமத்தில் புதுப்புது மனிதர்களின் அறிமுகம் அவர்களின் அன்பு ...... திருப்பூர் சிறைத்துறையில் பணிபுரியும் சுமதி அக்கா.... பொன்னுலகம் புத்தக நிலையம் திருப்பூர் குணா அவர்கள் இப்படிப் பலர்..... இதில் என்ன வருத்தம் என்றால் 150 ஸ்டால்களில் ஒரு பாதி புத்தக ஸ்டால்களையே பார்க்க முடிந்தது.... இரண்டு நாள் போக முடிந்தால் நன்றாக இருந்திருக்கும்.

என் #மின்மினிவெளிச்சத்திலே மின்மினி வெளிச்சத்தால் தான் இது சாத்தியப்பட்டது....😍😍

நன்றி மின்மினி ✨ நாம் பயணிப்போம்...✨ 😊

தமிழ்நிழல் ✍🏾

#மின்மினிவெளிச்சத்திலே
#தமிழ்நிழல்
#அகரம்_தொடங்கி_அகிலம்_வரை
#20வதுபுத்தகத்திருவிழா
#திருப்பூர்